அன்னை வயிற்றில் பத்து மாதங்கள் சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை
அடம் பிடித்தால் சாதித்துவிடலாம் என்பதை பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பதே அவர்களின் அப்பாதான்
அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது. அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாய்க்கும் ஈடாகாது.
அப்பாவின் கரம் பிடித்து நடக்கையிலே, கவலைகள் அனைத்தும் மறந்து போகும். பிள்ளைகள் துவண்ட போதும், 'நான் இருக்கிறேன், எதற்கும் கவலைப்படாதே' என்னும் நம்பிக்கையை தோற்றுவித்து. தன் பிள்ளையின் நிழலாகவே இருப்பார். தந்தை தனது குழந்தைக்கு பிரச்னைகளை எதிர்கொண்டு போராடும் எதிர்நீச்சலை கற்றுத் தருகிறார். எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள்மீது படாமல், அனைத்தையும் தம் தோளில் சுமப்பவரே தந்தை. தந்தை தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று தோளில் சுமந்து உலகை காட்டுபவர்.
எந்த பெண்ணும் அவளின்
கணவனுக்கு ராணியாக
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நிச்சயம்
இளவரசியாக இருப்பாள்
அவளின் தந்தைக்கு
மகள் பிறந்ததும்
புதிதாய் நடைப்பழக
கற்றுக்கொள்கிறான்
ஒவ்வொரு தந்தையும்
அவளின் கைகளை பிடித்து
அப்பா கைக்குள் மகள் இல்லை
மகள் கைக்குள் தான் அப்பா
தொட்டிலில் தொடங்கும்
இந்த பாசத்துக்கு வாழ்நாள்
முழுவதும் மவுசு அதிகம்தான்
பெண்கள் தந்தையை
அதிகம் நேசிக்க காரணம்
எவ்வளவு அன்பு வைத்தாலும்
தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்
அவளின் தந்தை என்பதால்
இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று
இதுவரை எண்ணியதில்லை
ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால்
நான் மீண்டும் கேட்பது
உனக்கு மக்களாகவே
பிறக்க வேண்டும் என்று
கடவுள் அளித்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக
அவர்தான் என் அப்பா
தான் பெற்ற மகளை மட்டுமல்ல
மகளின் பெயரையும் சேர்த்து
பாதுகாக்க தங்களின் பெயரை
பின்னால் துணை அனுப்புகிறார்
ஆயிரம் உறவுகள்
நம் அருகில் இருந்து
நமக்கு ஆறுதல் சொல்லி
அணைத்தாலும்
அப்பாவின் அரவணைப்பில்
ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்
தன் மகளை
தாயின் மறுபிறவியாகவும்
தன் வீட்டு தெய்வமாகவும்
நினைக்கும் அப்பாக்கள்
இங்கு அதிகம்
பெண்களுக்கு வாழ்வில்
ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும்
அவளின் வாழ்நாள் முழுதும்
தன் அப்பாவின் உறவைப்போன்று
ஒரு உறவைப் பெறவே முடியாது
அவளில்லா நிறைவும் இல்லை
மகளில்லா மகிழ்வும் இல்லை
அவள் என்னை விட்டு பிரிந்து
அங்கே மருமகளாய் செல்கையிலே
மனம் ஏற்கா ஓர் விடையிங்கே
பிரியா விடை
மகளின் எல்லா பிரச்சனைக்கும்
உடனே தீர்வுகாணத் துடிக்கும்
முதல் இதயம் அப்பா மட்டுமே
தேவதையாய் ராட்சசியாய்
தாயாய் தங்கையாய்
தமக்கையாய் தோழியாய்
இருந்திடுவாள் பலவகையாய்
அவள் அவளாய்
ஆனந்தமாய் இருந்திடுவாள்
தந்தைக்கு மகளெனும் போதிலே
தந்தையின் தாய்மையை
மகள்களால் மட்டுமே உணர முடியும்
பெண் பிள்ளைகள் அதிக பாசமா
இருக்குறது அப்பாவிடம் தான்
ஆனால் செயல்பாடு சிந்தனை
நடவடிக்கை எல்லாம்
அம்மா மாதிரியே இருக்கும்
ஆயிரம் கவலைகள் உள்ள தந்தையின்
மிகப்பெரிய மகிழ்ச்சி தன் மகளின்
ஒரே ஒரு சிரிப்பில் மறைந்துள்ளது
ஒரு ஆணுக்கு பின்னால்
பெண் இருப்பதை விட
பெண்ணுக்கு பின்னால்
எப்போதும் அப்பா என்னும்
ஆண் இருப்பதை விரும்புவது
பெண் பிள்ளைகள் மட்டுமே
ஓராயிரம் கதை சொல்லி
அன்னை உறங்க வைத்த போதிலும்
உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா
மகளை பெற்ற
தந்தைக்கு மட்டுமே தெரியும்
தன்னை பெற்ற அன்னையின்
மறுபிறவி மகள் என்று
ஆணிடம் அடம் பிடித்தால்
சாதித்துவிடலாம் என்பதை
பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பதே
அவர்களின் அப்பாதான்