Feeling sad quotes in Tamil வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பாக்கணும்
உறவைப் போலவே பிரிவு என்பதும் சகஜமான நிகழ்வே. அதற்காக வருந்துவதில் அர்த்தமில்லை. அடுத்து நடக்க வேண்டியதில் கவனம் செலுத்த மனதை தேற்றுங்கள்.;
ஆயிரம் வலிகளை சுமந்து அதையும் தாண்டி வாழ்க்கையில் எதையோ யாரையோ சமாளிக்கவும் சகித்துக்கொள்ளவும் சிரித்துக் கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் சிரிப்பிற்கு பின்னால் ஏதாவது ஒரு வலி இருக்கும்.
என்னதான் நம்முடன் நிறைய மனிதர்கள் சொந்தக்காரன்,நண்பன் என்ற பேர்களில் இருந்தாலும், இந்த நவீன காலத்தில் நம்முடைய வலிகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் கௌரவம் என்ற பெயரில் எல்லோரும் தனிமரமாகி போய்விட்டோம்.
மற்றவர்களின் வலிகளை புரிந்து கொள்ளவும், நமது வலிக்கு ஆறுதல் தேடவும் இந்த நவீன யுகத்தில் இணையத்தை மட்டுமே நாட வேண்டியுள்ளதால், வலிகள் உள்ளவர்களின் உணர்வுகளை இங்கு பதிவு செய்துள்ளோம்.
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யார் ஒருவரால் உணர முடிகிறதோ
அவர்களே நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு.
உன் இதயத்தை கேட்டுப்பார்
ஒவ்வொரு துடிப்பிற்கும் அர்த்தம் சொல்லும்
என் இதயத்தை கேட்டுப்பார்
துடிப்பின் அர்த்தமே நீ மட்டும்தான் என்று சொல்லும்.
நமக்கு பிடித்த உறவை சேரவும் முடியாமல்
யாருக்கும் விட்டு கொடுக்கவும் முடியாமல்
தவிக்கிற நொடி தான்
இந்த உலகத்துலயே கொடுமையானது.
வலிகளை கூட தாங்கி கொள்ளமுடிகிறது
ஆனால் வலிக்கவே இல்லை என்பதை போல்
சிரிக்க வேண்டும் என்ற சூழ்நிலை தான் வலிக்கிறது...
மகிழ்ச்சியாய் இருக்க ஆசைதான்.
ஆனால் கவலைகளை மறப்பது எப்படி என்று தான் இங்கு பலருக்கும் தெரிவதில்லை.
அழுத நொடிகள் மௌனமாய், சிரிக்கும் நொடிகள் வெளிச்சத்தில் பிம்பமாய் இருப்பது தான் வாழ்க்கை
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை தேடி தான் வாழ்க்கை பயணிக்கிறது.ஆனால் கிடைப்பது என்னவோ எதிர்பார்க்காதது தான்.
நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் எனக்கு கவலைகளே இல்லை என்று அர்த்தம் இல்லை
வாழவேண்டும் என்ற ஆசையே
வரமறுக்கிறது...வரம்புகளற்ற
சில வாக்குகளால்...
ஆறுதல் சொல்கிறேன்
என்ற பெயரில் நம்மை குத்திக்
காட்டுபவர்கள் தான் அதிகம்....
இங்கு பலரின் புன்னகை
பல காயங்களை மறைத்து
வைக்கும் முகமூடியாகவே
பயன்படுகிறது.
நமக்காக யாருமில்லை என்று நினைத்து அழுதேன்
அழுது முடித்த பிறகு தான் புரிந்தது
ஏன் அழுகிறாய் என்று கேட்க கூட யாருமில்லை என்று.
கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார்.
நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை...
மனதின் அழுத்தம் குறைக்க
ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை.
ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை
பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை...
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை
சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே...
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை
மனம் தெளிந்த
நீரை போன்றது
முகவரி இல்லாத
ஒருவர் எறியும்
கல்லால் தான்
அது கலங்கிய
நீராக மாறிவிடுகிறது
விதியின் கணக்கை சிலசமயம் புரிந்து கொள்ளமுடியாது.
ஒரு மனிதன் இன்று நம் முன்
சிரித்துக்கொண்டு இருப்பான்.
நாளை?
கண் கலங்க வைக்கிறது விதி
எழுதப்படாமல் விட்ட எண்ணற்ற காவியங்களை விட
வாசிக்கப்படாமல் வைக்கப்பட்ட காவியங்களுக்கே
வலி அதிகம்
உள்ளத்தின் குமுறல்கள் பலருக்கு புரிவதில்லை
அது உடைந்து கிடந்தாலும் கவனிக்க யாருமில்லை
வலிகள் பொதுவானவைதான் என்றாலும்
எல்லா வலிகளையுமே வெளிப்படுத்த அவசியம் இல்லை.
சில வலிகள் நமக்கே நமக்கானது
அதை வெளிப்படுத்தாமல் இருப்பதே
அந்த வலிக்கு மதிப்பு
கதறி அழவும் முடியாமல்
கண்ணீரை அடக்கவும் முடியாமல்
கலங்கியபடி வீதியில் நடந்து சென்ற
கனமான நாளை ஒருவரும்
கடக்காமல் இருக்க முடியாது
நான் வலியால் நிரம்பியிருக்கிறேன், ஆனால் நான் தினமும் காலையில் எழுந்து சிரிக்கிறேன்
நீங்கள் வலியை உணரும்போது, அது உங்கள் பாவங்கள் குறைகிறது என்பதற்கான அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க ஒரு காரணம் கிடைத்தால்,
அதை உடனே எடுத்துக் கொள்ளுங்கள்,
வாழ்க்கை சிறியது
இணையில்லா இணையதள வசதி இருந்தும்
இடைவிடாமல் பேச கட்டணமில்லா அழைப்பு இருந்தும்
நாள் முழுவதும் செலவிட முகநூல் இருந்தும்
நீ மட்டும் இல்லை என்னுடன்
பிரிவின் வலிகளுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளும், பெரும் பற்றுகளும் முக்கிய காரணமாகின்றன. ஆகவே இவற்றை வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள். மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படியுங்கள். உங்களுடைய பிரிவு வலியெல்லாம், அவற்றுக்கு முன்பு ஒன்றுமே இல்லை எனத் தோன்றும்.
பிரிவை நினைத்து வருந்துவதை விட, அந்த உறவின் இனிய நிகழ்வுகளை நினைத்து, ஏதாவது ஒரு நற்செயலைச் செய்யுங்கள்