தினமும் கையளவு ஆளி விதை! கடலளவு நன்மைகள்!
Flax Seeds Benefits in Tamil - ஆளி விதையில் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது.
Flax Seeds Benefits in Tamil -ஆளிவிதையை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால், அதில் அதிகளவில் உள்ள பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு தேவையான சத்துகளை முழுமையாக அளிக்கும்.
ஆளி விதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- ஆளி விதையில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். பொட்டாசியம் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை வளமான அளவில் வைத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.
- ஆளி விதையில் ஏராளமான புரோட்டீன் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் உள்ளன. எனவே இதை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்.
- ஆளி விதையில் சி-க்ளுக்கோசைடுகள் அதிக அளவில் உள்ளது. இது , இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
- ஆளி விதையில் உள்ள லிக்னன்கள், அதாவது ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகள் காரணமாக ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை தவிர்க்க ஆளி விதையை பெண்கள் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- ஆளி விதைகளில் உள்ள லிக்னன்கள் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கின்றன. எனவே தினமும் பெண்கள் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுவது, வயதான காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
- ஆளி விதையை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது கண்களில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, கண் நோய்களுள் ஒன்றான மாகுலர் திசு சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
- சிறுநீரக ஆரோக்கியம் பராமரிக்கப்படும் ஆளி விதையை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வர, அது சிறுநீரகங்களில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். எனவே உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், ஆளி விதையை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிடுங்கள்.
எனவே தினமும் ஒரு கையளவு ஆளிவிதையை சாப்பிடுங்கள், கடலளவு நன்மையை பெறுங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2