அன்பான கணவன், அழகான மனைவி அமைந்தாலே பேரின்பம் தான்..

Kanavan Manaivi Kavithai Tamil-வயது முதிர்ந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் போவதைப் பார்க்கையில், நெகிழ்ச்சியும், மதிப்பும் நமக்குச் சற்று அதிகமாகத் தோன்றுவதை அனுபவித்திருக்கின்றீர்களா?

Update: 2022-10-30 01:27 GMT

Kanavan Manaivi Kavithai Tamil

Kanavan Manaivi Kavithai Tamil

கணவன் மனைவி உறவு எவ்வாறு இருக்கவேண்டும் என கவியரசர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் கூறியிருப்பது:

கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்

சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது

முள்ளால குத்தின காயம் ஆறிடும்

சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்

இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..

ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..

வாழ்க இல்லறம் ! 


கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் கணவன் மனைவி உறவைப்பற்றி அருமையாக எழுதியிருப்பார்.

அன்புடன் தன்னைக் காக்கும் மனைவி மட்டுமே துணை என்ற நிலையில், கணவன் பாடும் பாடல் இது..

உன்னைக் கரம் பிடித்தேன் - வாழ்க்கை

ஒளிமயமானதடி!

பொன்னை மணந்ததனால் - சபையில்

புகழும் வளர்ந்ததடி!

இன்பங்களும் துன்பங்களும், ஏற்றங்களும் இறக்கங்களும் அவர்கள் வாழ்விலும் சுழற்றி அடித்திருக்கும். ஆனால், எல்லா நிலையிலும் அவர்கள் ஒருவரையொருவர் தாங்கிப் பிடித்திருக்கின்றார்கள் என்பதன் அடையாளமே, முதுமை வயதிலும் அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்.

ஆலம் விழுதுகள் போல் - உறவு

ஆயிரம் வந்துமென்ன?

வேரெனெ நீயிருந்தாய் - அதில் நான்

வீழ்ந்து விடாதிருந்தேன்!

என்ன ஒரு அருமையாக வரிகள்.

கண்ணதாசனைப்போல் இல்லாவிட்டாலும், கணவன் மனைவி உறவைப்பற்றி வலைதளங்களில் கிடைத்த சில கவிதை வரிகள் உங்களுக்காக

நீயா..? நானா..? என வாழ்க்கை

நடத்துவதை விட,

நீயும் நானும் என்ற வாழ்க்கையே

சிறந்த இல்லறம்

கடும் கோபத்திலும்,

தன் அன்பு மனைவியிடம்

கடுமையான வார்த்தைகளை

உபயோகிக்காதவனே

நல்ல கணவன்.

கணவன் மனைவி உறவில்

சண்டை நடந்தாலும் அழகு;

சமாதானம் ஆனாலும்

அழகு தான்.

காதல் கணவன்

கண்ணிற்கினிய குழந்தைகள்

சிறிய கனவு இல்லம்

இது தான் பல பெண்களின்

கனவு.

உடலுக்கு மட்டுமல்ல..

மனதிற்கும் துணையாக வாழ்பவர்கள்

உண்மையான கணவன் மனைவி..!

கருத்து வேறுபாடு ரசனை

வேறுபாடு இருந்தும் மனம்

ஒன்றி வாழ்வதே

கணவன்-மனைவி உறவு.

மனைவியை தாயாக நினைக்கும் ஆண்களும்,

கணவனை பிள்ளையாக நினைக்கும் பெண்களும்

இருக்கும் வரை உண்மை காதலுக்கு மரணமில்லை.

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும்

எனக்கு நீ.. உனக்கு நான்..

என்ற இந்த புனிதமான உறவு

மட்டும் போதுமானது.

எந்த சூழ்நிலையிலும் எதையும்

எதிர்பார்க்காமல் அன்பு

செலுத்தும் உண்மையான

உறவு கணவன் மனைவி

உறவு மட்டும் தான்.

தன்னை கருவில் சுமந்த

தாயையும் தன் கருவை

சுமக்கும் மனைவியையும்

நேசிப்பவன் தான்

உண்மையான ஆண்மகன்.

மனைவியின் கோபத்திற்கு அடங்கவும்

அதே மனைவியை

தன் அன்பால் அடக்கவும் தெரிந்த

ஆண் கணவனாக கிடைக்கும்

போது இல்லற வாழ்க்கை

சொர்க்கமாக அமையும்.

ஒரு ஆண் தன் கோபத்தைக் காட்டுவதும்,

அடிபணிந்து போவதும்

மேலான அன்பைப் பொழிவதும்

தன் ஆசை மனைவிடம்

மட்டுமாக தான் இருக்கும்.

கணவனை விட கணவனின்

குடும்பத்தை உயிராய் நேசிக்கும்

மனைவி தான் கணவனின்

உயிரில் கலக்கிறார்கள்.

விழுதுகள் மரத்தை தாங்கலாம்

ஆனால் வேர் மட்டுமே அதை

வாழ வைக்க முடியும்..

அதே போல தான் கணவன் மனைவி

எனும் உறவும்.

கணவன் மனைவிக்கு குழந்தை பிறப்பது இயல்பு..

ஆனால் கணவன் மனைவிக்கும்..

மனைவி கணவனுக்கும்..

குழந்தையாக மாறுவது வரம்.

கணவன் பணக்காரனாக

இல்லாவிட்டாலும் பரவாயில்லை..

கடன் காரனாக மாறி விடக் கூடாது

என நினைப்பவள் தான்

உண்மையான மனைவி.


மனைவியை அடிக்கடிகுறை கூறிக் கொண்டிருக்கும்

கணவனுக்கு தெரியாது

தன் முதுமையில் அவள் தான்

தாயாவாள் என்று


கணவன் மனைவி உறவு என்ற உறவிற்கு மேலான உறவு இந்த உலகில் வேறெதுவும் இல்லை இதை புரிந்து கொண்டால் மட்டும் போதும் இல்லறம் சிறப்பாக இருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News