தேநீர் அருந்தாமல் ஒரு மாதம் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - தெரிஞ்சுக்கலாமா?
Changes in the body due to not drinking tea- தேநீர் அருந்தாமல் ஒரு மாதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.;
Changes in the body due to not drinking tea- தேநீர் அருந்தாமல் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் ( கோப்பு படம்)
Changes in the body due to not drinking tea- தேநீர் அருந்தாமல் ஒரு மாதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
பலருக்கு தேநீர் ஒரு அத்தியாவசிய பானமாகிவிட்டது. காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தும் வழக்கத்தை பலர் கடைப்பிடிக்கின்றனர். இது ஒரு இன்றியமையாத பழக்கமாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து சற்று விலகி, ஒரு மாதம் தேநீர் அருந்தாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
நல்ல தூக்கம் கிடைக்கும்
தேநீரில் காஃபின் உள்ளது. இந்த காஃபின் ஆழ்ந்த தூக்கத்தைத் தடுக்கிறது. அதனால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கப் தேநீர் அருந்துபவர்கள் தூக்கமின்மை அல்லது காலையில் எழுவதில் சிரமம் போன்றவற்றை சந்திக்கின்றனர். தேநீர் அருந்தும் பழக்கத்தை விட்டுவிட்டால், உங்கள் தூக்கத்தின் தரம் அதிகரிக்கும். இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மன அழுத்தம் குறையும்
காஃபின் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. தேநீரைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் மன அழுத்த அளவை நீங்கள் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது உங்களுக்கு மன அமைதியையும், தெளிவையும் தரும்.
செரிமானம் மேம்படும்
தேநீர் அமிலத்தன்மை கொண்டது. அதனால்தான் அதிகளவு தேநீர் குடிப்பவர்கள் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தேநீரை தவிர்ப்பதன் மூலம், வயிற்றில் அமில உற்பத்தி குறைந்து செரிமானம் எளிதாகும். அதோடு தேநீரில் டானின் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது இரும்புச்சத்து உறிஞ்சுவதைத் தடுக்கிறது. தேநீர் அருந்தாமல் இருந்தால் உடலின் இரும்புச்சத்து அளவுகள் அதிகரிக்கும்.
எடை குறையும்
தேநீரில் பொதுவாக அதிக சர்க்கரை மற்றும் பால் சேர்த்து அருந்துவார்கள். இவை உடலுக்குத் தேவையில்லாத கலோரிகளை சேர்க்கின்றன. ஒரு மாதம் தேநீர் இல்லாமல் இருந்தால், இந்த தேவையற்ற கலோரிகள் சேருவதைத் தவிர்க்கலாம். இது உடல் எடை குறைய உதவும்.
நச்சுகள் நீங்கும்
தேநீரிலுள்ள ஃவுளூரைடு எனும் வேதிப்பொருள் நமது எலும்புகளில் சேர வழிவகுக்கும். ஒரு மாதம் தேநீர் குடிக்காமலிருந்தால் உடலிலிருந்து இந்த ஃப்ளூரைடு வெளியேறி எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
பற்கள் ஆரோக்கியமாகும்
தேநீரில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இது பற்களில் சொத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தேநீரைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் பற்கள் ஆரோக்கியமாகும். தேநீர் பற்களையும் ஓரளவு மஞ்சளாக்கும் என்பதால், இவ்வாறு ஒரு மாதம் இருந்தால் வெண்மையான பற்களை பெறலாம்.
ரத்த ஓட்டம் மேதேநீரிலுள்ள காஃபின் இரத்த அழுத்தத்தை சற்று அதிகரிக்கக்கூடும். அதுவே, தேநீர் குடிக்காமலிருப்பது இரத்த அழுத்தம் சீராவதற்கும், இரத்த ஓட்டம் மேம்படுவதற்கும் உதவும்.
ஆற்றல் அதிகரிக்கும்
தேநீர் அருந்துவதால் ஆற்றல் அதிகரிக்கும் என்று பலர் கருதுகின்றனர். உண்மையில் காஃபின் கிடைப்பதால் ஒரு சிலருக்கு உடனடியாக ஒருவித தூண்டுதல் கிடைக்கிறது. பிறகு சில மணி நேரங்களில் அது சோர்வை உண்டாக்குகிறது. தேநீர் அருந்தும் பழக்கத்தை நிறுத்தினால் சிறிது சிறிதாக காலப்போக்கில் ஆற்றல் அளவு அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் போன்றவை இதற்கு உதவியாக இருக்கும்.
பணம் மிச்சமாகும்
தேநீர் வாங்கி அருந்துவதற்கு நாம் செலவழிக்கும் பணத்தை கணக்கிட்டால் பெருமளவு இருக்கும். தேநீரை அருந்தாத ஒரு மாதம் பணம் சேமிக்க வழிவகுக்கும்.
குறிப்புகள்:
சிலர் தேநீர் பருகாமலிருக்க முடியாமல் தலைவலி, வாந்தி போன்றவற்றை சந்திக்க நேரிடலாம்.
ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது அவசியம்.
ஒரே நாளில் தேநீர் வழக்கத்தை கைவிடாமல், படிப்படியாக குறைப்பது அவசியமானது.
இனிக்காத கிரீன் டீ, மூலிகை டீ போன்றவற்றை மாற்றாக அருந்தலாம்.
முக்கியமாக, நல்ல உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானவை!