நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துகள். பிறந்தநாள் வாழ்த்து வாசகங்கள்..
Birthday wishes quotes Tamil-வருடத்தில் நாட்கள் பல வந்தாலும், நம் அனைவருக்கும் நாம் பிறந்த தேதி என்பது எப்போதும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரக்கூடியது;
Birthday wishes quotes Tamil-பிறந்தநாள் என்பது அனைவருக்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் அள்ளித் தரும் இனிய நாளாகும். நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து அன்புக்குரிய உறவுகளையும் அழைத்து, மகிழ்ச்சியோடு பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். மேலும் சமூக வலை தளங்களின் மூலமாகவும் பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு நண்பர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பர்.
இன்று புதியதாய் பிறந்தோம் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
வாழ்வு இன்று முதல் தொடங்குகிறது என்று எண்ணி ஆரம்பியுங்கள்....ஒவ்வொரு நாளும்.
படிக்காமல் விட்ட பாடங்கள், வாங்காமல் விட்ட சொத்துகள், செய்த தவறுகள், பட்ட அவமானங்கள், அனுபவித்த துன்பங்கள், என்றோ எப்போதோ நடந்துவிட்ட தவறுகள் என்று பழசை நினைத்தே நிகழ் காலத்தை கழிக்கிறோம்.
இனிமையான இளமைக் காலங்கள், அனுபவித்த சுகங்கள், கிடைத்த பாராட்டுகள், பட்டங்கள், பதவி உயர்வுகள், அதிகாரங்கள் என்று அவற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்
நல்லதோ, கெட்டதோ போனது மீண்டும் வராது. கடந்த காலத்தை முற்றுமாக மறந்து விடுங்கள்.
பாரதியின் வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால்,
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
கவிஞர் அறிவுமதி தமிழில் ஒரு பிறந்தநாள் பாடலை இயற்றியுள்ளார், இதோ அந்த பாடல்,
நீண்ட நீண்ட காலம் நீ
நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம் நீ
வளர்ந்து வாழ வேண்டும்!
அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்!
பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்!
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க
உனது பெயரை நிலவுத் தாளில்
எழுத வேண்டும்!
சர்க்கரைத் தமிழ் அள்ளித்
தாலாட்டு நாள் சொல்லி
வாழ்த்துகிறோம்
பிறந்த நாள் வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
பிறந்தநாள் வாழ்த்துகள்
இனி பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை பார்ப்போமா
பிறக்கும் நாள் அற்புதமானது
அது ஒவ்வொரு முறையும் வரும்போது
அழகாகிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
வருடத்தில் நாட்கள் பல வந்தாலும், பிறந்தநாள் எப்போதும் இனிய நாள்
பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறப்பு ஒருமுறை தான் நிகழும்
ஆனால் பிறந்தநாள் என்பது ஒவ்வொரு ஆண்டும் வரும்
நலமோடு வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
மனித பிறவியாக பூமியில் பிறப்பது அழகானது. அப்படி பிறந்ததை சிறப்பூட்டும் விதமாய் நாம் வாழ்ந்து காட்டுவது அதை விட அழகானது. பிறந்தநாள் வாழ்த்துகள்
பூக்களெல்லாம் பெருமை கொள்ளும் நாள் இன்று. மலரொன்று புதிதாய் பூக்கும் நாள் இன்று. வான் நிலவு ஒன்று மண்ணில் தோன்றிய அதிசய நிகழ்வு இன்று. என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
வெள்ளை உள்ளத்தோடும், மனம் நிறைந்த மகிழ்வோடும் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள்
நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மனம் நிறைந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு வாழ்க..! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
தன்னம்பிக்கையோடு உங்கள் வாழ்வின் அடுத்த வயதில் அடி எடுத்து வையுங்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நினைவாகும் இனிய வருடமாக இது திகழட்டும்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்,
கனவுகள் விண்ணை எட்டட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
உன் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிய
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2