ருசியான வாழைப்பழ குழிப் பணியாரம் செய்வது எப்படி?

Banana Pit Paniyaram Recipe- குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழ குழிப் பணியாரம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.;

Update: 2024-04-12 11:37 GMT

Banana Pit Paniyaram Recipe-வாழைப்பழ குழிப் பணியாரம் (கோப்பு படம்)

Banana Pit Paniyaram Recipe- குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழ குழிப்பணியாரம்... 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம். 

ஆரோக்கியம் நிறைந்த சத்தான வாழைப்பழ குழிப்பணியாரத்தை 10 நிமிடத்திலேயே எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த குழிப்பணியாரத்தை நாட்டு சர்க்கரை சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் ஸ்கூல் விட்டு வந்ததும் கண்டிப்பாக அவர்களுக்கு ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் இருக்கவேண்டும். அப்படி ஸ்னாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த சுவையான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்.

எனவே ஆரோக்கியம் நிறைந்த சத்தான வாழைப்பழ குழிப்பணியாரத்தை 10 நிமிடத்திலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த குழிப்பணியாரத்தை நாட்டு சர்க்கரை சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

வாழைப்பழம் - 2

நாட்டு சர்க்கரை - 1/2 கப்

ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் அரைத்த மாவினை மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.

அடுத்து அடுப்பில் குழி பணியார கல்லை வைத்து குழிகளில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அரைத்து வைத்துள்ள மாவினை பணியார குழிகளில் ஊற்றி 2 நிமிடங்களுக்கு மூடி வேக விடவும்.

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு மூடியை திறந்து பணியாரங்களை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவிடவும்.

இரண்டு பக்கங்களும் நன்றாக மொறுமொறுவென்று வெந்ததும் பணியாரங்களை எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் ரெடி. இதை அனைவருக்கும் சூடாக பரிமாறி மகிழுங்கள்.

Tags:    

Similar News