நண்பனே... எனது உயிர் நண்பனே.... நட்பின் வலிமை ....உண்மையே.....

Friendship Kavithai in Tamil-நட்பு என்பது மூன்றெழுத்து உயிர் என்பது மூன்றெழுத்து தோழன் என்பது மூன்றெழுத்து வெற்றியும் மூன்றெழுத்துதான்... உண்மையான நட்பே வெற்றிக்கு அடிப்படையாகும்.;

Update: 2022-10-19 09:26 GMT

Friendship Kavithai in Tamil

Friendship Kavithai in Tamil

உலகிலேயே உறவுகளை விட நட்புகள் என்றும் நம்பிக்கைக்கு உரியவை என பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். உறவுகள் உயிர் தருமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியவில்லை.ஆனால் உண்மையான நண்பன் நண்பனுக்காக உயிரையும் விடுவான் என்பதற்கு பல உண்மை சம்பவங்களும் திரைப்பட கதைகளும் அரங்கேறியுள்ளதை நாமே கண் கூடாக காண்கிறோம். ஆனால் நட்பு என்பது உண்மையானதாக ஆத்மார்த்தமானதாக இருக்க வேண்டும். உதட்டளவில் பேசிவிட்டுபின்னர் ஆபத்து காலத்தில் ஒதுங்கிக்கொள்வது அல்ல நட்பு.

எந்த நேரத்திலும் நண்பனுக்கு ஓர் பிரச்னை என்றால் ஓடோடி வருபவர்கள்தாம் உண்மையான நட்புக்கு சொந்தக்காரர்கள். பலபேர் சொல்லியும் வராமல் காலம் தாழ்த்தி வருபவர்கள் உண்மையான நட்பின் இலக்கணத்திற்கு தகுதியில்லாதவர்களாகிவிடுவார்கள். உயிரையும் கொடுப்பான் நண்பன் என்பது அக்கால இலக்கிய கதைகள் முதல் இன்றைய உண்மை சம்பவங்கள் வரை உறுதி செய்கிறது. ஆனால் ஒருசில போலி நட்புகளால் உண்மையான நட்புகளுக்கும் கேடு ஏற்பட்டு விடுகிறது. என்ன செய்ய-?

சுயநல வாத நட்பு, போலி நட்புகளை ஒருசில நேரத்தில் நாம் அடையாளம் கண்டு கொண்டுவிடலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? நட்புகள் என்பது எல்லாமே ஒரு சில நட்புகளில் பேச்சிலர் வாழ்க்கை வரைதான். குடும்பஸ்தனாகிவிட்டால் பல நட்புகள் ஒட்டுவது குறைந்துவிடுகிறது. அல்லது விலகிவிடுகிறது.ஏன்? ஆனால் ஒரு சிலர் திருமணமானாலும் இன்று வரை நட்பாகவே தொடர்ந்து வருகின்றனர். இது விதி விலக்கு. ஆனால் ஒரு சில வீடுகளில் நண்பர்களோடு சேர்ந்தால் கெட்டுப்போய்விடுவார்கள் என்ற எண்ணத்தில் நட்புகளோடு சேர விடுவதில்லை. இது காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் நட்புகள் எத்தனை பேரின் வாழ்க்கையில் உதவுகிறது என்பதை யார் அவர்களிடம்சொல்வது என்பதை கேட்கின்றனர்.

மனைவியிடம், பெற்றோர்களிடம் சொல்ல முடியாத விஷயங்களைக்கூட உண்மையான நண்பர்களிடம், நண்பிகளிடம் பகிர்ந்துகொள்ள முடியும்.அதுதான் உண்மையான ஆத்மார்த்தமான நட்புக்கு இலக்கணம். எல்லாம் முடிந்த பின்னர் வருவது நட்பல்ல. தோள் கொடுப்பான் தோழன் என்பதைப் போல் கஷ்ட நேரத்திலும் இஷ்ட நேரத்திலும் கை கொடுப்பவனே உண்மையான நட்புக்கு சொந்தக்காரனாகிறான்.

பாசத்திற்காக தேடிவரும் உறவுகளே நட்பு மற்றவை எல்லாம் போலிகள்.

ஆயிரம் உறவுகள் உங்களுக்குஇருந்தாலும் கஷ்ட காலத்தில் உங்களுக்கு கை கொடுப்பது நட்புதான்.

உன்முகம் சிரிப்பு என்ற சிரிப்பை உதிர்த்தால் போதும் நட்புகள் ஆயிரக்கணக்கில் உன்னைத் தேடி வரும்.

உறவுகள் பாதியில் விலகிச் செல்ல வாய்ப்புண்டு காதல் கூட ஏமாற்றும்.. ஆனால் நட்பே நிலையான அன்பு

நட்பு மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமானது.

எதிர்பார்த்து பழகுவது நட்பல்ல.. எதையும் எதிர்பார்க்காததே நட்பு உண்மையான நட்பு ...

ஆயிரம் உறவுகளுக்கு மேலானதுதான் உண்மையான ஆத்மார்த்தமான நட்பு அவர்களுக்கே தெரியும்.

மனக்கிலேசங்கள் இருந்தாலும் அப்போதே தீர்ப்பவன்தான் உண்மையான நண்பன்

சாதி மதத்தினால் வேறுபட்டாலும் நாம் நட்பால் ஒன்றுபட்ட சாதியினராகி விடுகிறோம் நண்பா..

வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டாலும் அதிலும் உனக்கு பங்கு இருக்கும்.. வெற்றியிலும் பங்கு உனக்குதான்.

உன்னால் முடியும் ... என உறுதியான நம்பிக்கையைவளர்ப்பவன்தான் உண்மையான நண்பன்...

வெற்றியும் உன்னோடு தோல்வியும் உன்னோடு இன்ப துளிகளும் உன்னோடு துன்ப வழிகளும் உன்னோடு மெய்யும் உன்னோடு பொய்யும் உன்னோடு என் கண்ணீரும் உன்னோடு புன்சிரிப்பும் உன்னோடு.

தாய்ப்பாசத்தினைப்போல் உன்னுடைய தோள்கொடுக்கும் தோழமையில் கண்டேன் நண்பனே... வா...நண்பனே...

என்மீது நீ காட்டும் பாசத்திற்கு அளவும் எல்லையும் இல்லை ... இந்த நட்பு என்றும் தொடரட்டும் நண்பா..

நம் நட்பு உண்மையானது,,,, ஆத்மார்த்தமானது...நண்பா ...

நட்பின் ஆழம் உண்மையான நண்பர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்புண்டு...போலிகளுக்கு ... தெரியாது....

மணல் மீது எழுதப்படும் எழுத்துக்கள் அல்ல நம் நட்புஅழிக்க முடியாத பச்சை குத்துதலே நம் நட்பு

மறக்கமுடியுமா? பள்ளிக்கால, கல்லுாரிக்கால நட்புகளை என்றென்றும் மறக்க முடியாத நாட்கள்தான் அவை...

நண்பா...நீ எனக்கு அருகில் இருக்கும்போது எந்த கஷ்டங்களும் எனக்கு கஷ்டமாக தெரியவி்ல்லை..

உன் பிரிவு ....என்னால் தாங்க முடியாதது... உண்மையான நட்புகளுக்கு பிரிவு என்பது எப்போதும் இல்லை நண்பா..

சின்ன சிரிப்பில்தான் ஜனனமாகுது நட்பு    சிப்பிக்கு உள்ள முத்துவைப்போல

நட்பு என்பது எப்போதுமே அளந்து பார்க்காமல் உதவக்கூடியது... அதுவே உண்மையான நட்பு...

கவலையான நேரத்திலும் அதனை நினைக்காமல் இருக்கச் செய்வதுதான் உண்மையான நட்பின் அர்த்தமே...

பல விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ளவும் நல்ல உற்ற தோழனாய் நீ இருக்கையில் எனக்கென்ன கவலை..

நாம் சோர்ந்து போகும்போது நமக்கு புத்துணர்வூட்டுபவனே உண்மையான நண்பன்

பலவீனங்களை தவிடு பொடியாக்கி பலமாக மாற்றுவதே உண்மையான நட்பின் இலக்கணம்.

நம்பிக்கை, தன்னம்பிக்கை ஊட்டி நம் நட்பின் ஆழத்தினை அதிகப்படுத்துபவர்களே உண்மையான நண்பர்கள்.

வாழ்வின் இறுதிக்கட்டம் வரை உடனிருப்பதுதான் உண்மையான நட்பு... உன்னை மறக்க முடியவில்லை நண்பா...

தாய்ப்பாலில் கலப்படம் உண்டா?எப்போதுமே இருக்காது

அதுபோல் நம் நட்பில் என்றுமே கலப்படம் இல்லை உண்மையே...

உண்மையான நட்பு எது தெரியுமா? நம்முடன் வரும் நிழல் போல் உடனிருப்பவனே உண்மையானநட்பாளன்...

அனைத்து உறவுகளுக்கும் ஒப்பான ஒரே நண்பன் உண்மையான நண்பன்.. நண்பா வாழ்த்துகள்....

நட்புக்கு கால நேரம் இல்லை... உண்மையா நட்புக்கு போலிகள்... வேஷதாரிகளுக்கே ... நேரம்...காலம் எல்லாம்...

மனக்கஷடத்தையும், பணக்கஷ்டத்தையும் எப்போதும் நிரந்தரமாக போக்குவது உண்மையான நண்பர்களே...

நண்பர்களுக்குஇடையில் இடைவெளி இருக்காதுஅன்பு என்ற பாலம்தான் இவர்களை இணைக்கும்.

தன்னலம் கருதாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதே நம் நட்பின் இலக்கணம் என்பதை அடிக்கடி நிரூபிப்பவன்

பல உயிர்களை தன் உயிரைபணயம் வைத்துகாப்பவர்களே உண்மையான நண்பர்கள்... என்றும் வாழ்த்துகள்...

ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்வதே உண்மையான நண்பர்களின் குணாதிசயம்.. வெளிப்படைத்தன்மை....

என் சொல்லை அப்படியே கேட்டு செய்யும் மடையன் என் வாழ்வை வெளியிலிருந்து இயக்குகின்ற மதியும் அவன்.

உன்னை இம்சை என்று திட்டினாலும்என் புன்னகையின் உறைவிடம் நீ தான்!

சந்தோஷத்தில் உடனில்லாவிட்டாலும் துக்கத்தில் உடனிருப்பவனே உண்மையான நண்பன்..

ஒரு கோடி சொந்தங்கள் இருந்தாலும் ஒரு நட்பே போதும் நீ அனைத்திற்கும் சமமானவன்

உறவுகள் பல இருந்தாலும் உண்மையான நண்பன் ஒருவன் இருந்தால் போதும் அவ்வளவு வலிமை

ரத்தசொந்தங்களிடம் தான் அன்பை பரிமாற வேண்டும் என்றில்லை... உண்மையான நட்பு இருந்தால் போதும்...

சிறந்த நண்பர்கள் என்பதுகண்ணாடியும், நிழலும் போல்.கண்ணாடி பொய் சொல்லாது.நிழல் நம்மை விட்டு போகாது!

பெரிய வலிகள் கூடஓர் நொடியில் மறைந்து விடும்நல்ல நண்பர்கள் உன்னைச் சுற்றி இருந்தால்!

புறங்கூறிப்பேசுவது உண்மையான நட்பின் வேலை அல்ல உன்னை உயர்வாக பேசுபவனே உண்மையான நண்பன்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News