உங்க நடத்தையிலதான் இருக்குது உங்களின் எதிர்கால வாழ்க்கை
Attitude Quotes in Tamil-வாழ்க்கையின் அடிப்படையே பண்பாடு, கலாச்சாரம்,நடத்தை உள்ளிட்ட காரணிகளே. இவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தாலே நம் வாழ்வு சிறக்கும்.;
Attitude Quotes in Tamil
வாழ்க்கை என்பது மேடு பள்ளம் போன்றதுதான். ஆமாங்க.. இன்பமும்துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஒரே நேரத்தில் இன்பமாகவும், ஒரே நேரத்தில் துன்பமாகவும் இருக்காது. மாறி மாறித்தான் வரும். அதேபோல் வாழ்வில் சகிப்புத்தன்மையையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.எல்லா நேரமும் ஒரே மாதிரியாகஇருக்காது.வாழ்வின் நெருக்கடியான கால கட்டத்தில் இந்த சகிப்புத்தன்மை நமக்கு கை கொடுக்கும்.
ஒவ்வொருவரின் நடத்தை பண்பாடுதான்அவர்களின் வாழ்க்கையையே தீர்மானிக்கிறது. மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருமே குழந்தைகளிலிருந்து வளர்ந்தவர்கள். குழந்தையாக இருந்துவிட்டால் நமக்கு பிரச்னையில்லை.அதாவது ஆளும் வளரணும்...அதுபோல் அறிவும் வளரணும்.. அதாவது வயசுக்கு தகுந்த புத்தி நமக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கு போனாலும் சிக்கல்தான். எனவே நாம் பேசும்போது கூட இடமறிந்துதான் பேச வேண்டும். பேச்சில் கவனம் இருக்க வேண்டும். அமைதியாக இருத்தலே நமக்கு நலம் பயக்கும்.
எனவே நம்முடைய நடத்தை தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது... என்பதற்கான வாசகங்கள் இதோ...
நான் உண்மையில் நல்லவன். நீ என்னை ஏமாற்றாத வரை..
என் எதிரில் நிற்கும் உனது செயலே நான் யார் என்பதை தீர்மானிக்கும்
என்னை பிடிக்காதவர்களை வெறுக்க எனக்கு நேரம் இல்லை, ஏனென்றால் என்னை பிடித்தவர்களை நேசிப்பதில் நான் பிசியாக இருக்கிறேன்.
கற்றுக்கொள்வதில் முட்டாளாக இரு. கற்றுக்கொடுப்பதில் புத்திசாலியாக இரு.
பிறரிடமிருந்து கற்றுக்கொள், ஆனால் அவரையே பின்பற்றாதே
நீ வெற்றி பெறுவதற்காக பிறரை தோற்கடிக்க ஒருபோதும் நினைக்காதே!!
அன்பின்றி உங்களால் வாழ முடியாது என்று கூறுகிறார்கள் ... அன்பை விட ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்
பறப்பதற்கு தைரியம் இல்லாத போது சிறகுகள் இருந்தும் பயனில்லை
மற்றவர்களை பைத்தியமாக்கும் அளவிற்கு மகிழ்ச்சியாய் இருங்கள்
என்னைப் பற்றிய உன் கருத்து, நான் யார் என்பதை ஒருபோதும் மாற்றாது.
தலை சாயும் நிலையே வந்தாலும் தன்மானத்தை ஒருபோதும் இழக்காதே
உன் பலத்தை அறிய ஆயிரம் பேருடன் சண்டையிடு. உன் பலவீனத்தை அறிய அரைமணி நேரம் தனித்திரு
அடுத்தவர் விருப்பத்திற்கு ஏற்ப வாழ வேண்டுமெனில் செத்துவிடு
என் மிகப் பெரிய பலவீனம் நீ காட்டும் உண்மையான அன்பு
என்னை உனக்கு பிடிக்கவில்லையெனில் நீ விலகி விடு. என்னை மாற்ற நினைக்காதே!!
நான் நானாக இருப்பதாலோ என்னவோ என்னை பலருக்கு பிடிக்காது
விசுவாசம் ஒரு விலை உயர்ந்த பரிசு, அதை மலிவான மக்களிடம் எதிர்பார்க்காதே!!
அழகு உங்கள் கவனத்தை ஈர்க்கிறது, ஆனால் ஆளுமை உங்கள் இதயத்தை ஈர்க்கிறது.
சுய அன்பு, சுய மதிப்பு மற்றும் சுய மரியாதையை பெற சுயநலமாக இரு
யாரையும் அதிகம் சார்ந்து இருக்காதே.. அவரது இழப்பு உன்னை பெரிதும் பாதிக்கும்!!
மற்றவர்கள் என்னை புறக்கணிப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் என்னை இழக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை
வலிகள் எப்போதும் கண்ணீராய் வெளிப்படுவதில்லை. அது சில நேரங்களில் புன்னகையாகவும் வெளிப்படும்.
நீ சம்பாதிக்கக்கூடிய ஒன்றை ஒருபோதும் பிச்சை எடுக்காதே!!
மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் மிகச் சிறிய விஷயமே மனப்பான்மை
நீயே உன்னை பலவவீனன் என்று நினைப்பதே மிகப்பெரிய பலவீனம்
நல்ல நண்பனைக் கண்டுபிடிப்பது கடினம், விட்டுப்பிரிவது கடினம், மறப்பது மிக மிகக் கடினம்.
கோபத்தில் முடிவெடுக்காதே. மகிழ்ச்சியில் வாக்கு கொடுக்காதே. இரண்டுமே ஆபத்தில் முடியும்
எதிரியே ஆனாலும் துரோகத்தால் தோற்கடிக்காதே..
உனக்கான கதவு திறக்கவில்லையெனில், உனக்கென ஒரு வழியை உருவாக்கு
தீப்பெட்டியின் கடைசி குச்சியில் இருக்கும் கவனம், முதல் குச்சியில் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்.
உன் பெயரை நினைவில் கொள்ள இந்த உலகிற்கு ஒரு காரணத்தை கொடுப்பதே உன் உண்மையான வெற்றி
பிறருக்கு உண்மையாக இருக்க வேண்டுமெனில் ஊமையாக இரு.
பொறுமையைக் கையாளும் ஒருவன் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறுகிறான்
நீ வெற்றிபெற வேண்டுமெனில் செவிடனாய் இரு
நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சிக்காதே. அதைவிட பெரிய முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை
நம்பிக்கையே நீங்கள் அணியக்கூடிய சிறந்த ஆடை.
உன்னை மகிழ்வித்த ஒன்றிற்காக நீ ஒருபோதும் வருந்தாதே.
மற்றவர்கள் உன் மீது வீசும் கற்களை, உனக்கான படிக்கற்கலாக மாற்றிக்கொள்
நீ வெற்றிபெற நல்ல நண்பர்களை விட, சிறந்த எதிரிகளே தேவை.
மிகவும் நேர்மையாக இருக்காதே, ஏனென்றால் நேரான மரங்களே எப்போதும் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன..
எனக்கு துரோகம் இழைக்க நீ எடுக்கும் ஆயுதம் நட்பு என்றால், உன்னை வெல்ல நான் எடுக்கும் ஆயுதம் உண்மையான நட்பு
என் விருப்பத்தை உன் விருப்பதிற்க்கேற்ப தீர்மானித்துவிடாதே..
என்னை மன்னித்துவிடு. நீ ஒரு உண்மையான முட்டாள் என்பதை மறந்தது என் தவறு
என் காதல் இன்றி உன்னால் வாழ முடியாது என்றால் ஒரு பெண். அதன் விளைவு, இப்போது எனக்கு 2 காதலிகள்
என் அன்பு போதவில்லை என்று என் காதலி கூறினால்... இப்போது எனக்கு 2 காதலிகள்
எனக்கு ஆறுதல் கூறுவது, நான் தூங்கும்போது அடிக்கும் அலாரம் போன்றது
என்னை குறை கூறும் முன் நீ சரியானவனா என்பதை உறுதிபடுத்திக் கொள்
நான் யார் என்பதை யாரும் எனக்கு கற்பிக்க தேவையில்லை
நீ என்னைப் பார்க்கும் விதமே, நான் உன்னிடம் பழகும் விதத்தை தீர்மானிக்கும்..
சுடுகாட்டு பேயை நம்பு. சொந்தக்காரனை நம்பாதே
நான் என் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ... நீ உன் முட்டாள்தனத்தை கட்டுப்படுத்து
ஒவ்வொரு வலியும் ஒரு பாடத்தை கற்பிக்கிறது, ஒவ்வொரு பாடமும் ஒரு நபரை மாற்றுகிறது
நீ நீயாக இரு. சிங்கம் ஒருபோதும் நாய்களை போல் குரைக்க முயற்சிப்பதில்லை..
என் மௌனமே நான் உனக்கு தரும் மிகப் பெரிய எச்சரிக்கை
என் கண்ணீரே நான் உன்னை பலி தீர்ப்பதற்கான ஆரம்பம்
வெளிப்படையாக பேசுவதற்குப் பெயர் தலைக்கனம் என்றால் , அது எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது..
என் அனுமதியின்றி யாரும் என்னை காயப்படுத்த முடியாது.
மூளை ஒரு அற்புதமான விஷயம். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
யாரோ ஒருவரின் கதையில் நாம் அனைவரும் வில்லன் தான்
சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதை விட, நரகத்தில் ராஜாவாக இருப்பது எனது பண்பு!!
உன்னை நீ மேம்படுத்துவதே மற்றவர்களுக்கு, நீ கொடுக்கும் மிகப் பெரிய பதிலடி
பிறர் உன்னை நிராகரிப்பதைக் கண்டு வருத்தப்படாதே. விலையுயர்ந்த பொருள்களை யாரும் அதிகம் வாங்குவதில்லை
பூமியின் ஈர்ப்பு விசையைத் தவிர, வாழ்க்கையில் எதுவும் என்னைத் தாழ்த்த முடியாது
நாய்கள் குரைப்பதைக் கண்டு, சிங்கம் ஒருபோதும் கர்ஜிப்பதில்லை.
பிறருக்கு விளக்கம் கொடுப்பதை நிறுத்து. கேள்வி கேட்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் பதில்களைக் காதுகொடுத்து கேட்பதில்லை.
என்னை விரும்புபவர்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள். என்னை விரும்பாதவர்கள் உங்கள் தரத்தை உயர்த்துவார்கள்.
நான் நினைக்கும் விதத்தில் மட்டுமே என் வாழ்க்கையை வாழ்கிறேன், மற்றவர்கள் விரும்பும் விதத்தில் அல்ல..
வெளிச்சம் இருக்கும் வரை மட்டுமே நிழல் நம்மோடு இருக்கும். சிலரது உறவும் அப்படித்தான்
உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு நபரின் உள்ளேயும், உங்களுக்கு தெரியாத ஒரு நபர் இருக்கிறார்
பிறறைக் கவர பெண்கள் அணியும் நகைகளில் ஒன்றே புன்னகை!!
"ஈகோ" விரல்களில் உள்ள நகத்தை போன்றது. ஒரு அளவிற்கு மேல் வைத்துக்கொண்டால் அது உனக்கே ஆபத்தாக முடியும்.
அன்பைக் கொடு. எதிர்பார்க்காதே தனித்து இருந்தாலும் ராஜா, ராஜாதான்
சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதே எனது சிறப்பு.
உன் வேதனைகளை சாதனையாக்கு
வலி ஒரு மனிதனை வீரனாக வடிவமைக்கிறது
உன் எதிரிகளுக்கு நீ கொடுக்கும் மிகப் பெரிய பதிலடி உனது வெற்றி!!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2