best wishes for valentine's day: காதலை கொண்டாட அற்புதமான காதல் கவிதைகள், ஆதலினால் காதல் செய்வீர்
சொல்லாத காதலை வெளிப்படுத்தும் நல்லநாள், சொல்லிய காதலை மகிழ்வோடு கொண்டாடும் காதலர் தினம்;
காலங்கள் மாறினாலும் காதல் இந்த மண்ணிலும் நம் மனதிலும் இன்னும் வாழ்கிறது. வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த காதல், ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளிரட்டும். வெளிப்படுத்தாத காதலை வெளிப்படுத்தும் நல்லநாள், வெளிப்படுத்திய காதலை மகிழ்வோடு கொண்டாடும் காதலர் தினம்.
உங்கள் காதலை உங்களுடையவர்களுடன் கொண்டாட, இங்கே உங்களுக்காக சில அற்புதமான காதல் கவிதைகள்
தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடிகள் இல்லை கேட்கிறேன் இதய துடிப்பில் ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காக அல்லவா என்னவளுக்கு காதலர் தின வாழ்த்துகள்
உன்னில் நானும் என்னுள் நீயுமாக வாழும் நமக்கு தினமும் காதலர் தினமே!! எந்த தினம் என்றாலும் அனுதினமும் அவனுடன் இருந்தால் காதலர்தினம் தான்…! காதலர் தின வாழ்த்துகள்!!!!
இந்த நொடி நீளாதா என்று மனதை தவிக்கவிடுகிறாய் சுகமாய்!! மலரும் நினைவுகள் மனதை தாலாட்ட உறங்கிப்போனது விழிகள்!! ஏதோ ஒரு நினைவு விழிகளை நனைக்கும் போதெல்லாம் புன்னகையுடனேயே கடந்துவிடுகின்றேன் அந்நொடியை!!! காதலர் தின வாழ்த்துகள்!!!!
சலிக்காமல் காத்திருக்கும் நிலவாக உனை காண நான்!! என் கவிதைகளின் தலைப்பு நீ!! உன் கவிதைகளின் வரிகள் நான்!! நான் என்றோ தொலைந்தேன் உன்னுள் உனக்குள் நான்!! காதலர் தின வாழ்த்துகள்!!!!
அழகான இடத்திற்கு அழைத்துசென்று என் காதலை சொல்ல ஆசைதான்...! ஆனால் நீ என்னுடன் இருக்குமிடம் எல்லாமே அழகாய் தெரிகிறதே என்னதான் நான் செய்ய?
இன்று ஜெயிப்பது வெற்றி அல்ல ஆயுள்வரை தோற்காமல் இருப்பதுதான் உண்மையான வெற்றி.... காதலர் தின வாழ்த்து
தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி!! நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர் கரையுதடி! நீ என்ன முரண்களின் மகளா! காதலர் தின வாழ்த்துகள்!!!!
இரண்டு நிமிடம் பேசிவிட்டு 24 மணிநேரம் நினைக்க வைக்க உன்னால் மட்டுமே முடியும்
பிடித்த தனிமையும் கொடுமையானது உன்னுள் தொலைந்ததிலிருந்து... காதலர் தின வாழ்த்துகள்
பூவுக்குள் உணர்ந்த அன்பை பூகம்பமாக்கிவிட்டு தடயமே இல்லாமல் தானே அழித்துவிட்டது காலம் ரணமாகிப்போன இதயத்திற்கு ஒத்தடமாய் இருப்பது உன் நினைவு மட்டுமே காதலர் தின வாழ்த்துகள்
எல்லோருக்கும் அழகை வர்ணிக்க தானே கவிதை தேவைப்படும் எனக்கு மட்டும் கவிதையை வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்
கருங்கூந்தலை கலைத்திடும் தென்றல் காற்றும் உன் ஸ்பரிசத்தையே நினைவூட்டி செல்கிறது
தேநீரில் கரைந்த சக்கரையாய் கலந்துவிட்டாய் என்றும் திகட்டாத தித்திப்பாய் மனதில்
திணறடிக்கும் உன் அன்பில் சிறையிருக்க வேண்டும் ஆயுளின் கடைசி நொடிவரை ஆயுள் கைதியாய் உன் இதயத்தில் காதலர் தின வாழ்த்துகள்
ஏதோ ஒரு நினைவு விழிகளை நனைக்கும் போதெல்லாம், புன்னகையுடனேயே கடந்துவிடுகின்றேன் அந்நொடியை
கனவு கலைந்த பின்னும் விழிகள் மூடிக்கிடக்கின்றேன் உன் பிம்பம் கலைந்திட கூடாதென
என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால் அங்கும் வந்துவிடுகிறாய் நானே… உன் உலகமென்று
நீவேண்டும் என்பதை தவிர, வேறு சிறந்த வேண்டுதல், எதுவுமில்லை எனக்கு.
பறவைகள் வாழ்வதற்கு கூடுகள் தேவை! காதல் வாழ்வதற்கு, அழகான இரு இதயங்கள் தேவை!
என்ன தவம் செய்ததோ உன் தொடுதிரை அலைபேசி நித்தமும் உன் விரல்கள் தீண்டுவதற்கு...!
இடைவிடாது பேசும் உன் இதழ்கள் அழகென்றால்...! இடையிடையே பேசும் உன் விழிகள் பேரழகு...!
தோட்டத்து ரோஜாகள் ஏளனம் செய்யவே ரோஜா தினமும் கடந்தது இன்று
பார்த்தது குறைவு தான்! அது கோர்த்து வடித்த கவிதை பல!
பிழையும் அழகாகிறது கலையாய் காணும் கண்ணுக்கு