Health benefits of ginger juice- குளிர்காலத்தில் இஞ்சி சாறு குடிங்க -அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைய இருக்குங்க!
Health benefits of ginger juice- குளிர்காலத்தில் இஞ்சி சாறு குடித்தால், அது உடல் ரீதியாக பல நன்மைகளை ஏற்படுத்துகிறது. அதுபற்றி தெரிந்துக்கொள்வோம்.;
Health benefits of ginger juice- குளிர்காலத்தில் இஞ்சி சாறு குடித்தால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
பாரம்பரிய உணவு முதல் நவீன கால உணவுகள் வரை கிட்டத்தட்ட அனைத்து வகை உணவிலும், இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் இஞ்சியில் உள்ள சுவை மட்டுமல்ல ஆரோக்கிய நன்மைகளும் தான். இஞ்சியில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் பி3, பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் உள்ள ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் இஞ்சி சாறு உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இஞ்சி ஜூஸ் செய்வது எப்படி, அடிக்கடி இஞ்சி ஜூஸ் குடித்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
இஞ்சி சாறு செய்முறை:
இஞ்சியை கத்தி அல்லது கரண்டியைபயன்படுத்தி தோலுரிக்கவும்.
துருவிய இஞ்சியை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த இஞ்சியை ஒரு சிறிய வடிகட்டிக்கு மாற்றவும். இஞ்சி சாற்றை எடுக்க, கரண்டியால் அழுத்தவும். அல்லது உங்கள் சுத்தமான வெறும் கையால் அரைத்த இஞ்சியை பிழியவும்.
நோய் எதிர்ப்பு சக்தி:
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் உள்ளன. இது சளி, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
செரிமான மேம்பாடு:
இஞ்சி செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது, சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது வயிற்று உப்புசம், அஜீரணம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
சுவாச பிரச்சனை:
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கம், சளி, இருமல் மற்றும் வைரஸ் பிரச்சனைகளை நீக்குகிறது. இதன் மருத்துவ குணங்கள் சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. இது தொண்டை புண் மற்றும் இருமல் போக்க உதவுகிறது. சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்:
இஞ்சி சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இஞ்சியில் உள்ள இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வீக்கம் மற்றும் வலியை கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
ரத்த சர்க்கரை அளவு:
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் இன்சுலின் சுரப்பு மற்றும் உணர்திறனுக்கு உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இஞ்சி சாறு குடிப்பது நல்லது.