பிறந்த நாளில் நல்ல உறுதிமொழி எடுங்க.. சமூகத்திற்கு உங்க பங்களிப்புதான் என்ன?...
Birthday Kavithai in Tamil-இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் என்பது அவர்கள்இந்த உலகில் ஜனித்த நாளாக கருதப்படுகிறது.;
Birthday Kavithai in Tamil
உலகில் நாம் மனிதர்களாக பிறந்துவிட்டோம். நாம் இந்த உலகில் என்று ஜனித்தோமோ அன்றைய தினமே நாம் பிறந்த நாளாக கொண்டாடுகிறோம்.அந்த வகையில் மனிதர்களாகிய நமக்கு பிறந்த நாள் என்று ஒன்று கட்டாயம் உண்டு.ஏதோ பிறந்தோம்... வாழ்ந்தோம்... மறைந்தோம்...என்பதல்லங்க வாழ்க்கை... எதையாவது சாதிக்கணும்... அப்புறம் பிறந்த நாள் கொண்டாணும்.. அப்படிங்கிற வைராக்கியத்தினை எல்லோரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்று உலகில் பல இடங்களில் பாருங்கள். நம்மைவிட உடல் உறுப்புகளை இழந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அதாவது மாற்றுத்திறனாளிகள் பலர் செயற்கரிய சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களோடு ஒப்பிடும்போது நாம் என்ன சாதித்தோம்? ஒன்றுமில்லை...
அவரவர்களின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப பிறந்த நாளைக்கொண்டாடுகிறோம். பிறந்த நாளன்று எல்லோருமே வழக்கத்தினைவிட சந்தோஷமான மனநிலையில் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளது. விஐபிக்களின் பிறந்த நாளில் ஆதரவற்ற இல்லங்களில் உள்ளோருக்கு உணவு வழங்கப்படுவதோடு பல பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
அதுவே நம்மைப்போன்ற நடுத்தர குடும்பத்தினர் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று வணங்கிவிட்டு ஏதாவது ஒரு ஹோட்டலில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு உணவருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுவே கல்லுாரி மாணவ, மாணவிகளின் பிறந்த நாள் என்றால் ஒரு பெரிய கேக் ஆர்டர் செய்யப்பட்டு அந்த கேக்கினை பிறந்த நாள்கொண்டாடும் நபரின் முகத்தில் பூசி அவரை அலங்கோலப்படுத்தி பின்னர் அனைவரும் பார்ட்டியில் கலந்துகொண்டு பாராட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளும் நாள்தோறும் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
யாராக இருந்தாலும் சரி. நாம் இந்த உலகில் பிறந்துவிட்டோம். நாம் பிறந்ததில் இருந்து நம் சமூகத்திற்கு நாம் செய்தது என்ன? என ஒரு பிறந்த நாளிலாவது யாராவது சிந்தித்திருப்போமா? இல்லைங்க... இனிமேலாவது அதனைப்பற்றி சிந்தித்து நல்லதொரு செயலை செய்து தருவோம் என உறுதிமொழியேற்போம்... தனிப்பட்ட முறையில் உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் உறுதிமொழிகளைத் தவிர்த்து நீங்கள் சமூகத்திற்கு செய்ய போவது என்ன? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அந்த வகையில் அந்த உறுதிமொழி எடுத்ததோடு நிற்காமல் அதனை செயல்படுத்திக்காட்டுவதுதான் அதன் உண்மையான நிலையாகும். அதனைச் செய்வோம் இனி எதிர்காலத்தில்...
பிறந்த நாள் கவிதைகள் பற்றி பார்ப்போமா.... வாங்க...
நண்பா...உ ன் வாழ்நாளில் நீ சிரிப்புடனே இருக்கணும்
கஷ்டங்கள் வந்தா பனி போல விலகிடணும்...
பிறந்த நாளில் தேவதைகள் தேடி வந்து வாழ்த்துவார்களாம்.. உன்னையும்தான்..
பிறந்த நாள் வாழ்த்துகள்...
நிலையான அன்பை பெற்றிடவும்,
நிறைவேறும் ஆசைகளைப் பெறவும்,
இல்லந்தோறும் மகிழ்ச்சி நிறையவும்...
பிறந்த நாள் வாழ்த்துகள்..
உன்னுடைய அனைத்து செயல்களும் சிறக்கட்டும்
மகிழ்வான மலரும் நினைவுகள் மலரட்டும்....
வாழ்வின் நெகிழ்வான தருணங்கள்....
உன் ஆசைகளும், அபிலாஷைகளும்...
வெல்லட்டும்... வெல்லட்டும்... வாழ்த்துகள்..
உன்னை வாழ்த்த எனக்கு வயதில்லை ...
வாழ்க ...வளமுடன்...வாழ்க ...வளமுடன்...
மிகையான குணத்தோடும் நிறைவான அன்போடும்
குறையில்லா பண்போடும் வாழ்ந்திட வாழ்த்துகள்..
பகைவரையும் நண்பனாக மாற்றும்இன்னாள்
பொன்னாள்...வாழ்த்துகள்...
உன் எதிர்கால கனவுகள் அனைத்தும் பலிக்க
வாழ்த்துகள்...வாழ்த்துகள்...
வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாகட்டும்...
வளமான எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்...
உலகம் போற்றும் மனிதராக உயர்வடைய
அன்பான மனமார்ந்து நல்வாழ்த்துகள்...
எதிர்காலம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்..
வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி வருவது போல் உ
உன் வாழ்விலும் கஷ்டங்கள் விலகி இன்பம் நிலைக்கட்டும்...பிறந்த நாள் வாழ்த்துகள்...
வாழ்த்த வேண்டும் என்றால் வாழ வேண்டும்...
நூறு வயதை கடந்தும் நீ வாழ வேண்டும்..
பல்லாண்டு வாழ்க... பல்லாண்டு வாழ்க...
வாழ்வில் நீ கடக்க வேண்டிய துாரம் அதிகம் உள்ளது
சிரமமில்லாமல் கடக்க நீ திட்டமிடு... கடப்பாய்...
மனதிலுள்ள கவலைகளை தேக்கி வைக்காதே...
மனசார மற்றவர்களிடம் சொல்லிவிடு... வாழ்த்துகள்..
உன் வாழ்வில் மகிழ்ச்சியே நிலைக்கட்டும்
கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்..
வாழ்க்கையின் உன்னத நிலையினை அடைய
மனமார்ந்த வாழ்த்துகள்... வாழ்த்துகள்...
வாழ்க்கையில் ஆசைகளை அடக்குபவன்
அளவில்லாத முன்னேற்றத்தை அடைகிறான்...
அனைத்துநிலைகளிலும் வெற்றி எனும்
கோட்டைத் தொட்டிட என் வாழ்த்துகள்...
சொர்க்கத்தை நீ வாழும்போதேகாண வேண்டும்..
ஆயுள் முழுதும்நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்..
உன்னை பூமிக்கு பரிசளித்தஉன் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.!
நீ கண்ட கனவுகள் நிறைவேற இந்த நல்ல நாளில்
மனமார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள்.!
இந்த அரிய நாளில் மென்மேலும் சாதனைகளை
நீ படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
அனைவரிடமும் அன்பாக பழகியவன் நீ
நீ மற்றவர்களுக்குசெய்த உதவிகள்
உன்னை என்றென்றும் வாழ வைக்கும்...
வாழ்க...பல்லாண்டு..வாழ்க...
சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2