Going To Temple Leave Letter விடுப்பு கடிதம் எழுதுவது எப்படி? படிச்சு பாருங்க....விபரமாக .....

Going To Temple Leave Letter விடுப்பு எடுக்கும்போது நாம் விடுப்புக்கடிதம் அவசியம் கொடுத்தாக வேண்டும். விடுப்புக்கடிதம் என்பது விடுப்பு எடுக்கும் நாட்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டியது மிக மிக அவசியம்.;

Update: 2023-11-04 16:39 GMT

Going To Temple Leave Letter

ஆபீ்ஸ் மற்றும் தனியார் நிறுவன தொழிற்சாலைகள் மற்றும் நாம் எங்கு வேலை பார்த்தாலும் நம் அவசியத்திற்கும் அவசரத்திற்கும் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். நம்முடைய உடல்நலமின்மை, வீட்டு விசேஷம், உறவினர் வீட்டுதிருமணம், இறப்புகள் போன்ற முக்கிய நிகழ்விற்கு அவசியமாக நாம் விடுப்பு எடுத்து செல்லவேண்டிய நிலையானது வருவதுண்டு.

அதேபோன்று பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், ஆசிரிய ஆசிரியைகளுக்கும் மேற்சொன்ன காரணிகளினால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை கட்டாயம் வரும். அதுபோன்ற நேரங்களில் நாம் எப்படி விடுப்புகடிதத்தினை எழுதுவோம். நமக்கு அளித்துள்ள தலைப்பு படி கோயிலுக்கு செல்லவிருப்பதால் விடுப்பு வேண்டும் என எப்படி விடுப்பு கடிதம் எழுதுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

அனுப்புநர்

எஸ். தங்கபாண்டியன்

34, பாரதியார் தெரு,

சிம்மக்கல் ,

மதுரை-2

98675 34567

பெறுநர்

மேலாளர் அவர்கள்,

டிவிஎஸ் நிறுவனம்.

மதுரை...2

அய்யா,

பொருள்: குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு

செல்லவிருப்பதால் -விடுப்பு கோருதல்

தொடர்பாக.

நான் எனது குடும்பத்தாருடன் திருப்பதி கோயிலுக்கு செல்லவிருப்பதால் வரும் 10 ந்தேதி முதல் 15 ந்தேதி வரை ஐந்து நாட்கள் எனக்கு விடுப்பு (10.11.2023 முதல் 15.11.2023 வரை) வழங்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஐந்து நாட்களிலும் எனக்கு பதிலாக எனது பணியினை செய்ய தகுந்த ஏற்பாடுகளை நான் மாற்றாக செய்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோயிலுக்கு சென்று வந்த பின் நான் 16 ந்தேதி முதல் எனது ஷிப்டிற்கு ரெகுலராக வந்துவிடுவேன் என்பதையும் இதன் மூலம் தங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நன்றி,.

இப்படிக்கு

எஸ்.தங்கபாண்டியன்.

இடம் : மதுரை

நாள் : 04/11/2023

Tags:    

Similar News