bus 375 story டீசல் டேங்கில் ரத்தம் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பஸ்.... திக்...திக்...திக்...
bus 375 story சீனாவிலுள்ள பீஜிங் மாகாணத்தில் காணாமல் போன பஸ்சோடு 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. நடந்தது எப்படி?....என்ன ஆச்சு....திக் ...திக்..மர்ம முடிச்சு ...படிங்க..;
bus 375 story
தமிழகத்தில் எத்தனையோ கதைகள் கொண்ட சினிமாக்கள் வெளிவந்தாலும் பல சினிமாக்கள் பேயை மையமாகக் கொண்ட படங்களாகவும் வந்துள்ளன.அதுவும்ஆங்கிலப் படத்தில் இது அதிகம். பேய் படத்தினை தனி ஒரு ஆளாக பார்த்தால் பரிசு என சொன்ன காலங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். முப்பரிமாண படங்களைப் பார்த்தால் பேய் உங்கள் கண்ணுக்கு முன்னாலேயே வந்து போகும்அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்தோங்கியுள்ளது நம் அனைவருக்கும் தெரியும்.
சரிங்க ..தமிழ் படங்களில் பேய் என்றால் அந்த காலத்தில் டைரக்டர் விட்டலாச்சார்யா என்பவர் எடுத்த படங்களே அதிகம். தமிழகத்தில் ஜகன்மோகினி என்ற படத்தில் பேய் அடுப்பில் கால் வைத்து எரிக்கும். இதுபோல் அந்த படத்தில் பல காட்சிகள் நம்மைப் பயமுறுத்தும். இதனைப் பார்த்துவிட்டு பாதியில் வீட்டிற்கு கிளம்பியவர்கள் ஏராளம்.
அந்த வகையில் சீனாவில் ஒரு பஸ் காணாமல் போயுள்ளது. அதுவும் பேய்கள் பயணித்து 3 பேரைக்கொன்று குளத்தில் மிதக்க விட்டதுதான் கதை. இது உண்மையாக நடந்த கதை என்று சொல்லப்படுகிறது. அந்த கதையைப் பற்றிப் பார்ப்போமா வாங்க...படிங்க....
bus 375 story
பேய் என்றால் சின்னக்குழந்தை முதல் பெரியவர்கள் வரை குலை நடுங்கும் பயம். சரிங்க பேய் என்றால் என்ன? என கேள்வி கேட்பவர்களாக இருந்தால் அல்ப ஆயுசில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையாமல் அவர்கள் ஆயுள் வரை பேயாக உலா வருவார்கள் என நம் முன்னோர்கள் சொல்லிச்சென்றதுதாங்க கதை. இப்படி பேய் என்றாலேயே பயப்படும் நாம் பஸ்சில் பேய் பயணம் செய்த கதையைப் பார்ப்போமா வாங்க...
சீனாவின் பீஜிங் மாகாணத்தில் நடந்த இந்த உண்மைச்சம்பவம் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பஸ்சில் நடந்த சம்பவந்தான். 1995ம் ஆண்டு நவம்பர் 14 ந்தேதி நடந்துள்ளது. இது அக்காலத்தில் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் என பேசப்பட்டது.
சீனாவின் பீஜிங் மாகாணத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து ப்ராகரண்ட் ஹில்ஸ் எனப்படும் ஷியாங்-சான் (XIANG-SHAN) என்ற இடத்திற்கு, யுயான்-மிங்-யுயான் பஸ்ஸ்டாண்டில் இருந்து அந்த பஸ் கிளம்பியுள்ளது. இந்த பஸ்தான் ஷியாங்-சான் பகுதிக்குச் செல்லக்கூடிய கடைசி பஸ் ஆகும். இந்த பஸ்சை விட்டு விட்டால் வேறு பஸ் இல்லை. அந்த பஸ் இரவில் சென்றுவிட்டு அங்கேயே ஹால்ட் ஆகிவிடும். பின்னர் மறுநாள் காலைதான் அங்கிருந்து புறப்படும். இந்த பஸ்சை இரவில் விட்டுவிட்டால் இந்த பகுதிக்கு வருவதற்கு வேறு பஸ்சே இல்லை.
bus 375 story
பஸ் வந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்ய காத்திருந்த 4 பயணிகள் பஸ் வந்தவுடன் ஏறினர். இந்த 4 பேரில் ஒரு பாட்டி, ஒரு இளைஞன், ஒரு இளம் ஜோடி உள்ளிட்டோர் அடக்கம். மேலும் பஸ்சில் டிரைவரும் கண்டக்டர் பெண் ஆக இருந்துள்ளார்.பயணம் செய்த இளம் ஜோடியானது டிரைவருக்கு பின் உள்ள சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்துள்ளனர். அந்த பாட்டியில் இளைஞனும் கதவு அருகே உள்ள சீட்டில் அமர்ந்து பயணம் செய்தனர்.
இவர்கள் 4 பேர் ஏறியவுடன் பஸ் குறித்த நேரத்திற்கு கிளம்பியது. வேகமாக சென்று கொண்டிருந்த பஸ்சை இடைமறித்து கையைக் காட்டியதால் பஸ்சின் டிரைவர் நிறுத்தி ஏற்றிக் கொணடார்.அந்த மூன்று பேரும், சீனர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கீழே சாய்ந்தபடி, இருந்துள்ளார். அவரை, மற்ற இரண்டு பேரும் கைத் தாங்கலாக அழைத்து வந்துள்ளனர்.
பஸ்சில் ஏறிய 3 பேரும் கடைசி வரிசையில் உள்ள சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்துள்ளனர். இரவில் பஸ் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்த நேரத்தில் சீனாவில் இரவில் வீசும் பனிக்காற்று வீசியதால் இதனைக் கண்ட பாட்டி சப்தம் போட்டுள்ளார். பஸ் திடீரென நின்றுபோனது.என்ன ஏதோ என பார்த்தபோது பயத்தில் பாட்டி கத்தியுள்ளார் என்று நினைத்து மீண்டும் பஸ் தனது பயணத்தினைத் துவக்கியது.பின்னர் மீண்டும் அந்த பாட்டி கத்தியுள்ளாள் என்ன ஏது என இப்போது கேட்டதற்கு அந்த இளைஞன் தன் பர்ஸைத் திருடிவிட்டான் என சொல்லியுள்ளாள். அதனால் பஸ்சை போலீஸ்ஸ்டேஷனுக்கு ஓட்டும்படி பாட்டி சொல்லியுள்ளாள். உடனே அந்த இளைஞன் நான் திருடவில்லை அந்த பாட்டி பொய் சொல்வதாக என சொல்லியுள்ளான். பாட்டி இதனை விடவேஇல்லை. தொடர்ந்து அந்த பையன் மீது திருட்டுப்பழி சுமத்தி வண்டியை நிறுத்த சொல்லி அந்த பையனோடு கீழே இருவரும் இறங்கிவிட்டனர். நானே அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
இந்த கதைகளைக் கேட்ட டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தி அவர்கள் இரண்டு பேரையும் இறக்கிவிட்டுவிட்டு பஸ் மீண்டும் அந்த இடத்தினை விட்டு புறப்பட்டு சென்றது. இருவரும் ரோட்டின் ஓரமாக நின்றனர். அப்போது அந்த இளைஞன் பாட்டியிடம் நான் எதுவுமே செய்யல. ஆனா நீ எதற்காக பஸ்சை நிறுத்தியதோடு என் மீது அபாண்டமாக பழி போட்டாய் என கேட்டான்.பஸ் நின்றவுடன் கடைசி சீட்டில் உட்கார்ந்த 3 பேரையும் பாட்டி பார்த்தவிட்டு அந்த இளைஞனை மீண்டும் திருட்டு பயலே என சத்தம் போட்டுள்ளாள்
bus 375 story
அந்தப் பஸ் வேகமாகச் சென்று, இரவில் வீசிய பனியில் மறைந்தது. அப்பொழுது, அந்த இளைஞர் ஏன் பாட்டி பொய் சொல்றீங்க எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பாட்டி, தம்பி, என்னை மன்னிச்சிடு. நான் உன் உயிரைக் காப்பாற்றத் தான் அப்படி செய்ததாக சொன்னவுடன் என்ன பாட்டி சொல்றீங்க என ஆச்சர்யத்துடன் அந்த பாட்டியிடம் அந்த இளைஞன் கேட்டுள்ளான்.
தம்பி நாம வந்த பஸ்சுல இருந்த 3 பேரை பார்த்தேன். அதில் இரண்டு பேருக்கு கால் இல்லை. அவர்கள் இருவரும் பேய் என்பதால் அவர்களிடம் இருந்து உன்னைக் காப்பாத்தவே நான்பொய் சொல்லி நாடகமாடினேன் என்றாள். பின் இரண்டு பேரும் தங்களுடைய ஊருக்கு நடந்தேன் சென்று சேர்ந்துள்ளனர்.
அடுத்தநாள் காலை விடிந்ததும் இரவு அந்த பஸ் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சேரவில்லை என்பதால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தேட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த செய்தியானது தீபோல் பரவியதோடு அனைத்து டிவிக்களிலும் செய்தியாக ஒளிபரப்பானது.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்த பாட்டியும் இளைஞனும் தாமாக முன் வந்து பீஜிங் செய்தி சேனருக்கு பேட்டி அளித்தனர். நடந்த உண்மை அனைத்தையும் சொல்லியுள்ளனர்.
அவர்கள் காட்டிய இடத்தில்தான் பஸ் இருக்கும் என போலீசார் சந்தேகம் கொண்டு அந்த இடத்தில் தேடியுள்ளனர்.
போலீசார் அந்த பகுதியில் இருந்த குளத்தில் பஸ்இருப்பதைக் கண்டறிந்தனர். அதில் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோரோடு அந்த 3பேருடன் வந்த நபரும் சடலமாக மிதந்துள்ளதைப் போலீசார் கண்டனர். அந்த வண்டி எப்படி இவ்வளவு தூரம் வந்திருக்கின்றது என, வண்டியின் டீசல் டேங்கினைத் திறந்து பார்த்துள்ளனர்.
அதனைத் திறந்த போது டீசல் டேங்கில் டீசல் இல்லாமல் அந்த டேங்கினுள் சிவப்பு நிற ரத்தம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் போலீசார் மற்றும் அந்த பகுதி மக்கள் அ னைவருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தற்போது வரை பீஜிங் போலீசாரால் இதனைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர் என்பதுதான் இந்த கதையின் ஹைலைட்டே...பேய்.... உள்ளதா? இல்லையா? எப்படி டீசல் டேங்கினுள் ரத்தம் வந்தது,? புரியாத புதிர்....