Grahapravesam Dates in 2024: 2024ம் ஆண்டு கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள்

Grahapravesam Dates in 2024: 2024ம் ஆண்டு கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.;

Update: 2024-01-14 15:31 GMT

பைல் படம்

Grahapravesam Dates in 2024 :  இந்த ஆண்டு புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாட்கள் எப்போது என்பதை தெரிந்துகொள்வோம். வீட்டில் நடக்கக்கூடிய சுபகாரியங்களில் முக்கியமான விசேஷம் கிரகப்பிரவேசம். நம்பில் பல பேருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய கனவாக இருப்பது சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பது தான். நம்முடைய கனவு வீட்டிற்காக சிறுக சிறுக சேமித்து, கடன் பெற்று ஆசை படி கட்டிய வீட்டிற்கு ஒரு நல்ல நாள் பார்த்து கிரகப்பிரவேசம் செய்வது நம் பாரம்பரிய ஐதீகமாக இன்றும் விளங்கி வருகிறது. புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு நல்ல மாதம், நட்சத்திரம், ராசி (வீடு குடி போக நல்ல நாள்) என்று பல உள்ளன.

அதன்படி, நம் முன்னோர்கள் நல்ல நாளுடன் நட்சத்திரம் பார்த்து குடி பெயர்தல் வேண்டும் என்று ெள்ளனர். இந்த பதிவில் 2024 ஆம் ஆண்டின் கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள், கிழமை, தேதி விவரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..!

இந்த ஆண்டு புது வீடு குடி போக நல்ல நாட்கள்:

கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள் கிரகப்பிரவேசம் செய்ய உகந்த கிழமை கிரகப்பிரவேசம் செய்ய உகந்த திதி கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நேரம்

ஜனவரி:

03.01.2024 புதன் -சப்தமி -காலை 07:14 முதல் மதியம் 02:46 வரை

பிப்ரவரி:

12.02.2024 திங்கள் -திரிதியை -மதியம் 02:56 முதல் 05:44 PM வரை

14.02.2024 புதன் -பஞ்சமி -காலை 07:01 முதல் 10:43 வரை

19.02.2024 திங்கள்- தசமி, ஏகாதசி -காலை 06:57 முதல் 10:33 வரை

26.02.2024 திங்கள் -துவிதியை, திரிதியா- காலை 06:50 முதல் மாலை 04:31 வரை, பிப்ரவரி 27

28.02.2024 புதன் -பஞ்சமி- 04:18 AM முதல் 06:47 AM வரை, பிப்ரவரி 29

29.02.2024 வியாழன் -பஞ்சமி -காலை 06:47 முதல் 10:22 வரை

மார்ச்:

02.03.2024 சனி- சப்தமி -பிற்பகல் 02:42 முதல் மாலை 06:44 வரை, மார்ச் 03

06.03.2024 புதன்- ஏகாதசி- பிற்பகல் 02:52 முதல் மாலை 04:13 வரை, மார்ச் 07

11.03.2024 திங்கள் -துவிதியை -காலை 10:44 முதல் 06:34 வரை, மார்ச் 12 வரை

15.03.2024 வெள்ளி- சப்தமி -10:09 PM முதல் 06:29 AM வரை, மார்ச் 16

16.03.2024 சனி- சப்தமி -காலை 06:29 முதல் இரவு 09:38 வரை

27.03.2024 புதன் -துவிதியை -காலை 06:17 முதல் மாலை 04:16 வரை

29.03.2024 வெள்ளி -பஞ்சமி -08:36 PM முதல் 06:13 AM வரை, மார்ச் 30

30.03.2024 சனி -பஞ்சமி- காலை 06:13 முதல் இரவு 09:13 வரை

ஏப்ரல்:

03.04.2024 புதன் தசமி மாலை 06:29 முதல் இரவு 09:47 வரை

மே:

வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை.

ஜூன்:

வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை.

ஜூலை:

வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை.

ஆகஸ்ட்:

வீடு குடி போக உகந்த நாட்கள் இல்லை.

செப்டம்பர்:

புதுமனை புகுவிழா செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை

அக்டோபர்:

புதுமனை புகுவிழா செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை.

நவம்பர்:

02.11.2024 சனி -பிரதமை- காலை 05:58 முதல் 06:35 வரை (நவம்பர் 3)

04.11.2024 திங்கள் -திரிதியை -காலை 06:35 முதல் 08:04 வரை

07.11.2024 வியாழன் -சஷ்டி -12:34 AM முதல் 06:38 AM வரை (நவம்பர் 8)

08.11.2024 வெள்ளி -ஸப்தமி -காலை 06:38 முதல் மதியம் 12:03 வரை

13.11.2024 புதன் -துவாதசி- 01:01 PM முதல் 03:11 AM வரை (நவம்பர் 14)

16.11.2024 சனி -பிரதமை -07:28 PM முதல் 06:45 AM வரை (நவம்பர் 17)

18.11.2024 திங்கள் -திரிதியை -காலை 06:46 முதல் மாலை 03:49 வரை

25.11.2024 திங்கள்- தசமி -காலை 06:52 முதல் 01:24 வரை (நவம்பர் 26)

டிசம்பர்:

05.12.2024 வியாழன் -சதுர்த்தி-12:49 PM முதல் 05:26 PM வரை

11.12.2024 புதன் -ஏகாதசி- காலை 07:04 முதல் 11:48 வரை

21.12.2024 சனி -சஷ்டி -காலை 06:14 முதல் 07:10 வரை (டிசம்பர் 22)

25.12.2024 புதன்- தசமி -07:12 AM முதல் 03:22 PM வரை

Tags:    

Similar News