ஆண்களின் விறைப்பு தன்மை குறைபாட்டிற்கு காரணம் என்ன தெரியுமா?
erectile dysfunction meaning in tamilஆண்களின் விறைப்பு தன்மை குறைபாட்டிற்கு காரணம் என்ன தெரியுமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.;
erectile dysfunction meaning in tamilஆண் உறுப்பு விறைப்பு குறைபாடு என்பது பலருக்கு ஒரு உடல் சார்ந்த நோயாகும். விறைப்பின்மை வேறு நோய்களின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் குறைபாடு மற்றொரு காரணமாகும். மேலும் நீரிழிவு (சர்க்கரை நோய்) ஒரு முக்கிய காரணமாகும். நிறைய நீரிழிவு நோயாளிகளை இப்பிரச்சனை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
erectile dysfunction meaning in tamilபோதைப் பொருள் உபயோகித்தல் மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மது குடித்தல்,மற்ற போதைப்பொருள் பயன்படுத்துதல் விறைப்பின்மையை அதிகப்படுத்தும். சிலருக்கு இது மன உணர்ச்சிகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். மன அழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை போன்ற உளவியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.
erectile dysfunction meaning in tamilஉடலுறவு பற்றிய பதற்றம் (Sex Performance Anxiety), உடலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (Relationship Failure, Fear of intimacy) போன்றவையும் காரணமாக இருக்கலாம். சிலருக்கு சிறு வயதிலிருந்து அதிகப்படியான கைப்பழக்கம் இருந்தால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக விறைப்பின்மை ஏற்படலாம்.புரஸ்டேட் நோய், முதுகு தண்டில் ஏற்படும் பிரச்சனை ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
erectile dysfunction meaning in tamilவேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக்குறைபாடு ஏற்படலாம். இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
erectile dysfunction meaning in tamilமருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும். உடலுறவின்போது ஆண் உறுப்பு போதிய அளவு விறைப்படையாமல் போவதால் உடலுறவு முழுமை பெறாமலிருக்கும். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இருப்பினும் இது தொடர்ச்சியாக நிகழும்போது அது Erectile Dysfunction என்று அழைக்கப்படுகிறது. ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு விறைப்பின்மை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
erectile dysfunction meaning in tamilசிலருக்கு விறைப்பின்மை லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும். வயது அதிகமாகும்போது விறைப்பின்மை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இளைஞர்களுக்கு விறைப்பின்மை ஏற்படுவது பெரும்பாலும் உள்ளம் சார்ந்தத விஷயமாகும்.
erectile dysfunction meaning in tamilநிறைய பேர் விறைப்பின்மை குறைபாடை மறைத்து நண்பர்களிடம் வாய்ச்சொல்லில் வீர்ர்களாக காண்பித்து கொள்வார்கள். ஆனால் படுக்கை அறையில் நடக்கும் உண்மை வேறு. இதன் முக்கியமான விஷயம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார்களே தவிர சரியான மருத்துவ சிகிச்சை பெறுவதில்லை
erectile dysfunction meaning in tamilமேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டோஸ்டீரான் குறைபாடு இருக்கிறதா என அறிய இரத்தப்பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார். ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவை பரிசோதிக்கப்படும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன பரிசோதிக்கப்படும்.
erectile dysfunction meaning in tamilநீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம். புகைத்தல், மதுப்பழக்கம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். அல்லது நிரந்தரமாக நிறுத்துவது மிகச் சிறந்தது. அறிகுறிகளுக்கேற்ற மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் நல்ல பலனைக் கொடுக்கின்றன.