அறிவின் பிறப்பிடம்....அப்பா.. ஆலமரத்து நிழல்....அப்பா....
feeling appa kavithai in tamil அப்பா...அப்பா... அப்பா...இன்று பல மகன்கள் அப்பாவின் உழைப்பையும், அறிவையும் பெற்றுதான் வாழ்க்கையில் முன்னேற்றமடைந்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.;
feeling appa kavithai in tamil
அப்பா...அப்பா...அப்பா...ஆம் இந்த மூன்றெழுத்து வசீகர மந்திரத்தின் அருமையை பெரும்பாலானோர் அவர்கள் இருக்கும்போதும், அவர்களுடன் இருக்கும்போதும் உணர்வதில்லை... அவர்களுக்கு பின்னர் தான் அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் வசீகரமும், பவரும் தெரிகிறது.
வடிவேலு.... ஒரு படத்துல சொல்றாரே... இவன் எப்படி? எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்னு...அதுபோல குடும்பத்தில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதனை யாரிடமும் சொல்லாமல் காய் நகர்த்துபவர்தான் திறமையான அப்பா..அந்த சூட்சுமம் அவருக்கு மட்டுந்தான்.. தெரியும்.. அம்மாவுக்குகூட தெரியாதுன்னா பார்த்துக்குங்களேன்...
feeling appa kavithai in tamil
feeling appa kavithai in tamil
இந்த காலத்திலாவது அம்மாவும் சேர்ந்து வேலைக்கு போறாங்க.. அதாவது பெண்களுக்கு விடுதலை, சுதந்திரம் இருந்தது. ஆனால் கடந்த 30 வருஷத்துக்கு முன்பாக அவ்வளவாக பெண்களுக்கு வேலை வாய்ப்பில்லாத காலத்திலும் ஒரே சம்பளத்தில் தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கிய பெருமை பல அப்பாக்களைச் சாரும்.. அவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரே ஒரு கஷ்டம் கூட தெரியாமல் வளர்த்த தகைமைசால் தியாகி என்று கூட சொல்லலாம்.
கவிஞர் பாரதி தாசன் எழுதிய நுால்தான் குடும்ப விளக்கு.. ஆனால் தமிழகத்தினைப்பொறுத்தவரை ஒவ்வொரு அப்பாக்களுமே ''குடும்ப விளக்கு'' தாங்க...அந்தவிளக்கு அணைந்த பின்னர்தான் அதன் வெளிச்சம் எவ்வளவு துாரத்திற்கு பயனடைந்தது என்பது தெரிகிறது. எப்படி இருளை அகற்றி வெளிச்சத்தினை அந்த விளக்கு பரவச்செய்கிறதோஅதுபோல் குடும்ப கஷ்டங்களை தாம் ஒருவரே தாங்கிக்கொண்டு தகர்த்தெறிந்தவர்.
அக்கால அப்பாக்களுக்கு மகன்கள் செலுத்தியது மரியாதை. அதேபோல் அப்பாக்களும் மகனிடம் தேவையில்லாமல் பேசவே மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. எல்லாம் அம்மாவின் மூலம்தான் தகவல் பரிமாற்றங்கள்... நீங்கதான் அக்கால சினிமாவில பார்க்கிறீங்களே அதுபோலவே தாங்க...
ஆனால் இக்காலத்திலோ அப்பாக்களெல்லாம் முதியோர் இல்லத்தில்... இதை நினைத்துதான் பார்த்திருப்பார்களா? அவர்கள் தங்கள் வாழ்க்கையில்... வாழ்ந்து பாருங்க... அப்போதுதான் அருமை பெருமை தெரியும்..இன்று அவர்களுக்கு நாளை... நமக்கு...இவ்வளவுதாங்க வாழ்க்கை....வேறொன்றுமில்லீங்க...
feeling appa kavithai in tamil
feeling appa kavithai in tamil
மரங்களின் ஆழத்தினை அந்த வேர்கள் தாங்கி பிடிப்பது யாருடைய கண்களுக்கும் நமக்கு தெரிவதில்லை..
அதுபோலவே குடும்ப கஷ்டத்தினை தாங்கும் பல அப்பாக்களின் அருமையை உழைப்பை பலரும் உணர்வதில்லை...
கண்டிப்பில் அவர் ஒரு ஆங்கிலேய அவதாரம்...
கனிவில் அவர் அம்மாவின் மறு பிரவேசம்...
படிப்பில் அவர் ஒரு கண்டிப்பான ஆசிரியர்...
பொறுப்பில் அவர் ஒரு ... பொறுமை சாலி...
துன்பத்தினை மனதில் பூட்டி வைத்துக்கொண்டு
வெளியில் அட்டகாசமாக சிரித்திடுவார் அப்பா..
அப்பப்பா... எப்படிப்பா...இது... என கேட்க தோன்றுகிறதே... இப்போது? ....எப்படிப்பா?
மனதில் துாக்கியது பத்தாது என்று திருவிழாக் காலங்களில்
நம்மை தோள் உயரத்திற்கு துாக்கி காட்டியவர்தான் அப்பா....
feeling appa kavithai in tamil
feeling appa kavithai in tamil
அம்மா... பத்து மாதம் கருவில் சுமந்தாள்...
அப்பா...வாழ்நாள் முழுக்க இதயத்தில் சுமப்பார்...
தாயில் சிறந்த கோயிலும் இல்லை...தந்தை சொல்
மிக்க மந்திரம்இல்லை... அனுபவ சாலி அப்பா....
கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்..
அதுதாங்க... அப்பா.... கண்டிப்பின்மறு உருவம்..
பாசத்திற்கு பாசம்... கண்டிப்பிற்கு கண்டிப்பு... அப்பா...
குடும்ப முன்னேறத்திற்காக நேரம் பார்க்காமல்
உழைக்கும் உழைப்பாளிதாங்க அப்பா...
ஊராரும் மெச்சும் வகையில் பிள்ளைகளை படிக்க
கஷ்டப்படுபவர்தாங்க....அப்பா.... அப்பா...
.feeling appa kavithai in tamil
feeling appa kavithai in tamil
அப்பா...அழுததை நான் ஒரு நாளும் பார்த்ததில்லை...
பேசிய வார்த்தைகளி்லும் வலி இருந்ததில்லை... பாசம்..
மனதிலிருந்த வேதனைகளை வெளியில் சொன்னதும் இல்லை... உருகிய மெழுகுவர்த்தி தான் அப்பா...
அப்பாவுக்கு அகராதியில் ஆயிரம் பொருள் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம்... ஒருங்கே இணைந்தவர் அப்பா...
நடக்க தெரியாத போது நடை காட்டிய ஆசான்...
சைக்கிள் ஓட்டகற்றுக்கொடுத்த குரு...
தாம் கற்ற பாடங்களை அனுபவத்தின் வாயிலாக
கற்றுக்கொடுக்கும்...இல்லத்து ஆசிரியர் அவர் அப்பா...
உழைத்த உழைப்பு வெளித்தெரியாமல் இருப்பார் அப்பா...
கவலைகளை மனதில் போட்டு பூட்டிக்கொள்வார் அப்பா..
அவரது பல தியாகங்களே இன்று நம்மைஆளாக்கின... அப்பா... தியாகத்தின் மறு உருவம்தான் அப்பா... அப்பா...
வாழ்க்கையில் எத்தனை அவமானங்கள் பட்டாலும்
அமைதியின் பிறப்பிடமாய் சாந்த சொரூபியாய்...
வீட்டினைக் கட்டிக் காத்தவர்தான் அப்பா...
வாழ்வின் முன்னேற்றம் வரை சலிக்காது உழைத்தவர் அப்பா...
ஈடு இணையில்லாமல் கிடைப்பதுதான் தந்தை பாசம்
எதிர்பாராது உதவும் மனம் படைத்தவர்தான் அப்பா...
உலகில் நம் வாரிசுகளும் சிறந்து வாழ வேண்டும் என
வழி ஏற்படுத்தி நமக்குவிடை கொடுப்பவர்தான் அப்பா..
தாய்க்கு தரும் சிறப்பிடம் தந்தைக்குமில்லை
தாயின் சிறப்பிடத்திற்கே வழிகாட்டி தந்தைதான்
பாதுகாப்பு ,துணிவு, பாசம், நேசம்,
இவையனைத்தும் பிறந்த இடம் அப்பா...
இன்றைய இளைய தலைமுறைகள் நாட்டின் தொழில்நுட்பத்தினை கற்றுக்கொண்டு அயல் நாட்டில் சென்று வேலை வாய்ப்பு பெற்று விடுகின்றனர். பலர் அங்கேயே பச்சை கார்டு உரிமம் பெற்று நிரந்தரமாகவும் தங்கிவிடுகின்றனர்.
ஆனால் இவ்வளவு வளர்ச்சிக்கு வித்திட்ட ஆலமரத்தினை அடியோடு மறந்துவிடுகின்றனர் அதாவது பெற்றோர்களை. அவர்களும் பல தியாகங்கள் செய்த வகையில் இதனையும் ஒரு தியாகமாக எடுத்துக்கொண்டு வாழ்ந்து முடிகின்றனர்.தன் இளமைக்காலத்தினை குடும்பத்திற்காக செலவிட்ட பல பெற்றோர்கள் வயதான போது தன்னைக்காக்க மகன்இருப்பான், மகள் இருக்கிறாள் என்று மார்தட்ட முடியாத நிலைதான் என்று? என்ன செய்ய?