இந்த உணவுடன் இதை சாப்பிடக் கூடாது - ஏன் தெரியுமா?
Do not take it with this food- சில உணவுகளை சாப்பிடும் போது, சில வகை உணவுகளை சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்தை பாதிக்கிறது. அதுகுறித்து தெரிந்துக் கொள்வோம்.
Do not take it with this food- பால், பழம் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும் வழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்கிறது மருத்துவ உலகம். அவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும். செரிமானம் மந்தமாக நடக்கும், இந்த கலவை உருவாக்கும் ஒருவித நச்சுத்தன்மை மன நல செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.
பாலையும், வாழைப்பழத்தையும் தனித்தனியாக உட்கொள்வதே சிறந்த செரிமானத்துக்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவிடும் என்கிறார்கள். பால், பழத்தை போலவே சேர்ந்து உட்கொள்ளக்கூடாத உணவுப்பொருட்கள் நிறைய இருக்கின்றன.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருந்தாலும், பழங்களை உணவோடு சேர்த்து உட்கொள்வது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார், மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ராகுல் குரானா.
பழங்கள் விரைவாக செரிமானமாகிவிடும். ஆனால் தானியங்கள், இறைச்சிகள் மெதுவாக ஜீரணமாகக்கூடியவை. இரண்டும் இணையும்போது நொதித்தல் செயல்முறையில் மாறுபாடு ஏற்படும்.
தன் காரணமாக வயிறு வீக்கம், வாயுத்தொல்லை போன்ற அசவுகரியங்கள் உண்டாகும். இதனை தடுக்க பழங்களை உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு உட்கொள்வது நல்லது.
தானியங்கள் - ஜூஸ்
தானியங்களுடன் ஜூஸ் பருகுவதும் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்காது. ஏனெனில் இவை ஒன்று சேரும்போது நீடித்த உடல் ஆற்றலுக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்காது.
இந்த கலவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்புக்கும், சோர்வுக்கும் வழிவகுக்கும். ஜூஸுக்கு பதிலாக பழங்களை அப்படியே சாப்பிடுவதும், புரதம் நிறைந்த உணவுகளை காலையில் உட்கொள்வதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.
பர்கர் - பொரித்த பொருட்கள்
இந்த துரித உணவுகள் ருசியான கலவையாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதிக நேரம் சமைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை அதிக கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட பொருட்களுடன் இணைத்து சாப்பிடுவது செல்களை சேதப்படுத்தும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடும்.
கார்போஹைட்ரேட்டுகள் - தக்காளி
தக்காளி அமிலத்தன்மை கொண்டது. அதனை அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளுடன் உட்கொள்ளும்போது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இந்த கலவை அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். இதனை தவிர்க்க தக்காளியை குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.
பழம் - யோகர்ட்
யோகர்ட்டில் இருக்கும் புரோபயாடிக் ஏராளமான நன்மைகளை கொண்டது. அதை பழங்களுடன் இணைப்பது ஒவ்வாமையையும், நெஞ்செரிச்சலையும் அதிகப்படுத்தக்கூடும். சைனஸ், சளி அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் பால் பொருட்களுடன் பழங்களை இணைந்து உட்கொண்டால் நிலைமையை மோசமாக்கும்.
வெறுமனே யோகர்ட் உட்கொள்வது அல்லது பால் பொருட்களுக்கு மாற்று உணவு வகைகளை தேர்ந்தெடுப்பது இந்த சிக்கல்களை குறைக்க உதவும்.
தானியங்கள் - பால்
அரிசி, கோதுமை, கம்பு, ஓட்ஸ், பார்லி, தினை போன்ற தானியங்களுடன் பால் சேர்த்து உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடக்கூடும். உடல் சோர்வுக்கும் வழிவகுக்கும். தானியங்கள் மற்றும் பால் இரண்டிலும் வேகமாக ஜீரணிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
அவை உடலிலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இவற்றை குறைவாக உட்கொள்வது அல்லது மாற்று பொருட்களை தேர்ந்தெடுப்பது நலம் சேர்க்கும்.
பீட்சா - சோடா
இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது உடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து செரிமானத்துக்கு அசவுகரியத்தை உண்டாக்கிவிடும். இரண்டிலும் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். தண்ணீர் அல்லது ஆரோக்கியமான பானங்களை தேர்ந்தெடுப்பது சிறந்த செரிமானத்துக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவிடும்.