Constipation- குளிர்காலத்தில் மலச்சிக்கல் வராமல் தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்

Constipation- மார்கழி மாதம் வரும் ஞாயிறு அன்று துவங்கும் நிலையில், குளிர்காலத்தில் மலச்சிக்கல் வராமல் தடுக்க தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Update: 2023-12-15 06:19 GMT

Constipation- குளிர்காலத்தில் மலச்சிக்கலை தவிர்க்க உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் (கோப்பு படம்)

Constipation, Winter, Foods, Avoidance- குளிர்காலம் வந்தாலே மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு கவலை வந்துவிடும். வழக்கத்தை காட்டிலும் குளிர்காலங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதை அதிகப்படுத்தும் உணவுகளை கண்டு அதை தவிர்ப்பதன் மூலம் பெருமளவு இந்த பாதிப்பை தவிர்த்துவிடலாம்.

குளிர்காலத்தில் மலச்சிக்கலை தூண்டும் உணவுகளின் பட்டியல்

உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் இந்த செயல்பாடு முடங்கினால் கழிவுகள் தேங்கி உடல் படும் உபாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அத்தகைய கழிவு மலமாக வெளியேறுவதில் சிக்கல் இருந்தால் நாள் முழுவதும் சிக்கல் தான்.

மலம் கழிப்பது என்பது வழக்கமான காலை பணிகளில் ஒன்று. ஆனால் இது எல்லோருக்கும் சாதாரணமாக இருந்துவிடுவதில்லை. சிலருக்கு கழிப்பறையில் நீண்ட நேரம் பிடிக்கலாம். சிலருக்கு முக்கி முக்கி வெளியேற்ற வேண்டிய நிலை இருக்கும். இன்னும் சிலருக்கு மலச்சிக்கல் என்பது கூடவே பிறந்தது போன்று எப்போதும் இருக்கும். குளிர்காலங்களில் மலச்சிக்கல் ஏன் அதிகரிக்கிறது, அதை உண்டு செய்யும் காரணங்களில் உணவுகளும் அடக்கம் என்னும் போது அப்படியான உணவுகள் என்ன என்பதையும் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.


குளிர்காலத்தில் ஏன் மலச்சிக்கல் அதிகரிக்கிறது?​

இயல்பாகவே மலம் கழிப்பதில் சிக்கல்களை உண்டு செய்யும் பருவகாலம் என்று குளிர்காலத்தை சொல்லலாம். குளிர்காலத்தில் உடல் செயல்பாடுகள் நன்றாகவே குறைந்துவிடும். குளிர்ந்த பருவநிலையில் செயலற்றவர்களாக இருக்கும் போக்கு அதிகரிக்க செய்கிறது. இது வாழ்க்கை முறை மாற்றங்களை உண்டு செய்யும் போது மலம் கழிப்பதில் முதன்மையாக பாதிப்பை உண்டு செய்கிறது.

​மலச்சிக்கல் தீவிரம் பொறுத்து வயிறு அசெளகரியம், வாயு உண்டாகும். மேலும் உடல் செயல்பாடுகள் குறைவதால் இரத்த ஓட்டம் குறைகிறது. இதுவும் மலச்சிக்கலுக்கு காரணமாகிறது. மலச்சிக்கலை தூண்டும் உனவுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

​பால் பொருள்கள் மலச்சிக்கலை தூண்டும்

பால் பொருள்கள் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் என்றாலும் கூட தொடர்ந்து பால் பொருள்கள் எடுத்துகொள்வது மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பசுவின் பாலில் உள்ள புரதத்துக்கு ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இவை கூடுதலாக உண்டாகிறது. பால் பொருள்களில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. இதுவும் மலச்சிக்கல் நிகழ்வை அதிகரிக்கிறது. ஆனால் பாலிலிருந்து பெறப்படும் தயிர் போன்ற புளித்த பொருள்கள் குடல் மற்றும் செரிமானசெயல்முறைக்கு உதவும்.


பழுக்காத வாழைப்பழங்கள் மலச்சிக்கலை தூண்டும்

நன்றாக பழுக்காத வாழைப்பழங்களை உட்கொள்வது மலச்சிக்கலை உண்டு செய்யலாம். அதே போன்று வாழைக்காயும் அதிகம் சேர்க்க கூடாது. இவற்றில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த மாவுச்சத்து பிணைப்பு விளைவை கொண்டுள்ளது. இவையும் மலச்சிக்கலை உண்டு செய்யலாம்.

பழுத்த வாழைப்பழங்கள் குடலுக்கு நன்மை செய்யும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொண்டுள்ளதால் இது மலச்சிக்கலை போக்க கூடியது.

வறுத்த உணவுகள் மலச்சிக்கலை தூண்டும்​

கண்டிப்பாக மலச்சிக்கல் இருப்பவர்கள் வறுத்த உணவு பக்கம் எப்போதுமே போக கூடாது. அதிலும் குளிர்காலங்களில் நிச்சயம் வறுத்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், குறிப்பாக நீண்ட நேரம் வறுபட்ட அசைவ உணவுகள் மலச்சிக்கலை மோசமாக்கலாம்.

கழிப்பறையில் நாள்பட சிரமப்பட்டால் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள் மீது கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இந்த வறுத்த உணவுகள் கொழுப்பு நிறைந்தவை, ஜீரணிக்க கடினமாக இருக்கும். மேலும் உணவு பெருங்குடலிலிருந்து நகர அதிக நேரம் எடுக்கும் போது அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றலாம். இதனால் மலம் உலர்ந்து கடினமாகி மலச்சிக்கலை அதிகரிக்கிறது.


​குப்பை உணவுகளும் துரித உணவுகளும் மலச்சிக்கலை தூண்டும்

​குப்பை உணவுகள் மற்றும் துரித உணவுகள் என்பது ஆரோக்கியமற்ற உணவுகளை சார்ந்தவை. ஆனால் குளிர்காலங்களில் நாவின் சுவைக்கு இவை தான் முதன்மையாக இருக்கும். ஆனால் இந்த உணவுகள் மலச்சிக்கலை தூண்டக்கூடியது. மேலும் இந்த உணவு பொருள்களில் அதிக கொழுப்புகள், உப்புகள் நிறைந்துள்ளன. மேலும் இது நார்ச்சத்து குறைவாக கொண்டிருப்பதால் இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்குகிறது.

உப்பு நிறைந்த ஜங்க் ஃபுட் உணவானது மலத்தில் உள்ள நீரின் அளவை குறைக்கிறது. மேலும் மலம் உடலில் இருந்து வெளியேற்றுவதை கடினப்படுத்துகிறது. அதனால் குளிர்காலங்களில் கண்டிப்பாக இந்த உணவு பக்கம் செல்லாதீர்கள்.


​பதப்படுத்தப்பட்ட தானியங்கள் மலச்சிக்கலை தூண்டும்

மலச்சிக்கல் தடுக்க நார்ச்சத்து மிக்க உணவுகள் முக்கியபங்கு வகிக்கிறது. தானியங்கள் நல்லதே என்றாலும் கூட பதப்படுத்தப்பட்ட தானியங்களிலிருந்து தயாரிக்கபப்டும் வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்றவை நார்ச்சத்து இல்லாத உணவுகளே. இவை மலச்சிக்கலை தூண்டக்கூடியவை. இதை அதிகமாக எடுத்துவந்தால் கடினமான, உலர்ந்த மலம் வெளியேறும்.

மாறாக முழு தானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, தோசை போன்ற உணவுகள் எடுக்கலாம். இவை மலச்சிக்கலை உண்டு செய்யாது.


காஃபி டீ இரண்டும் மலச்சிக்கலை உண்டு செய்யும்

குளிர்காலத்தில் காஃபியும் டீயும் தவிர்க்க முடியாதது. ஏனெனில் குளிருக்கு இதமாக அடிக்கடி காஃபியை விரும்பினால் எச்சரிக்கை. காஃபைன் பானங்கள் அதிகமாக எடுக்கும் போது அது மலச்சிக்கலை உண்டு செய்யலாம். காஃபைன் உடலில் நீரிழப்பு உண்டு செய்து மலச்சிக்கலை தூண்டும். ஒழுங்கற்ற குடல் இயக்கங்களைஉண்டு செய்யும். இயல்பாகவே குளிரில் தாகம் குறைவதால் குறைந்த தண்ணீர் எடுக்கும் போது இவை மேலும் நீரிழப்பு உண்டு செய்து மலத்தை இறுக்கி மலச்சிக்கலை தூண்டலாம்.

நாள் ஒன்றுக்கு 2 கப் மேல் எடுக்க வேண்டாம். மாற்றுக்கு செல்ல விரும்பினால் காய்கறி சூப், மூலிகை தேநீர் போன்றவற்றையும் சேர்க்கலாம்.

​குளிரில் இனிப்பும் காரமும் மலச்சிக்கலை தூண்டும்

குளிர்காலத்தில் சூடான சுவையான காரமான உணவின் மீது மோகம் வருவது இயல்பு அதே போன்று சிலருக்கு இனிப்பு நிறைந்த உணவின் மீது மோகம் இருக்கும். இனிப்பு நிறைந்த உணவுகள் உடல்நல பிரச்சனைகளை உண்டு செய்யலாம். அதிக அளவு சர்க்கரை செரிமான அமைப்பை பாதிக்கிறது.

அதிக காரம் வயிற்றில் இரைப்பை குடல் பிரச்சனையை அதிகரிக்கிறது. அதனால் அதிக இனிப்பு, அதிக காரம் இரண்டையும் தவிர்த்து மென்மையான உணவுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம்.

Tags:    

Similar News