Beauty Tips -முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா?
Beauty Tips-முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க, வீட்டிலேயே இந்த பேசியல் செய்து பாருங்கள்.;
Beauty Tips -முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றால், முல்தானி மெட்டி பேஸ் பேக் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
சருமத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களாக நீங்கள்? ஆனாலும் மாறிவரும் பருவநிலைகளால் உங்களால் முகத்தை முறையாக பராமரிக்க முடியாது. குளிர்காலம் மற்றும் வெயில்காலங்களில் அந்தெந்த சூழலுக்கு ஏற்ப சருமத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதோடு முகத்தில் நிறம் ஒரே மாதிரியாக இல்லாமல் ஆங்காங்கே நிறம் மாறி இருப்பதோடு, பிக்மென்டேஷனால் சருமம் கருமையாக இருக்கும். சோப்பு, மஞ்சள் போட்டு குளிக்கும் போது மட்டும் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும். மற்ற நேரங்களில் சருமத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள் மற்றும் நிறம் மாறியிருக்கும். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால் வீட்டிலேயே இந்த பேசியல் பண்ணிப்பாருங்கள்.
சருமத்தில் கரும்புள்ளிகளை நீக்க சிம்பிள் டிப்ஸ்!
உங்களது முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. வீடுகளில் உள்ள பால், தக்காளி, எலுமிச்சை, தேன் போன்ற பொருள்களை முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பாலை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் தேய்த்து எடுக்க வேண்டும். இதையடுத்து எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து கரும்புள்ளிகள் மற்றும் கருமையான இடங்களில் மசாஜ் செய்யவும். தொடர்ந்து நீங்கள் காலையில் அல்லது இரவு தூங்கும் போது இதை செய்து வரும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கக்கூடும்.
வேப்பிலையுடன் மஞ்சள்:
சருமத்தில் உள்ள இறந்த செல்களால் முகம் பொலிவிழந்து காணப்படும். மேலும் ஆங்காங்கே கரும்புள்ளிகளும் ஏற்படும். இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால், வேப்பிலை மற்றும் மஞ்சளை நன்றாக அரைத்து பேஸ் பேக்காக நீங்கள் உபயோகிக்கலாம். வேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியாகவும், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. இதே போன்று கஸ்தூரி மஞ்சளுடன் பசும் பால் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இது சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது
முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர்:
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றால், முல்தானி மெட்டி பேஸ் பேக் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வீட்டிலேயே நீங்கள் முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ் பேக் போன்று கலந்துக் கொள்ளவும். பின்னர் கருமையான இடங்கள் உள்பட முகம் முழுவதும் அப்ளை செய்யவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவும் போது சருமம் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
இனி அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. வீடுகளிலேயே இது போன்ற முறைகளைப் பயன்படுத்தி உங்களை அழகாக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.