கலாமின் பொன்மொழிகளை படிங்க! வாழ்க்கையில் சாதிக்'கலாம்' APJ Abdul Kalam quotes in Tamil
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறிய நம் வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகள் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும்
இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகள் பலவற்றை கூறியுள்ளார். அவர் கூறிய ஒவ்வொன்றும் நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும்.
அப்துல் கலாம் கூறிய பொன்மொழிகள் சிலவற்றை பார்க்கலாம்
நமக்கு சிக்கல்கள் இருக்கும் போது புத்தகங்கள் நமது கண்ணீர் உடைத்து நம்மை சமநிலைக்குக் கொண்டு வருகின்றன .
ஒரு நல்ல புத்தகத்தை அறிந்து கொள்வதும், உரிமை கொள்வதும் வாழ்வின் இனிய வாரமாகும். புத்தகம் தான் உங்கள் நிரந்தர நண்பன்.
கனவுகள் எண்ணங்களாக மாறுகின்றன. எண்ணங்கள் தான் செயல்களாக முடிகின்றன. எனவே மாணவ மாணவியர் கனவுகள் பல காண வேண்டும்.
உங்கள் செயல்கள் உங்களுடன் நின்று விடுவதில்லை, அது உங்களது குழந்தைகளின் பின்னே நிழல் போல தொடரும்.
நாம் நன்கு கற்றால் செயல் திறன் பெறலாம். செயல்திறத்தால் ஆக்கபூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும். ஆக்கபூர்வமான எண்ணங்களால் அறிவு சக்தியாக மிளிரும். அந்த அறிவு நம் வாழ்வை வளமாக்கும்.
நாம் நமது நிலையை உணர்ந்து வாழ்வதுதான் மகிழ்ச்சியின் முதல் படி.
கல்வி கற்றல் என்பது அறிவு சரி அடைவதன் மூலம் அறியாமையில் இருந்து அகன்று, மேன்மை அடைந்து கொண்டே போகும் ஒரு முடிவிலா பயணம்.
இளைஞர்கள் தங்கள் வாழ்வில் மகத்தான முன்னேற்றம் அடைவதற்கு தங்களுக்கென்று ஒரு இலட்சியத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நமது வாழ்க்கையில் வெற்றியடைய ஒரே வழியான எளிமையையும், கடின உழைப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
நமக்கே உரிய திறமைகள், கொள்கைகளுடன் தனித்து பயணம் செய்யும் திறனை கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருந்தால் அது நம்மை துணிவு மிக்க மனிதனாக உருவாக்கும்.மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்.
மாசற்ற நேர்மையான மனிதனால் மட்டுமே மனசாட்சி என்னும் கருவியை பயன்படுத்த முடியும்.
நாம் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால், பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி ஆகும்.
காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து, இழுத்து நடக்காதே.
உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால் அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்
நமது சாதனைகளை பணத்தால் என்றுமே சாதித்துவிட முடியாது. விடாமுயற்சியால் மட்டுமே சாதிக்க முடியும்.
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது