அப்பா குறித்து அர்த்தமுள்ள அனுபவ வார்த்தைகள் Appa quotes in Tamil

அம்மாக்களுக்கு சமமாக குழந்தை வளர்ப்பில் குழந்தை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் அப்பாக்களும் பங்குள்ளது;

Update: 2022-09-08 11:25 GMT

அப்பா! ஒரு அனுபவம்

அப்பா...ஒரு அனுபவ பெட்டகம். கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர். கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர், அம்மாவை விட அன்பு காட்ட ஒரு ஜீவன் இவ்வுலகில் இருக்கிறது என்றால், அது நம் அப்பா மட்டும்தான்! எதை மறந்தாலும் மறக்கமுடியாத அன்பைக் கொடுப்பவர் அப்பா. 

கண்ணில் கோபத்தையும்

இதயத்தில் பாசத்தையும்

வைத்திருக்கும் ஒரே உறவு அப்பா!

கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லை

கடவுளே கிடைத்தார் வரமாக

அப்பா!

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை

தாய்க்கும் பிள்ளைக்குமாய்

ஆயுள் வரை தங்கிடும்

ஒரே உயிர்!

எத்தனை பேர் நான் இருக்கிறேன்

என்று சொன்னாலும்

அப்பாவை போல் யாராலும்

இருக்கவே முடியாது.

ஆராய்ந்து பார்க்கும் வரை

யாருக்கும் தெரியாது

ஒவ்வொரு தந்தையின்

கஷ்டத்தை!

அப்பாவின் தோளில் ஏறி

சாமியை பார்க்கும் போது தெரியவில்லை

சாமியின் தோள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று

அம்மாவின் கருவறை போல, தாங்கி பிடிக்கும் அப்பாவின் கைகளும் புனிதமானது

உன் அப்பாவின் கஷ்டம் தெரிய வேண்டுமானால் அவர் இரவு தூங்கும் பொழுது அந்த சுருங்கிய முகத்தையும் ஆழ்ந்த உறக்கத்தையும் பார்.

கடவுளுக்கும் அப்பாவுக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது கண்களுக்கு தெரியாமல் இருப்பது கடவுள், கண்களுக்கு தெரிந்தும் கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் தான் அப்பா.

அப்பாவின் அன்பு எப்போதும் கொண்டாடப்படுவதில்லை ஆனாலும் அவர் நம்மை எப்பொழுதும் கொண்டாடாமல் இருந்ததில்லை.

Tags:    

Similar News