காலாவதியான உணவு பொருட்கள்: பயன்படுத்தும் முன் தேவை எச்சரிக்கை

காலாவதியான உணவு பொருட்களை பயன்படுத்தும் முன் தேவை எச்சரிக்கை என இந்திய தர நிர்ணய ஆணையம் கூறி உள்ளது.

Update: 2024-07-04 16:14 GMT

காலாவதி தேதியை அவசியம் கவனிக்க வேண்டும் கடைகளில் காலாவதி தேதியை கவனித்து உணவு பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறது. அது உங்களுக்கு தெரியுமா என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பொதுவாக உணவு மருந்து பொருட்களில் காலாவதி தேதி எக்ஸ்பைரி டேட் அல்லது இந்த தேதிக்கு முன்பு பயன்படுத்துவது சிறந்தது. பெஸ்ட் பிஃபோர் டேட் என்பது இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய எண்ணை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை அறிந்து கொள்வோம்.

இந்த தேதிக்கு முன் பயன்படுத்துவது சிறந்தது என்றால் பரிந்துரைக்கப்பட்ட தேதிக்கு அப்பால் அந்த உணவின் தரம் சுவை அல்லது மிருதுவான தன்மை ஒரே மாதிரியாக இருக்காது. அதேபோல காலாவதி தேதி என்பது ஒரு தேதியை கடந்த உணவு பொருள் பயன்படுத்த பாதுகாப்பானது அல்ல என்று குறிப்பிடுகிறது. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை பொருத்தவரை அவற்றில் உள்ள பொருட்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தேதியில் அவை பாதுகாப்பானதா இல்லையா என்று முடிவு செய்ய லேபில்களை  படிப்பது மிகவும் முக்கியமானது.

சில உணவுகளில் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பாக்டீரியா போன்றவற்றின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே காலாவதி தேதியானது அவை பயன்படுத்த பாதுகாப்பானவை அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள உதவுகிறது. உணவுப் பொருட்களை வாங்கும் போது எப்போதும் உற்பத்தி தேதியை சரி பார்க்க வேண்டும். உற்பத்தி தேதியானது உங்களுக்கு உற்பத்தி மற்றும் பேக்கிங் செய்தியை தெரிவிக்கிறது. காலாவதி தேதி அன்னாள் வரை தான் அந்த உணவுப் பொருள் பயன்படுத்த தகுதியானது என குறிப்பிடுகிறது. இந்த தேதிக்கு முன் பயன்படுத்துவது சிறந்தது என்பது அந்த நாள் வரை தான் குறிப்பிட்ட உணவு பொருள் உட்கொள்ளும் சரியான தன்மையில் இருக்கும் என்பதை காட்டி குறிப்பிடுகிறது.

இவ்வாறு இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு 10 ஏப்ரல் 2024 அன்று பேக் செய்யப்பட்டு அதற்கு பெஸ்ட் பிஃபோர் தேதி மூன்று மாதங்கள் என்றால் தரம் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருப்பதை உறுதி செய்ய இந்த உணவை ஜூலை 10 ,2024 க்குள் பயன்படுத்த வேண்டும். அந்த தேதிக்கு பிறகு உணவுப் பொருளானது சுவை புதிய தன்மை நறுமணம் அல்லது ஊட்டச்சத்துக்களை இழக்கக்கூடும்.

ஆனால் அந்த உணவு பாதுகாப்பாக இருக்காது என்று அர்த்தமல்ல பின் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது மறுபுறம் காலாவதி தேதியானது உணவு உட்கொள்வதற்கு பாதுகாப்பு பெற்றதாக இருக்கும் தேதியை குறிக்கிறது இந்த தேதிக்குப்பின் உணவுக் கொண்டால் அது உங்கள் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.

Tags:    

Similar News