Healthy Nuts Benefits - இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நட்ஸ் குறித்து தெரிஞ்சுக்குங்க!
Healthy Nuts Benefits - இதயம் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.;
Healthy Nuts Benefits- நட்ஸ் குறித்த ஆரோக்கிய நன்மைகளை அறிந்துக் கொள்வோம் (கோப்பு படம்)
Healthy Nuts Benefits - நமது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நட்ஸ் தரும் நன்மைகள்
இதய நோய் வராமல் தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதயத்தை சீராக செயல்பட உதவும் நட்ஸ் வகைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தற்போதைய நவநாகரீக காலத்தில் பலரும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏன் 25 வயதிலிருந்து 60 வயது முதியவர்கள் வரை பலருக்கும் இதய நோய் வந்து உயிரிழப்புகள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நமது இதயத்தை பத்திரமாக பேணி பாதுகாப்பது நமது கடமை. நட்ஸ் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. நமது அன்றாட உணவில் ஒமேகா-3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன அந்த வகையில் நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் ஊக்கமளிக்கும் நட்ஸ் வகை உணவுகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
நமது இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் நட்ஸ் வகைகள்
பாதாம்
பாதாமில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை அளவை பெரிதும் குறைக்க உதவுகிறது. பாதாம் நாம் தினசரி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலின் உணவு தேவைகளை பாதாமில் உள்ள சத்துகள் குறைப்பதால். உடல் எடையை குறைக்க விரும்புவோர் பாதாமை சாப்பிடுவது நல்லது. பாதாமில் உள்ள பிரதான சத்துக்கள் இதயத்தை சீராக செயல்பட உதவுகிறது. பல நன்மைகள் நிறைந்துள்ள பாதாமை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும்.
வால்நட்ஸ்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. வால்நட்ஸ் சாப்பிடுவது நமது உடலில் கொழுப்புகளால் ஏற்படும் நோய்களின் தன்மையை குறைக்க உதவுகிறது. நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கும் ரத்த அழுத்த நோய் அபாயத்தை தடுக்க இது உதவுகிறது.
பிஸ்தா
நமது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேரும் போது இதயம் பாதிப்படையக்கூடும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மோசமாக்கி எந்த நேரத்திலும் இதய அடைப்பு மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும். பிஸ்தாவில் உள்ள நன்மைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எதிர்த்துப் போராட உதவும். மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் ரத்த சர்க்கரை நோய், கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
முந்திரி
முந்திரியில் மாங்கனீஸ், ஜிங்க், மெக்னீசியம், புரதம் மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.மேலும் முந்திரியில் உள்ள ஸ்டீரிக் என்ற அமிலம் உடலில் உள்ள எல்டிஎல் அளவை குறைக்கிறது. இது மனிதர்களின் சர்க்கரை நோய் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவுகிறது. இதை சரியான அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிகமாக எடுத்துக் கொண்டால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்
வேர்க்கடலை
வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு நல்ல மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இரண்டையும் கொண்டிருக்கின்றன . இது உடல் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன. வேர்க்கடலை சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்களின் தினசரி உணவு பட்டியலில் இந்த நட்ஸ் வகைகளை சேர்ப்பது உடல் மற்றும் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.