அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்

அறிஞர் அண்ணா தமிழ் மொழிக்கு தனது கதைகள், திரைக்கதைகள், பொன்மொழிகள் மூலம் பெரும்பங்கை ஆற்றியுள்ளார்.;

Update: 2024-05-05 08:44 GMT

அண்ணாவின் பொன்மொழிகள்

பேரறிஞர் அண்ணா! தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லமையுடையவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார். சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும், தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன் முதலாக பரப்பியவரும் இவரே.

நடுத்தர வர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவக்கினார். தனது அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக அவர் வெளிப்படுத்தினார்.

அண்ணா கூறிய பொன்மொழிகளை பாருங்கள்.

• பிறருக்குத் தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான், அவர்கள் தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர் ஆகிவிடுகிறோம்.

• வாழ்க்கை ஒரு பாறை, உங்களிடம் அறிவு என்ற உளி இருக்கிறது. அழகாக சிற்பமாக வடித்து ரசிப்பதற்கு என்ன?

• நாள், கோள், நட்சத்திரம், சகுனம், சாத்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடைக் கற்கள்.

• எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும், ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடசித்தமும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்.

• போட்டியும், பொறாமையும், பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்குத் துணையாக இருக்கக் கூடியது கல்வி மட்டுமே.

• நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

• உழைப்பே செல்வம், உழைப்பார்க்கே உரிமையெல்லாம். உழைப்பாளிகளுக்கே இந்த உலகம் உரியது.

• சட்டம் ஓர் இருட்டறை..! அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு..! அந்தப் பிரகாசமான விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை.


• எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

• தன்னை வென்றவன் தரணியை வெல்வான்.

• கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திடம் இல்லை என்றால் கடமையை நிறைவேற்ற முடியாது..!

• ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள், எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்.

• ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையே செய்யும் வேலை தான், ஓய்வு…

• எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை விளக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள்

• ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு – அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் – அதற்குப் பெயர் ஜாதி. கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் – அதற்குப் பெயர் பூஜை, தர்ச்சனை, சடங்கு.

• உழவனின் உள்ளத்திலே புயல் இருக்குமானால் வயலிலே வளம் காண முடியாது.


• பாடத்திட்டங்களில் பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான திட்டம் உருவாக்கப்படாத வரையில் பகுத்தறிவு வளராது நம் நிலையும் உயராது.

• மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும்.

• விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு, தீங்கு.

• ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

• அஞ்சாநெஞ்சு படைத்த இலட்சியவாதிகள் தான் ஒரு நாட்டிற்கு கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள்.

• சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானதுதான். ஆனால் அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

• பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான் மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம் குறையும், மனத்திலுள்ள மாசு நீங்கும், காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும்.

Tags:    

Similar News