கணினியில் நீங்கள் நீண்ட நேரம் பணிபுரிபவரா? இதனை கொஞ்சம் படியுங்கள்

கணினியில் நீங்கள் நீண்ட நேரம் பணிபுரிபவராக இருந்தால் இதனை கொஞ்சம் படித்து பாருங்கள்.

Update: 2024-07-04 13:21 GMT

தற்போதைய சூழலில் உலகம் முழுவதும் கணினி இல்லாமல் எதுவும் நடக்காது என்றே கருத தோன்றுகிறது. ஆவண பதிவுகள் என்ன தான் இருந்தாலும் கணினி பதிவுகள் தான் அதனை விட முக்கியமானதாக உளளன. இதன் காரணமாக அனைத்து துறைகளிலும் பணி புரிபவர்கள் கணினியில் நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.

அதற்காக அவர்கள் எப்படி எல்லாம் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். கண் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நாம் விழித்திருக்கும் போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது. போதுமான தூக்கம் இல்லாதது கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள் கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்வு திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்.

நீங்கள் வெயிலில் அடி எடுத்து வைக்கும் போதெல்லாம் புற ஊதாக்கதிர் பாதுகாப்பு சன் கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும்.அதேநேரம் நீங்கள் பயன்படுத்தும் சன் கிளாசிக் லென்ஸ்கள் 99 முதல் 100% புற ஊதா ஏ ,புற ஊதா பி கதிர்களை தடுக்க என உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். கண்களை கைகளைக் கொண்டு அழுத்தி தேய்க்க கூடாது அதனால் உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம்.

மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் கைகளால் அழுத்த தேய்க்கும் போது அது சேதம் அடையவும் வாய்ப்புள்ளது. வெளியே சென்று விட்டு வந்ததும் முகம் ,கை கால்களை சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு தூசி ,துகள் போன்றவை கண்களில் படுவதற்கு முன்னர் கழுவி விட வேண்டும். இதன் மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.

உடலில் நீரிழப்பு இருக்கும் போது உடல் வறட்சி ஏற்பட்டு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும். குறிப்பாக ஒமேகா 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால் கண்களை பாதிக்கும் மார்குலர் சிதைவை தடுக்கலாம். கணினி அல்லது மடிக்கணினி திரை உங்கள் கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும்.

மேலும் கண் மட்டத்திலிருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கணினியில் நீங்கள் பணிபுரியும்போது உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யவும் .அதே நேரம் அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கணினியில் பணிபுரியும் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையிலிருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்தும். இவை எல்லாவற்றுடன் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News