கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருகிறான்... படிச்சு பாருங்க...

Angry Quotes in Tamil- மனித வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள்தான் வலுப்பெறும்.அந்த வகையில் குணங்களில் ஒன்றான கோபம் பலரின்வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. இதற்கான வாசகங்கள் இதோ.....

Update: 2022-09-14 09:49 GMT




Angry Quotes in Tamil-மனித வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள்தான் வலுப்பெறும்.அந்த வகையில் குணங்களில் ஒன்றான கோபம் பலரின்வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. இதற்கான வாசகங்கள் இதோ.....

மனிதர்களுடைய எதிர்மறை பண்புகளில் முக்கிய முதலிடத்தினை வகிப்பது கோபம் என்ற மூன்று எழுத்துதான். இதற்கு நேர்மறையான பண்பு என்ன தெரியுமா? பொறுமைதான். இந்த பொறுமை என்று ஒரு பண்பு இல்லாததால் அநாவசியமாக கோபப்பட்டு நஷ்டத்தினை சந்தித்தவர்கள் இந்த உலகில் ஏராளம்.

ஒரே ஒரு நிமிஷந்தாங்க...கோபம்...ஆளையே கவிழ்த்துவிடும்.நாம் வேலை பார்க்கும்இடமாக இருந்துவிட்டால் அவ்வளவுதான்.. வேலை காலியாயிவிடும். எனவே பொறுமை என்பது அனைவருக்கும் தேவையானஒன்று. அதேபோல் பொறுமைக்கு போனசாக நிதானத்தினை வைத்துக்கொள்ளலாம். நிதானத்துடன் செயல்படும் காரிய செயல்பாடுகள் எப்போதுமே வெற்றியினை தரும். அவசரத்தில்செய்யப்படும் காரியங்கள் ஆபத்தினையே தரும்.

வேணுமுன்னா.. நீங்க ஏதாவது ஒரு ஜெயிலுக்கு சென்று அங்குள்ள கைதிகளிடம் பேசிப் பாருங்களேன்... ஆமாங்க...அந்த ஒரு நிமிஷம் அவசரப்பட்டுட்டேன்...அதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு சிலருக்கு கோபம் வந்தால்தலை கால் புரிவதில்லை. கண்ணுக்கு முன் உள்ள பொருட்களை சூறையாடிவிடுவார்கள். அதுவே பொது இடமாக இருந்தால் யோசித்துதான் பாருங்களேன்...உள்ள தாங்க... அநாவசிய செலவு வேறு...

வீடுகளில் அதைப்போல்தான்.. மனைவி கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காததால் இருவருக்கும் பிரச்னை ஆரம்பிக்கும். கடைசியில் வார்த்தையின் தடிமன்களால் விபரீத விளைவுகள் ஏற்பட்டுவிடும்.

உங்களுக்குதெரியுமா? நாம் கோபப்படும்போது நமது உடலில் உள்ள ரத்தம் முதன் முதலில் சூடேறுகிறது. நரம்புகள் இறுக்கமாகிறது. இதனால் ஒரு சிலருக்கு ரத்த அழுத்தமானது எகிறிவிடுகிறது. நீங்கள் கோப்பப்படுவதால் உங்கள் ஆரோக்யம் கடுமையாகவே பாதிப்படைந்துவிடும்.. எனவே எப்போதும் பொறுமையாக எதனையும் டீல் பண்ணுங்க.. பேசித் தீர்த்துக்கொள்ளலாம். சப்தமாக பேசித்தான் சண்டைபோட்டுத்தான் பிரச்னைகளை தீர்க்கவேண்டும் என்பதில்லை.


கோபத்திற்கான அருமையான வாசகங்கள் இதோ.....

கடனே இல்லாதவன் பணக்காரன் நோயே‌‌ இல்லாதவன் லட்சாதிபதி கோபமே இல்லாதவன் கோடீஸ்வரன்..!

சிடுமூஞ்சிகளும் கோப்க்காரர்களும் தானாக பிறப்பதில்லை... சில சுயநலவாதிகளும் சொம்பு துாக்கிகளுமே உருவாக்குகிறார்கள்.

அதிக கோபப்படுபவர்களிடம் நெருங்கி பழகி பாருங்கள்.. நேர்மையும், உண்மையும், அவர்களிடம் நிறைந்து இருக்கும்

ஒருவரின் கோபம் நம்மை காயப்படுத்தும் என்பதை உணரும் நாம், நம் கோபமும் மற்றவர்களை காயப்படுத்தும் என்பதை உணராதது ஏன்?

கோபமும் புயலும் ஒரே மாதிரிதான் அடங்கின பிறகுதான் தெரியும் அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று...

கோபத்தில் கிடைத்ததையெல்லாம் துாக்கி எறிவதை விட அந்த கோபத்தையே துாக்கியெறிந்தால் வாழ்க்கை சிறக்கும்

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை

கோப்பையில் கொதிக்கும் நீரின் விளைவு ஆவி ஆகிவிடும்


கோபத்தில் உதிர்க்கும் வார்த்தையின் விளைவு ஆவி போனாலும் விடாது.

அணை உடைத்த நீர் அழிவையே தரும். மனம் உடைத்த வார்த்தை இழிவையே தரும்.

யார் மீதும் எப்போதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள்.. அன்பால் சாதிக்க முடியாததை கோபம் சாதித்து விடாது.

கோபத்தின் போது வார்த்தைளை கொட்டி தீர்க்காதிர்கள்.

அந்த சுடு சொல் உயிர் போகும் வரை உள்ளிருந்து வலிக்கும்.

கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்…ஆனால், அந்தக் கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால் தான் முடியும்…!

மனிதன் தன் கோபத்தை அடக்கியாளும் போது தன் அறிவின் பயனைப் பெறுகிறான்.

கோபத்தை கட்டுப்படுத்துங்கள், தாமதப்படுத்துங்கள்.அதுவே உண்மையான வீரம்.

கோபம் கொண்ட மனிதன் உண்மை, தூய்மை, அடக்கம் ஆகியவற்றை இழந்து விடுகிறான்.

கோபம் என்பது வலுவான காற்றைப் போன்றது. சற்று நேரத்தில் அது தணிந்து விடும்.

ஆனால் அதற்குள் பல மரங்களின் கிளைகளை அது முறித்திருக்கும்.

பாசத்தின் உச்சமாகவும் பிரிவுக்கும் அடித்தளமாகவும் அமைவது கோபம் ஒன்றே.

நிதானம் என்ற நீரைக் கொண்டு கோபம் என்ற அக்னியை தணித்திடுதல் நன்று…

யார் மீதும் எப்பொழுதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள்! அன்பால் சாதிக்க முடியாததைக் கோபம் சாதித்து விடாது!

கோபமும் ஒரு வகையான பாசம் தான்! அதை எல்லாரிடமும் காட்டி விட முடியாது! நம் மனதுக்கு நெருங்கியவர்களிடம் மட்டுமே தான் காட்ட முடியும்!

கோபப்படுபவர்களுக்கு பாசமும் அதிகம், ரோசமும் அதிகம்! ஆனால் வேசம் கிடையவே கிடையாது!

அதிக கோபப்படுபவர்களிடம் நெருங்கி பழகி பாருங்கள்! நேர்மையும் உண்மையும் அவர்களிடம் நிறைந்தே இருக்கும்!

அதீத அக்கறையின் வெளிப்பாடெல்லாம் சிலநேரம், அளவுமீறிய கோபத்தை கொண்டுவந்துவிடும்!

சில ஏமாற்றங்களும் தோல்விகளும் தான் பெரும்பாலானோர் கோபத்திற்கு காரணம்! அளவுக்கு மீறிய கோபம் நம்முடைய நற்குணங்களை எளிதில் மறைத்து விடுகிறது!

அன்பை பெற்றுக்கொள்ள விரும்பும் மனங்கள், கோபத்தையும் அனுசரித்து செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

போலியான புன்னகையை விட, திமிரான கோபமே மேல்.

பெண்மையிடம் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு கோபத்திற்கு பின்னாலும், ஆண்மையின் மீதான அதீத அன்பே காதலாய் ஒளிந்திருக்கும்!

நம்மனம் விரும்பும் ஒருவர் நம்மிடம்காட்டும் சரியான கோபத்தின் முறையே, நம்மீது அவர்களுக்கு இருக்கும் அன்பின் மறைமுக வெளிப்பாடாகும்.

ஒவ்வொரு கோபமும் ஏதேனும் ஒரு அழிவிற்கு பின்னரே அமைதி தரும். அந்த அமைதி, கண்ணிரின் தொடக்கம் ஆகும்!

சில நேரங்களில் கோபம் கூட ரசிக்கும் பட்டியலில் முதலிடம் பிடித்து விடுகிறது, பிடித்தவர்கள் படும்போது!

பேயைக் கண்டாலும் பயம் இல்லை! உன் கோபமுகத்தைக் கண்ட பிறகு!

கோபப்படுபவர்களிடம் பழகிப் பாருங்கள்! நேர்மையும், உண்மையும், அன்பும் எப்படி என்பதை கற்றுக் கொள்ளலாம்!

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே! முடிவு எடுக்கும் முன்னே பல தடவை யோசி, பிறகு எந்த கடினமான செயலும் உனக்கு தூசி!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News