தித்திக்கும் தீபாவளி வந்துடுச்சு.... டம்...டம்....டுமீல்...பட்டாசு சப்தம் போங்க.....
Diwali Kavithai in Tamil-ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது தீபாவளி... தீப ஒளி பரவட்டும்... இருள் அகலட்டும்..;
Diwali Kavithai in Tamil
Diwali Kavithai in Tamil
தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஒவ்வொரு ஆண்டும்ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகையானது இந்து , சீக்கியம், சைனம் , பெளத்தம் உள்ளிட்டமதங்களின் சார்பில் கொண்டாடப்படுகிற சிறப்பு மிக்க பண்டிகையாகும்.வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
நேபாளம், லங்கை, இந்தியா, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இப்பண்டிகைக்காக அரசுவிடுமுறை விடப்படுகிறது. சமணர்களும், சீக்கியர்களும் கூட இப்பண்டிகையினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியாஆகிய கடல் கடந்த நாடுகளிலும் இதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து கங்காஸ்நானம் செய்வார்கள். பின்னர் அனைவரும் புத்தாடை உடுத்தி பட்டாசுகள் வெடிப்பர். அன்றைய தினம் இனிப்புகள் செய்து உறவினர்கள், நண்பர்கள், உள்ளிட்ட அனைவருக்கும்வழங்கி உற்சாகமடைவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்று பின்னர் தங்களுடைய இஷ்ட தெய்வ கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது வழக்கமாகிக்கொண்டுள்ளனர்.
மேற்கு நாடுகளில் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்கள் அனைவருமே உலகம் முழுக்க கொண்டாடப்படும் ஒரே பண்டிகை இது. அங்கு இது பெஸ்டிவல் ஆஃப் லைட்ஸ் என கொண்டாடப்படுகிறது.
தித்திக்கும் தீபாவளி
அக்காலத்தில் தீபாவளி் என்றாலே வீடுகளில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துஒரு வாரத்திற்கு முன்பாகவே ஸ்வீ்ட் கார தயாரிப்பில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு வெரைட்டியாக செய்து அனைத்தையும் டப்பாக்களில் போட்டு வைத்துவிடுவார்கள். அதுவும் யார்கைக்கும் எட்டாத வகையில் ரவாலட்டு, பர்பி, மைசூர்பாகு, லட்டு ,முறுக்கு, மிக்சர்.ஓட்டுபக்கோடா என வைத்துவிடுவார்கள்.
ஆனால் நம்பாளுங்க...என்ன பண்ணுவாங்க தெரியுமா...அந்த ஏரியாவில் ஆள் இல்லாத போது எப்படியும் மேலே ஏறி எடுத்துக்கொண்டிருக்கும்போதே ஆள் வந்துவிடுவார்கள். உடனடியாக அவசரத்தில் மூடியை சரியாக மூடாமல் வந்துவிடுவார்கள். இதன் வாசனையை வைத்து வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடித்து பின்னர் மீண்டும் மேலே ஏறி புலம்பிக்கொண்டே மூடியை சரியாக மூடி வைத்துவிடுவார்கள். .. இது தீபாவளித்ரில் அனுபவம்...
இப்பல்லாம் அப்படி இல்லீங்க... ஊர் முழுக்க தீபாவளி ஸ்வீட் கடைகள் அதிகம் இருப்பதால் அங்கேயே ஆர்டர் கொடுத்து ஒரு நாள் முன்னதாக வீட்டுக்கு வந்துவிடும். அதேபோல் கேட்டரிங் நடத்துபவர்களும்ஆர்டரின் பேரில் வீட்டில் செய்வது போல் செய்வதால் அவர்களிடம் ஆர்டர் கொடுத்து வாங்குபவர்களும்உ ண்டு.
அப்ப எல்லாம் தீபாவளி லேகியம் என வீட்டில் செய்வார்கள். இப்போது அதுவும் ரெடிமேடாக கடைகளில் விற்கிறார்கள்... என்னத்த செய்யப்போறாங்க.. ஆனால் ஐதீகத்தில் வீட்டில் வடை சட்டி வைத்து அன்றைய தினம் ஏதாவது செய்யவேண்டும் என்பதால் வடையோ, குலோப்ஜாமூனோ அன்றைய தினம் வீட்டுபெண்கள் செய்து கணக்கினை சரி செய்துவிடுவார்கள். எப்புடீ--? நாங்க???
மேலும் உற்றார், உறவினர்கள்,நண்பர்கள், உள்ளிட்ட அனைவருமே அன்றைய தினம் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். அக்காலத்தில்வாழ்த்து அட்டை பிரபலம்.தபாலில் வரும்.. ஆனால் காலப்போக்கில் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என வாழ்த்து சொல்லி வருகின்றனர்... அதுபோல் வாழ்த்து கவிதைகளும் வருவதுண்டு... பார்ப்போமோ?
வாழ்க்கையின் புதிய கனவுகள், நம்பிக்கைகள்
புதியதாக கண்டுபிடிக்க பல வழிகள்,
மாறுபட்ட பார்வைகள், ஒளிவிளக்கால் பிரகாசமாகட்டும்..
ஆச்சர்யங்கள்...அழகானவை.... வெற்றிதரட்டும்.. தீபாவளி வாழ்த்துகள்...
லக்ஷ்மி ஜீ கா ஹத் ஹோ, சரஸ்வதி ஜீ கா சாத் ஹோ,
கணேஷ் ஜீ கா நிவாஸ் ஹோ,
ஆப்கே ஜீவன் மேன் கூப் பிரகாஷ் ஹோ! "
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்"
பட்டகஷ்டங்களும், துன்பங்களும்,. பிரச்னைகளை இந்த பட்டாசு சப்தம் எரித்து விலக்கட்டும்.. அமைதியான மகிழ்ச்சியானதுபட்டாசுகள் நம்முடைய கஷ்டங்கள், பிரச்சினைகள் மற்றும் துக்கங்கள் அனைத்தையும் எரிக்கட்டும், இவை இந்த அற்புதமான தீபாவளிக்கு மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு நம் வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும். தீபாவளி வாழ்த்துகள்...
அதிகாலை கங்காஸ்நானம், புத்தாடைகள்,
இனிப்புகள்... கொண்டாடந்தான்தீபாவளி...
வீட்டிலுள்ள இருளை அகற்ற விடியல் பிறக்குது
தீபாவளி... விடியல் பிறக்குது தீபாவளி..
நரகாசுரனை வதம் செய்தநாள்..நரகாசுரன் ஒரு இருள்..
நிரந்தரமாக இருளை அகற்றியதினால் தீபஒளி பரவிடும்..
கொண்டாடுவோம்.. உற்சாகத்தோடு... தீபஒளியை...
இல்லாதோர்க்கும் அளித்து உற்சாகத்தோடு... தீபாவளி...
தீபஒளியின் வண்ண வண்ண நடனங்கள்
வேறு கோலத்தில் காணுகையில் உள்ளம் களிப்புறுது...
இருளான வானத்தில் வண்ணங்களைத் துாவி
ஒளிரும் ஒளியில் சிதறுது மத்தாப்பூக்கள்....
புத்தாடை உடுத்தி அனைவரும் புதுவேடம்
தரித்து வாய் நிறைய இனிப்புகளுடன் கொண்டாட்டம்...
எதிர்கால வாழ்வின் உன்னத ஒளியை தருது தீபஒளி
வாழ்வில் பெற்ற இருள் அனைத்தும் அகற்றட்டும்..
இருளைக்கிழித்து ஒளி புகுவது போல வாழ்வின்
துன்பங்களை தீபாவளி போக்கிடட்டும்... வாழ்த்துகள்
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கங்காஸ்நானம்
உடல்அழுக்கை போக்கி மனஅழுக்கை போக்குது தீபஒளி
வாழ்வின் நிரந்தர இருளை அகற்றப்போகுது இந்த ஒளி
புத்தாடைகளும், பட்டாசு, இனிப்பு அனைத்துமே உனக்கு பரிசுகள்...கொண்டாடு...உற்சாகத்தோடு...
கொரோனா போன்ற கொடிய நோய்கள் அகலட்டும்
கொடுமையான நோய் பரவலை ஒழிக்கட்டும் இத் தீபஒளி
நோயற்ற வாழ்க்கை முறையினை தந்து செல்லட்டும்...
வாழ்த்துகள்... வாழ்த்துகள்...வாழ்த்துகள்...வாழ்த்துகள்.
புத்தம்புதுதிருமண ஜோடிகளுக்கு இது தலைதீபாவளி...
என்றென்னும் வரும் ஆண்டுகளும் இன்பத்தை தரட்டும்..
விரைவில் வீட்டில் மழலைக்குரல் ஒலிக்கட்டும்..
தீப ஒளித்திருநாளை உற்றாருடன் உற்சாகமாக கொண்டாடு...
இருப்பவர்கள் இல்லாதோர்க்கு கொடுக்க வேண்டும்..
நமக்கு இறைவன் ஓரளவு அளித்துள்ளான்...நம்மால்
முடிந்த உதவிகளை இல்லாதோர்க்கு செய்வோம்இந்நாளில்...
அவர்களும் மனங்குளிர்ந்து உற்சாகமாக கொண்டாட...
மனதை ஆக்ரமித்துள்ள பொறாமை, வஞ்சம், பழிதீர்த்தல்
உள்ளிட்ட நற்குணங்களாகிய இருள் முழுமையாக அகலட்டும்...
உண்மையான அன்பை தர நல்லகுணங்கள் பரவட்டும்...
தீபஒளியோடு.. அன்போடு உபசரிப்போம்
இந்நன்னாளில்...வாழ்த்துகள்.. வளமுடன் வாழ்க...
இந்த தீபாவளி நன்னாள் எங்கும் தன் ஒளியை நிரப்பட்டும்,,
ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியை பரப்பட்டும்,
ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையை கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், புன்னகையும் என்றென்றும் அவர்கள் மனதில் தங்கட்டும்,
மகிழ்ச்சியைப் பரப்பி மற்றவர்களின் உலகத்தை ஒளிரச் செய்வதன் மூலம் திருவிழாவை உண்மையான அர்த்தத்தில் கொண்டாடுவோம்.மகிழ்ச்சியான, பாதுகாப்பான, தீபாவளி!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2