Essentials of hair care- தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம்; அதுபற்றி தெரிஞ்சுக்கலாமா?

Essentials of hair care- மனித முகத்துக்கே அழகு சேர்ப்பது தலைக்கேசம்தான். அப்படிப்பட்ட தலைமுடியை தினமும் பராமரித்து சீவுவது குறித்து தெரிந்துக்கொள்வோம்.;

Update: 2024-01-24 10:03 GMT

Essentials of hair care- பராமரிப்பு இல்லாத சீவப்படாத கூந்தல், பராமரிக்கப்பட்ட சீவிய கூந்தல் (கோப்பு படங்கள்)

Essentials of hair care- தினமும் தவறாமல் பல் துலக்குவது போல தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம். இந்த எளிய விஷயம் நம் தலைமுடிக்கு பல நன்மைகளை அளிக்கிறது. எனவே ஆரோக்கியமான முடியை பெற நீங்கள் தினமும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒரு முடி பராமரிப்பு வழக்கம்.

தலை முடியை சீவுவது. வறண்ட முடி உள்ளவர்கள் அல்லது அதிகமானமுடி உதிர்தலை சந்திப்பவர்கள் கூடுதல் முடி இழப்பை தவிர்ப்பதற்காக சீப்பு பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் தலை முடியை சீவ சீப்பு பயன்படுத்துவது ஒரு சுய பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.


காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். நீண்ட முடி கொண்டவர்கள் சிக்கு மற்றும் முடி உடைவதை தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை தலை சீவ அறிவுறுத்தப்படுகிறது.

கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் முடிகளில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கூந்தலைப் பின்னுவதன் மூலம் இயற்கையான எண்ணெய் பசையையும், ஈரப்பதத்தையும் தக்கவைத்து கூந்தல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

தலைமுடியை விரித்த நிலையிலேயே வைத்திருப்பதால் சூரியஒளி, காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளால் முடிக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளை குறைக்க முடியும். கூந்தலை அலைபாயவிடாமல் கட்டி வைப்பதன் மூலம், தலைமுடியின் முனையில் வெடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


சுருள்முடி கொண்டவர்கள் கூந்தலை பின்னிக்கொள்வதால் தலைமுடி வறட்சி அடைவதைத் தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

உச்சந்தலையையும் கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் பொடுகு நிறைந்த முடியை புதுப்பிக்கிறது. தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க, அடர்த்தியை அதிகரிக்க, ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடனும் பராமரிக்க உதவுகிறது.

Tags:    

Similar News