கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது, அது போலத்தாங்க கடுகு எண்ணெய்யும்..

Mustard Oil Benefits in Tamil-பெரும்பாலான நோய்களுக்கு அன்றாடம் உபயோகப்படுத்தும் எண்ணெயும் ஒரு காரணம். நாம் அதிகம் பயன்படுத்தாத கடுகு எண்ணெயில் ஆரோக்கியம் கூடுதலாக இருக்கிறது

Update: 2022-12-26 10:36 GMT

Mustard Oil Benefits in Tamil

Mustard Oil Benefits in Tamil-அன்றாடம் சமைக்கப்படும் உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் உடலுக்கு கேடு விளைவிக் காமல் இருக்க வேண்டும். இதில் உண்டாகியிருக்கும் அதிகப்படியான விழிப்புணர்வு காரணமாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளதை காணலாம். அந்த வகையில் கடுகு எண்ணெயின் பயன்களை இப்போது பார்க்கலாம்.

கடுகு விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கடுகு எண்ணெய் தனிச்சுவையைக் கொண்டது. பழங்காலத்தில் சமையலறையில் கடலை எண்ணெய், நல்லெண்ணெயோடு கடுகு எண்ணெயும் முக்கியமாக இடம் பிடித்திருந்தது.

கடுகு எண்ணெயில் ஒமேகா 3, வைட்டமின் ஈ, பி 6 சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன.. மேலும்21 சதவீதம், பாலி அன்சாச்சுரேட் அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

செரிமானகுறைபாடு உள்ளவர்கள் கடுகு எண்ணெயில் சமைத்த உணவு பயன்படுத்தும்போது செரிமானத்தை அதிகரிக்கிறது.. இதனால் பசி உணர்வும் தூண்டப்படுகிறது. செரிமானக்கோளாறால் மந்த சோர்வு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது

கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள்

நம் அன்றாட சமையலில் பலவகையான எண்ணெய்களை பயன்படுத்துகின்றோம். அந்த வகையில் உணவில் கடுகு எண்ணெயை சேர்ப்பதினால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்

கடுகு எண்ணெயில்நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது. இந்த எண்ணெயில் ஒமேகா 3 மற்றும் 6 ஃப்பேட்டி அசிட் அதிகமாக இருக்கிறது. மற்ற எண்ணெயை விட கடுகு எண்ணெய் மிகவும் சிறந்தது.

இந்த கடுகு எண்ணெயை மீன் குழம்பு, மீன் வறுவலில் சேர்க்கலாம் காட்டம் தெரியாது. இந்த எண்ணெய்க்கு நுண்ணுயிர் கொல்லி இயற்கையாகவே உள்ளது.

சீக்கிரம் வீணாக கூடிய அதாவது தேங்காய், தேங்காய் பால் சேர்க்கும் உணவுகளை பதப்படுத்தி வைக்க இந்த எண்ணெயை சேர்க்கலாம்..

  • சிலருக்கு வயிற்று பகுதியில் தொப்பை குறையாது. இந்த எண்ணெயில் குறைவாக உள்ளதால், அதிகமான உடல் எடை உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். அதற்கு இந்த கடுகு எண்ணெயை மசாஜ் செய்துவர வேண்டும். வயிறுக்கு கீழ் அதிகமாக இரத்த சுழற்சி இருக்கும். உங்களுக்கு எந்த இடத்தில் உடல் எடை குறைய வேண்டுமோ அந்த இடத்தில் மசாஜ் செய்யவேண்டும்.

உடலில் எந்த வலி இருந்தாலும் இந்த கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம். அதுவே உடலில் ரொம்ப வலி உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் பலன் அளிக்காது.

  • கைகளில் அரிப்பு, புண்கள், தேமல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கடுகு எண்ணெயை தேய்த்து வந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது. இந்த கடுகு எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது.

வறண்டசருமம் உள்ளவர்கள் உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும்போது இந்த கடுகு எண்ணெயை 2 சொட்டு எடுத்து ஃபேஸ் பேகில் கலந்து போட்டால் முகம் நன்றாக பளபளப்பாக இருக்கும்.

  • சிலருக்கு பற்களில் இரத்த கசிவு இருக்கும். அந்த பிரச்சனை சரியாக 1 ஸ்பூன் தூள் உப்பு, கடுகு எண்ணெய் 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து மிக்ஸ் செய்து தினமும் காலையில் பல் துலக்கிய பின் இந்த கலவையை பற்களில் தடவி வந்தால் பற்களில் உள்ள ஈறு பிரச்சனைகள் சரியாகிவிடும்.

முடி சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயத்தை பொடி செய்து கடுகு எண்ணெயுடன் பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து உங்கள் முடிகளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து அதன் பின்னர் தலையை ஷாம்பு போட்டு வாஷ் செய்துகொள்ளலாம். இதனால் பொடுகு தொல்லை இருக்காது. அதுமட்டும் இல்லாமல் சிறிய வயதிலே இளநரை பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கடுகு எண்ணெயை வாரத்தில் 1 முறை தேய்த்து மசாஜ் செய்து அதன் பின்னர் தலையை ஷாம்பு போட்டு வாஷ் செய்யலாம். விரைவில் இளநரை குணமடையும்.

  • கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது. இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல், இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் தலை முடி நன்றாக வளரும்.
  • கடுகுஎண்ணெயை இலேசாக சூடாக்கி குழந்தைகளுக்கு மார்பில் தடவுவதன் மூலம் சளி கரைந்து வெளியேறும்  சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு தட்டி, சிட்டிகை கிராம்பு பொடியைச் சேர்த்து கடுகுஎண்ணெயில் கலந்து இலேசாக சூடாக்கி மார்பு, காலில் தேய்த்துவர சைனஸ் பிரச்சனை குறையும்.
  • இந்த எண்ணெயை உடலில் மசாஜ் செய்து வந்தால் உடலில் தேவையில்லாத கிருமிகள் வியர்வையில் வெளியேறிவிடும்.

இந்த எண்ணெயை அதிகமாக உணவுகளில் சேர்க்க முடியாது என்பதால் தேவைப்படும் இடங்களில் சேர்த்துக்கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News