வானுக்கும் எல்லை உண்டு, நட்புக்கில்லையே
Bestie Quotes Tamil-எந்தவித ரத்த பந்தமும் இல்லாமல், தன் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு பாசம் வைக்கும் நட்பிற்கு எப்போதுமே தனி மதிப்பு தான்.;
Bestie Quotes Tamil
Bestie Quotes Tamil
நட்பிற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. வயது வித்தியாசமும் கிடையாது. இந்த உலகமே நட்பு என்னும் நூலில் தான் கட்டப்பட்டுள்ளது எனலாம். பெற்றோரிடம், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில விசயங்களை நண்பர்களிடம், தோழிகளிடம் கொட்டித் தீர்க்கலாம்.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை. திருவள்ளுவர் நட்பிற்கு தனி அதிகாரம் தந்துள்ளார். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு என நட்பின் பெருமையை கூறியுள்ளார்
குழந்தைப் பருவத்தில் நினைவு தெரியும் நாட்களில் தொடங்கி நினைவு விடை பெறும் காலம் வரை நீடித்து நிலைத்து நிற்பது நட்பு என்னும் உறவு மட்டும் தான். நண்பர்கள் மாறலாம். ஆனால் நட்பு மாறாதது.
'பறவைக்கு கூடு
சிலந்திக்கு வலை
மாட்டுக்குத் தொழுவம்
மனிதனுக்கு நட்பு
சிறந்த நட்பு குறித்து அழகான பொன்மொழி மற்றும் வாசகங்களை இந்த பதிவில் பார்ப்போம்
இந்த உலகில் அனைவருமே மன அழுத்த நோயாளிகள் தான் நண்பன் என்பவன் இல்லாவிடில்.
நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது
ஆயிரம் சொந்தங்கள் நம்மை தேடி வரும்.
ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்…
எல்லாம் இருந்தபோது என் இன்பத்தில் இணையாக..
ஏதும் இல்லாதபோது என் துன்பத்தில் துணையாக…
எக்காலமும் எனக்கு ஒப்பற்ற உறவாய் இருப்பது நண்பர்கள் மட்டுமே…
அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பர்களை பெற்றிருப்பது சிறந்தது…
ஆனால், உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பர்களை பெற்றிருப்பது கடவுளின் பரிசு…
கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன் அலை
வந்து அடித்து செல்லவில்லை படித்துச் சென்றது உண்மையான நட்பு என்று…
முள்ளில் வளரும் ரோஜாவை யாரும் வெறுப்பதில்லை…
அன்பில் வளரும் நட்பை யாரும் மறப்பதில்லை…
எதிர்பார்க்கின்ற உறவுகளுக்கிடையில் சிக்கி தவிக்கின்ற மனமும்
குதூகலமாய் இருப்பது எதிர்பார்பில்லா நட்பினால் மட்டுமே…
எங்கே பிறந்தாலும் எப்படியோ இருந்தாலும் உணர்வை உணர்வுக்கு
ஒன்று சேர தருவது தான் உயிர் நட்பு…
அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அன்பு,
அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது நட்பு…!
உண்மையான உறவுகள்
கடவுள் தந்த வரம் என்று
சொல்லுவார்கள். ஆனால்
உண்மையான நட்பு
கடவுளுக்கு கூட
கிடைக்காத வரம்.
நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்துவிடாதே மறந்து விடு ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்
உறவு என்பது ஊஞ்சல் மாதிரி அது சிலரை தாங்கும் சிலரை விழவைக்கும், நட்பு என்பது பூமி மாதிரி அது எல்லாரையும் தாங்கும்
உண்மையான நண்பர்கள் உன் பிரச்சினையை மறைந்துபோக செய்யமாட்டார்கள் .உனக்கு பிரச்சினையான நேரங்களில் மறைந்து போகாமல் இருப்பார்கள்
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன் மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி
நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். நல்ல நட்பை நேசிப்போம்! நல்ல நட்பை வாசிப்போம்!! நல்ல நட்பையே சுவாசிப்போம்!!!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2