தேங்காய் பூ சாப்பிடுவதால், இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்குதா?

Health Benefits of Eating Coconut Flower- தேங்காய் பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.;

Update: 2024-06-07 16:28 GMT

Health Benefits of Eating Coconut Flower- தேங்காய் பூ தரும் ஆரோக்கிய நன்மைகள் (கோப்பு படம்)

Health Benefits of Eating Coconut Flower-- தேங்காய் பூ சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

தேங்காயை நம் தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். நாம் சமைக்கும் பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் சேர்ப்பது வழக்கம். தேங்காய் மற்றும் அதன் தண்ணீர் என்று அதில் பல பயன்கள் உள்ளது. அந்த வரிசையில் தேங்காய் பூ சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து  பார்க்கலாம்.

தேங்காய் பூ:

இந்த தேங்காய் பூ உண்மையில் பூ கிடையாது. இது முற்றிய தேங்காயில் வளரும் தளிர் ஆகும். முற்றிய தேங்காய் உள்ளே தானாகவே தேங்காய் தண்ணீர் அதனுடைய சதை பகுதி சேர்ந்து முளைத்து வரும். இதுதான் தேங்காய் பூ என்று கூறப்படுகிறது. இதன் சுவை சாப்பிடுவதற்கு உப்பும் இனிப்பும் கலந்து சுவையாக இருக்கும். இந்த தேங்காய் பூ பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். அது மட்டுமல்லாமல் கோவில்கள் போன்ற புனித தலங்களில் தேங்காய் உடைக்கும் போது தேங்காய்க்குள் பூ இருந்தால் அது நல்ல சகுனம் என்று கூறுவார்கள். அதே போல வேலை வாய்ப்பு திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.


பெண்கள் ஆரோக்கியம்:

இந்த தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு கருப்பை சுத்தமாகும் என்று கூறப்படுகிறது. கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தேங்காய் பூ பெரிதும் உதவுகிறது. இந்த தேங்காய் பூவில் உள்ள சோடியம், பொட்டாசியம், மினரல், கால்சியம், வைட்டமின் ஈ சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் பெண்களின் கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இதை சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி நாளடைவில் குணமாகும். அவர்களின் உடல் வலிமை பெற்று நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இதய ஆரோக்கியம்:

இதய நோய்களை குணப்படுத்த தேங்காய் பூ பெரிதும் உதவுகிறது. இந்த தேங்காய் பூவில் பொட்டாசியம் நார்ச்சத்து அதிக அளவு இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறையும் என்று கூறப்படுகிறது.


ஆன்ட்டி ஆக்சிடென்ட்:

இந்த தேங்காய் பூவில் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிக அளவு நிறைந்துள்ளதால் நம் சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. அதே போல இந்த ஆன்டி ஆக்சிடென்ட் நம் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளும் சர்க்கரை நோயாளிகளும் அவ்வப்போது சிறிதளவு தேங்காய் பூ சாப்பிட்டு வரலாம்.

மாதவிடாய் பிரச்சனை:

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் நலம் பாதிக்கப்படும். தினசரி தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையும் குணமாகும். அது மட்டுமின்றி டையேறியா வயிற்றுப்போக்கு போன்ற வயிறு கோளாறு பிரச்சனைகள் குணமாக தேங்காய் பூ சாப்பிடலாம். அதே போல பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினை வெள்ளைப்படுதல். இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்த தினசரி தேங்காய் பூ சாப்பிட்டு வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


புற்றுநோயை குணப்படுத்தும்:

இந்த தேங்காய் பூவுக்கு புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை உண்டு. இது நம் உடலில் புற்றுநோய் செல்களை தடுத்து அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அதேபோல தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த தேங்காய் பூவை சாப்பிட்டு வரலாம். எத்தனை வருட காலம் தைராய்டு பிரச்சனை இருந்தாலும் சரி இனி தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனை குணமாகும். மேலும் ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க இந்த தேங்காய் பூ பெரிதும் உதவுகிறது.

Tags:    

Similar News