மலர்ந்தும் மலராத பாசமலர் அண்ணன் தங்கை உறவு கவிதைகள் Emotional Brother and Sister quotes in Tamil
அண்ணன் தங்கை பாசத்தை குறிக்க அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாசமலர் படத்தையே உதாரணமாக இன்றளவும் கூறப்படுகிறது;
1961ம் ஆண்டு வெளியான படம் பாசமலர். படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் கடந்தாலும், யாரேனும் அண்ணன் தங்கையையும் அவர்களின் பாசத்தையும் கிண்டலாகச் சொல்லவேண்டுமெனில், 'பெரிய பாசமலர் சிவாஜி, சாவித்திரினு நினைப்பு' என்றுதான் சொல்லுவோம். ஏதேனும் ஒரு தருணத்தில், அண்ணாவுக்காக தங்கையோ, தங்கைக்காக அண்ணனோ விட்டுக்கொடுக்கிற தருணங்களில், 'அடடா... பாசமலர் படம் காட்றாய்ங்கப்பா' என்றுதான் அவர்களைக் கேலியும் கிண்டலுமாகப் பேசுவோம்.
அண்ணன் தங்கை உறவு என்பது அந்த அளவிற்கு பேசப்படுகிறது. இது குறித்த சில வரி கவிதைகளை உங்களுக்காக தருகிறோம்.
- சிறு வயதில் தேவதையை காண ஆசைப்பட்டேன் அப்போது எனக்கு தெரியவில்லை கூட விளையாடுவது ஒரு குட்டி தேவதை என்று
- கூடப்பிறந்த அக்கா இல்லையே என்று ஏங்காத ஆண்களும் இல்லை, கூடப்பிறந்த அண்ணன் இல்லையே என்று ஏங்காத பெண்களும் இல்லை
அண்ணனுடன் பிறந்த தங்கைகளுக்கு மட்டுமே தெரியும்!
அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று
- தன் தங்கைக்கு தான் தந்தை என உணரும் தருணத்தில், ஆண் அழகாகிறான்
அண்ணன் தங்கை உறவுவலிக்காமல் குட்ட தங்கைக்கு மட்டுமே தெரியும்,
வலிப்பது போல நடிக்க அண்ணனால் மட்டுமே முடியும்
- தவறு செய்கையில் சொல்லிக் காட்டி புரியவைப்பவர்கள் மத்தியில், புருவத்தை கொஞ்சம் உயர்த்தி காட்டியே புரியவைப்பவள்! அக்கா!