அண்ணன் -தம்பி பாசத்திற்கான அன்பு மொழிகள் இதோ.....
Annan Thambi Quotes in Tamil-குடும்ப பாசத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது அண்ணன் தம்பி பாசம். ஒருசிலகுடும்பங்களில் பிரச்னைகள் இருந்தாலும் பல குடும்பங்களில் ரத்தபாசத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.;
Annan Thambi Quotes in Tamil
Annan Thambi Quotes in Tamil
குடும்ப பாசத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது தாய்ப்பாசம். அதற்கு பிறகு இடம் பெறுவது அண்ணன்-தம்பி பாசம். ஒரு குடும்பத்தில் பிறந்த அண்ணன், தம்பியிடம் பாசம் அதிகரித்து காணப்படும். அந்த பாசம் வாழ்நாள்இறுதி வரை தொடரும் குடும்பங்களும் உள்ளன.
ஒரு சில குடும்பங்களில் அப்பா-அம்மா காலம் வரை ஒற்றுமையாககூட்டுக்குடும்பமாக இருந்துவிட்டு பின்னர் அவர்கள் காலத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்பவர்களும் உண்டு. திருமணமாகாத நிலையில் அண்ணன்-தம்பி பாசம் அதிகரித்து காணப்படும். மனைவிகள் வந்த பின்னர் பாசத்தில் தொய்வு ஏற்பட்டாலும் உள்ளுக்குள் நிச்சயமாக ரத்த பாசம் மேலோங்கி காணப்படும். ஏன் பேசாத நிலையில் இருந்தாலும் மற்றவர்கள் மூலம் ஒரு சில விஷயங்களை கேள்விப்படும்போது அது அண்ணனாக இருந்தாலும்சரி, தம்பியாக இருந்தாலும் சரி மனது பதைப்பதை நாம் பார்த்ததில்லையா?
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதைப் போல் தம்பிகள் வைத்திருக்கும்அண்ணன்களுக்கு அசுர பலம் தம்பிகளால்தான். ஆனால் காலத்தின் கோலத்தினால் இன்றளவில் சொத்து பிரச்னைகளால் இந்த பாசத்திற்கும் பங்கம் வந்துவிட்டது என்பதை நினைக்கும்போதுதான் நெஞ்சம் பதைக்கிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் .... ஆனால் உண்மையாகவே பாசம் கொண்ட அண்ணன், தம்பிகள் இன்றும் உள்ளனர் என்பதால் இப்பாசத்திற்கு எப்போதும் நிரந்தரமாக மதிப்பு உண்டு.
அண்ணன் தம்பி பாசத்தினை பறைசாற்றும் வாசகங்கள் அழகு தமிழில் இதோ உங்களுக்காக....
*உலகம் முடிவதற்குள் உன் மகனும் என் மகனும் எம்மைப்போல் பழகிக்கொள்வதில் தான் நீயும் நானும் மீண்டும் பிறக்கின்றோம்
*நான் கேட்காமல் கடவுள் கொடுத்த பரிசு அண்ணன்
*ஆயிரம்தான் அவனிடம் சண்டையிட்டாலும் பேசாமல்இருப்பதில்லை இருக்கவும் முடியாது என் அண்ணனுடன்
*அண்ணனுடன் பிறந்த தம்பிகளுக்கு மட்டும்தான் தெரியும் அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா என்று...
*அப்பா மகன் உறவு போலதான் அண்ணன் தம்பி உறவும்..
*உன் பாசத்தை நிரூபிக்க ஆயிரம் கவிதைகள் தேவையில்லை
அண்ணா என்று நீ சொல்லும் ஒற்றை வார்த்தை ஆயிரம் கவிதைகளுக்கு சமம்
*அண்ணனோட பாசம் தங்கச்சிக்கு மட்டுமில்ல தம்பிக்கும்தான்
'எவ்வளவுதான் அடிச்சிக்கிட்டாலும் நமக்கு ஒன்னுனா துடிச்சு போறது அண்ணன் என்ற உறவு மட்டுமே
*ஆயிரம் சொந்தங்கள் எனக்காக துடித்தாலும் ...என்னை அன்பாக பார்த்துக்கொள்ளும் என் அண்ணன்தான் என் உலகம்
*அதிகமாக பேசிக்கொள்ளாவிட்டாலும் அண்ணன் தம்பி பாசத்திற்கு முன்னால் மற்ற உறவுகளின் பாசங்கள் எல்லாம் தோற்று போய்விடும்.
*தம்பியின் கண்ணீரை தாங்கிக்கொள்ளும் சக்தி அண்ணன்களுக்கு கிடையவே கிடையாது.
*அண்ணன் தம்பி உறவு என்பது வெறும் வார்த்தைகள் அல்ல.
*அண்ணன் தம்பி பாசம் என்பது பூமியில் இருக்கும் காற்று போன்றது இருப்பது தெரியாது .,. ஆனால் என்றும் நிறைந்திருக்கும்.
*அண்ணன் தம்பிகளின் பாசத்தின் வெளிப்பாடு அதிகமாக கோபமும் சண்டையாகவும்தான்இருக்கும்
*சந்தோஷமாக வாழ காசு பணம் தேவையில்லை. பாசமாக பார்த்துக்கொள்ள அண்ணா ஒருவன் இருந்தால் போதும்
*ஒரு அண்ணனின் உண்மையான அன்பை ஆயிரம்நண்பர்கள் கூட கொடுத்துவிட முடியாது. என்பதை என்றும் வாழ்வில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
*ஆயிரம் முறை சண்டை போட்டலும் தம்பிக்கு ஒரு பிரச்னை என்றால் உயிரையும்கொடுக்க துணியும் உறவு அண்ணன் மட்டுமே
*அண்ணன் தம்பி உறவை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதில் ஓராயிரம் அர்த்தங்கள் நிறைந்துள்ளன.
*அண்ணன் ஒருவன் இருக்க பயம் எதற்கு ...துணிந்து செல் நிழல் போல் உன்கூடவே வருவான்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2