உங்களுக்கு 17 வயதா..? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க.. படிங்க
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நாடுமுழுவதும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்படும். அதன்படி 18 வயதை அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் நிலை இருந்தது.
இந்நிலையில் தற்போது 17 வயது நிரம்பியவர்கள் 18 வயது வரும் வரை காத்திருக்கும் அவசியம் இல்லை. ஒரு வருடம் முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் ஜனவரி 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 17 வயது நிரம்பியவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
புதிதாக திருத்தப்பட்ட 2023ம் ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியிடப்படும். 2023ம் ஆண்டில் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய காலகட்டங்களில் 18 வயது நிரம்ப உள்ளவர்கள் முறையே ஓராண்டுக்கு முன்னதாகவே தங்கள் விண்ணப்பங்களை 17 வயதில் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க https://voters..eci.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.