இதயத்தை தொடும் தாய்ப்பாசத்திற்கான அழகிய பொன்மொழிகள் தமிழில் இதோ....
Heart Touching Mother Quotes in Tamil-தாய்ப்பாசத்திற்கு இணையான பாசம் இந்த உலகில்வேறு எதுவும் இல்லை. தாயில்லாமல் நானில்லை, தாயே குடும்பத்தின் தெய்வம் என போற்றும் நம் கலாச்சாரத்தில் தாய் என்பவள் முக்கிய இடம் வகிக்கிறார்.
Heart Touching Mother Quotes in Tamil
அம்மா.... அம்மா... அம்மா.... இந்த மூன்றெழுத்து மந்திரத்தினை உயிருள்ள ஜீவன்கள் உச்சரிக்கும்போது மெய் சிலிர்க்கும். அதுவே வாயற்ற ஜீவன்கள் எழுப்பும் சப்தமும் அம்மா....தான். எத்தனை பொருத்தம் பாருங்க... அம்மா பாசம் இணையில்லாதது.
தாய்... இவள் சுயநலமற்றவள். தனக்காக எதையும் சேர்த்து கொள்ளாத ஜீவன்... பிள்ளைகள் புறக்கணித்தாலும் பாசம் காட்டும் உயிர். வாழ்நாள் தியாகி என்று கூட சொல்லலாம். எத்தனை கொடுமைப்படுத்தினாலும் பிள்ளைகள் மீது பரிவும் பாசமும் காட்டும் அன்பு ஜீவன் தாய்தான்.
தாய்ப்பாசத்திற்கு நிகரேது இவ்வுலகில். தாய் என்பவள் எப்போதுமே தனக்காக வாழாதவள். தன்குடும்பத்தின் மீதுள்ள பாசத்தினால் கணவனுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்தவள். வீட்டில் உள்ள அனைவரும் உணவருந்திய பின்னர்தான் பெரும்பான்மையான குடும்பங்களில் தாய் உணவருந்தியதைப் பார்க்க முடியும். அந்த வகையில் மற்றவர்களின் வயிற்று பசியை போக்கும் அன்னபூரணி தான் தாய்.
எப்போதும் விலை உயர்ந்த பொருட்களின் மீது பற்று வைக்காதவள். பிள்ளைகளின் சந்தோஷமே தனது சந்தோஷம்என விட்டுக்கொடுத்து வாழ்பவள். குடும்பத்திற்காகவே உழைக்க பிறந்தவள் போலும் எப்போதும் உழைத்துக்கொண்டேயிருக்க கூடிய தன்னிகரில்லா ஜீவன் தாய்.
தாயின் பாசத்தினை விளக்கும் அன்பு பொன்மொழிகள்.....
ஆயிரம் விடுமுறைவந்தாலும் அவள்அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லைஅம்மா சமையலறை
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை அம்மாவின் கொஞ்சலில் மட்டும் இன்னும் குழந்தையாக. வலி நிறைந்தது என்பதற்காகயாரும் விட்டுவிடுவதில்லை தாய்மை.
நான் முதல் முறைபார்த்த பெண்ணின் அழகிய முக தரிசனம் என் அம்மா.
கடல் நீரைகடன் வாங்கி என் கண் கொண்டு அழுதாலும்நான் சொல்லும் நன்றிஉனக்கு ஈடாகுமா.
தாய் மடியை காட்டிலும்ஒரு சிறந்த தலையணைஇந்த உலகில் வேறுஎதுவும் இல்லை.
வெறும் எழுத்துக்கள்ஆயின என் கவிதைகள்ஒரு சொல்லின் முன்புஅம்மா!
ஒரு உயிர்மற்றொரு உயிரை சுமப்பதுபார்ப்பவர்க்கு பாரமாக இருந்தாலும்சுமப்பவளுக்கோ அது வரம் தான்!
உன் அருகில் இருக்கும் போதேஅள்ளிக்கொள்!தொலைந்து போன பின்தேடினாலும் கிடைக்காதஅன்பின் பொக்கிஷம்."அம்மா"
மழையில் நனைந்த என்னைமுந்தானையில் அனைத்து பாசத்தோடு தலை துவட்டும் போதுஅந்த மழையும் பொறாமை
கொள்ளும் தாயே!
தன் உயிரைக் கொடுத்துமற்றொரு உயிரைக் காப்பாற்றும் ஒரே தெய்வம் அம்மா!
இழந்தவன் தேடுவதும்இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு!
*அன்று என் அழுகை சத்தம் கேட்டு சிரித்தவளே,, இன்றும் அழுகிறேன்.. சிரிப்பதற்கு நீ இல்லையென்று...
*அம்மாவின் கைக்குள் இருந்தவரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது
*ஏன், அம்மா மட்டுந்தான் நான் கண்ணால் பார்க்கும் ஒரே தெய்வம்
*வார்த்தைகளே இல்லாத வடிவம், அளவுகோலே இல்லாத அன்பு, சுயநலமே இல்லாத இதயம், வெறுப்பை காட்டாத முகம்...அம்மா
*உயிர் கொடுத்ததால் என்னவோ உயிர் உள்ள வரை நேசிக்கும் ஒரே உறவு மட்டுமே அம்மா
*ஆயிரம் முறை காயப்பட்டாலும் தன்னை ஒரு முறை கூட காயப்படுத்தாத உறவு அம்மா
*ஆடம்பரமாய் கட்டித்தந்த வீட்டை விட, உன் சேலையில் கட்டித்தந்த வீடுதான் ஆனந்தத்தை தந்தது அம்மா...
*நீ இல்லை என்றால் நானும்இல்லை ஆனால் நீ இல்லா உலகில் மட்டும் தனியாக தவிக்கவிட்டு சென்றாயே அம்மா...
*இறந்தாலும் பிள்ளைகளை நினைக்கும் இதயம் அம்மாவின் இதயம் மட்டுமே
*ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும் அன்னையே உன்னை போன்று அன்பு செய்யயாரும் இல்லை
*என் முகம் பார்க்கும் முன்பே,, என்குரல் கேட்கும் முன்பே,.என்குணம் அறியும் முன்பே, என்னை நேசித்த ஓர் இதயம்
*தாயை ஒரு போதும் கடவுளோடு ஒப்பிடாதீர்கள் ஏனென்றால் நம் கஷ்டத்தை பார்த்து ஒரு நாளும் கல்லாக இருந்ததில்லை தாய்...
*நல்லஅ ன்பு கிடைத்த யாரும் வாழ்க்கையில் தோற்றுப் போவதில்லை நானும் எப்போதும் தோற்றுப் போக மாட்டேன் நீ என்னுடன்இருக்கும் வரை
*ஓர் தாய் ஐந்து குழந்தைகளை வளர்த்துவிடுவாள்... ஆனால் 5 குழந்தைகள் ஒரு தாயை காப்பாற்றுவது கடினம்...
*ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நீ அன்னையை மட்டும் இழந்தால் 100 சதவீதம் நீ அனாதைதான்.
*ஒருதாய் தன் பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம்.. ஆனால் பெற்றதற்காக அழக்கூடாது...
*நம்மிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அம்மாவுக்கு நாம்தான் மிகப்பெரிய சொத்து.
தற்போதைய நாகரிக உலகில் பெரும்பான்மையானவர்கள் தன் தாய், தந்தையரை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகின்றனர். நாம் குழந்தைகளாக இருந்தபோது எவ்வளவு தியாகங்களை இந்த ஜீவன்கள் செய்திருப்பார்கள் என்பது நாம் தந்தையான பின்னர்தான் நமக்கு தெரிய வருகிறது. எனவே முடிந்தவரை வயதான பெற்றோருக்கு சேவை செய்யுங்க ... அவர்கள் மனது சந்தோஷப்படும்போது நாமும் வாழ்வில் உயர உயர பறப்போம்... வாழ்க்கைக்கான வளர்ச்சியில்.... தாய் அன்பு எதற்கும் ஈடில்லாதது...எத்தனை கோடிகொடுத்தாலும் தாய்ப்பாசத்தினை மட்டும் யாருமே இவ்வுலகில் விலைக்கு வாங்கிவிட முடியாது.காரணம் அது ஆத்மார்த்தமான பாசம்...வேஷமல்ல...
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2