உடல் வலிமை பெற வேண்டுமா? வாற்கோதுமை சாப்பிடுங்க! அட பார்லி தாங்க
Barley Seeds in Tamil- டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர், பெரியவர், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் சாப்பிடலாம்
Barley Seeds in Tamil-தமிழில் வாற்கோதுமை என கூறப்படும் பார்லி புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும்.
உலக அளவில் மனிதர்கள் உண்ணும் பிரதான உணவு தானியங்களாக அரிசி, கோதுமை இருக்கிறது. இதற்கு அடுத்த அளவில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியம் வகையாக பார்லி தானியம் இருக்கிறது. இந்த பார்லியை தமிழில் பார்லி அரிசி அல்லது பார்லி தானியம் என அழைப்பார்கள். மத்திய ஆசிய நாடுகளில் அதிக மக்களால் உண்ணப்படும் உணவு தானியமாக பார்லி அரிசி இருக்கிறது.
டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.
பார்லியில் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம், தாமிரம், புரதம், அமினோ அமிலங்கள், உணவு நார்ச்சத்துக்கள் மற்றும் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
தினமும் பார்லியை உட்கொண்டு வந்தால் உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும். மேலும் இந்த பார்லி இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இந்த பார்லி அரிசி கஞ்சி சிறுநீரகத்தின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது.
பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த பார்லி அரிசி அல்லது பார்லி தானியங்களை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள்
உடல் எடை குறைய
பார்லி அரிசி பயன்கள் உடல் எடை உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது..
ரத்த சோகை
ரத்தத்தில் சிகப்பு இரத்த அணுக்கள் குறையும் பொழுது அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படுகிறது. ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு வைட்டமின் 12 சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பார்லியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பார்லி கஞ்சி குடிப்பவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் காக்கிறது. உடலுக்கு வலிமையையும் தருகிறது.
செரிமான கோளாறுகள்
செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த பத்திய உணவாக பார்லி உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து, சாப்பிடும் உணவுகள் சுலபத்தில் செரிமானம் ஏற்பட உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. தினமும் பார்லி தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவோ அல்லது பார்லி கஞ்சி பருகுவது வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது.
புற்று நோய் தடுப்பு
பார்லியில் அனைத்து வகை புற்றுநோய்களையும் தடுக்கக்கூடிய ஆற்றல் மிகுந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பார்லியை உணவாக அதிகம் பயன்படுத்தும் சீன மற்றும் திபத்திய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய் பாதிப்புகளும் ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுக்கவும், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.
எலும்பு, பற்கள் வலிமை
பார்லியில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன. பார்லியை சாறு பதத்தில் தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பித்தப்பை கற்கள்
பித்தப்பையில் ஏற்படும் அதீத அமில சுரப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அதிகரிப்பால் பித்தப்பையில் கற்கள் உருவாக காரணமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்தப்பை கற்கள் உருவாகும் சதவீதம் அதிகமாக இருக்கிறது. பார்லி உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
பீட்டா – குளுக்கான் பார்லி தானியங்களில் பீட்டா குளுகான் சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பீட்டா குளுக்கான் சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் பெருகச் செய்து, நோய்கள் பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் வைட்டமின் சி சத்தும் இந்த பார்லி தானியங்களில் இருப்பதால் அதை சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை பன்மடங்கு வலுவடைகிறது. காயங்கள், புண்கள் வேகமாக ஆறவும் வழி வகை செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்ற பெண்களுக்கு சிறந்த ஊட்டசத்து நிறைந்த உணவாக பார்லி திகழ்கிறது. பார்லி கஞ்சி தினமும் பருகும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவுகள் எளிதில் செரிமானம் ஆகிறது. மேலும் பேறு காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கர்ப்பகால நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். கருவுற்ற பெண்களின் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மை படுத்தும் பணியை பார்லி சிறப்பாக செய்கிறது.
சரும பாதுகாப்பு
மனிதர்களின் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைச் செய்யக்கூடிய ஒரு தானியமாக பார்லி இருக்கிறது. பார்லி கஞ்சி அருந்துபவர்கள் மற்றும் பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்பட்டு தோல் சுருக்கம், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் தோலின் நிறத்தை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. பார்லி மாவை நீரில் கலந்து பிசைந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைகிறது.
பார்லி கஞ்சி செய்முறை:
தேவையான பொருட்கள்:
பார்லி அரிசி – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பார்லி அரிசியை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு வறுத்த பார்லி அரிசியை உடைத்து கொள்ள வேண்டும்.
பின்பு அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின்பு பார்லி சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
பிறகு பார்லி அரிசி கஞ்சி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2