யானைக்கு தும்பிக்கை; மனிதனுக்கு நம்பிக்கை. தன்னம்பிக்கையை வளர்த்துக்கோங்க Confidence quotes in Tamil

Confidence Quotes in Tamil -வாழ்க்கையில் நாம் தடுமாறும்போதெல்லாம் நம்மை தூக்கி நிறுத்துவது தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை உள்ளவரால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்;

Update: 2022-09-19 09:56 GMT

தன்னம்பிக்கை

Confidence Quotes in Tamil -வாழ்க்கையில் வெற்றி பெற உழைப்பு மற்றும் திறமை மட்டும் இருந்தால் வெற்றி இலக்கை அடைய முடியாது. அதற்கு நெஞ்சு உறுதியும் தன்னம்பிக்கையும் வேண்டும். யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை என்பது பழமொழி. ஒவ்வொரு அனுபவத்திலும் நாம் வலிமை, தைரியம் மற்றும் நம்பிக்கையைப் பெறுகிறோம், அதில் நாம் உண்மையில் பயத்தை முகத்தில் பார்க்கிறோம். நம்மால் முடியாது என்று நாம் நினைப்பதைச் செய்ய வேண்டும் அது தான் தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள எந்த கல்வியிலும் வெளி சக்தியினாலும் இயலாது. உளமார உணர்ந்து நடப்பதினால் மட்டுமே தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள முடியும் .தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டுவிட்டால் ஆரோக்கியமான வாழ்வு, புதிய முயற்சிகள் தயக்கமின்றி எடுத்தால், சிறு துயரங்களை மனதில் இருந்து வெளியேற்றுதல் என்ற மனித மனதிற்கு நன்மை செய்தும் செயல்கள் தானாக நடக்கும்


தன்னம்பிக்கை இருப்பதால் ஏற்படும் நன்மைகள்

  • குறிக்கோள்களை அடைவதற்கும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் தன்னம்பிக்கை மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.
  • தங்கள் திறன்கள் மீது சந்தேகம் ஏற்படுவதில்லை என்பதினால் தயக்க மின்றி புதிய முயற்சிகளை எடுக்க முடிகிறது
  • சுய கட்டுப்பாடுகள் தாமாகவே வளர்ந்து ஒழுக்கமான வாழ்வு அமைகிறது

தியானம், அளவான உணவு , சரியான உறக்கம் ,அதிகாலை உடற் பயிற்சி போன்றவற்றை தொடங்கினாலே போதும் உங்கள் உடல் உங்களுக்கு புது புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும்

தன்னம்பிக்கை குறித்த சிறந்த பொன்மொழிகளை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க


ஒருவரின் சொந்த திறனை உணர்ந்து, ஒருவரின் திறனில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க முடியும்

ஒவ்வொரு அனுபவத்திலும் நாம் வலிமை, தைரியம் மற்றும் நம்பிக்கையைப் பெறுகிறோம், நம்மால் முடியாது என்று நாம் நினைப்பதைச் செய்ய வேண்டும்." - எலினோர் ரூஸ்வெல்ட்

வாழ்க்கை யாருக்கும் எளிதானது அல்ல. விடாமுயற்சியும் எல்லாவற்றிற்கும் மேலாக நம்மீது நம்பிக்கையும் இருக்க வேண்டும். நாம் ஏதோவொன்றிற்காக பரிசளிக்கப்பட்டவர்கள் என்று நம்ப வேண்டும், இந்த காரியத்தை அடைய வேண்டும். - மேரி கியூரி

எல்லாம் சரியாகும் வரை காத்திருக்க வேண்டாம். அது ஒருபோதும் சரியானதாக இருக்காது. எப்போதும் சவால்கள், தடைகள் இருக்கும். இப்போதே தொடங்குங்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும், நீங்கள் வலுவாக வளருவீர்கள்.


தோல்வியின் அடையாளம் தயக்கம்!

வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை!!

தயங்கியவர் வென்றதில்லை!!

பறவை ஒரு கிளையில் அமரும் போது அது நம்புவது அமர்ந்திருக்கும் கிளையை இல்லை. தனக்கு இருக்கும் சிறகுகளை தான் அது போல நீயும் உன்னை நம்பு வாழ்க்கையில் தோல்வியும் ஒரு நாள் பயந்து ஓடி விடும்.

நீ தனியாக போராட பலம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான மன உறுதியும் உன்னிடம் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்


உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்: சுவாமி விவேகானந்தர்

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை

இன்னொருவரைப் போல இருக்க நினைப்பது, இன்னொருவர் பொருளை அபகரிப்பது போன்ற திருட்டுத் தன்மை கொண்டதாகும்.. இன்னொருவரைப் போல நடப்பது என்பதே ஒரு போலித்தனம்


எனது துணிவுடைய இளைஞர்களே நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். -சுவாமி விவேகானந்தர்

செய்து முடிக்கப்படும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப் பட்டவைதாம். -கார்லைல்

உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு. தமிழ்வாணன்

வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். - கீட்ஸ்

நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அனாதை விடுதியில் இருந்த போதும், உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்: சார்லி சாப்ளின்

நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது. -புத்த பகவான்

தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.- எமர்சன்

தாங்கள் வெல்லலாம் என்று நம்புகிறவர்களே வெற்றி அடைய முடியும். – வர்கில்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News