அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
Unmaiyana Anbu Kavithai in Tamil-மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே...கடினமான இதயம் கூட அன்பை மழையாய் பொழியும் போது கரையும்;
Unmaiyana Anbu Kavithai in Tamil-அன்பை குறித்து ஏராளமான மேற்கோள்களும், கவிதைகளும் உள்ளன. வள்ளுவர் அன்புடைமை குறித்து ஒரு அதிகாரமே படைத்துள்ளார். அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டுமே.
அன்பு இருக்கும் இடத்தில் பொறாமை இருக்காது, போட்டி இருக்காது. இரக்கம் என்பது தானாக சுரக்கும்.
அன்பு குறித்த சில கவிதைகளை உங்களுக்காக இங்கு அளிக்கிறோம்
செடியில் பூத்த மலர் மண்ணில் உதிர்ந்து போகும்.
மனதில் பூத்த அன்பு என்றும் உதிர்வதில்லை.
அழகை பார்த்து காதலிக்காதீர்
இளமையில் மோகமே அழகாக தெரியும்
முதுமையில் அன்பு தான் எல்லாமுமாய் தெரியும்.
அன்பு எவ்வளவு கிடைத்தாலும் சலிக்காது!
வெறுத்தாலும் விட்டு விலகாது!
அன்பு என்பது கோபத்திலும் குறையாதது
உயிர் போகும்வரையிலும் விடாதது.
உண்மையான அன்பு மலைகளில் தோன்றும் அருவி போல
ஆயிரம் கசப்பான செடிகளை சுமந்து வந்தாலும்
அனைத்தும் மூலிகையாய் பாசம் மாறாமல் உன் பின்னால் வரும்
அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு
அதை பெற்றாலும் கொடுத்தாலும் மகிழ்ச்சியே.
அன்பு
கிடைத்தவர்களுக்கு பொக்கிஷம்
இழந்தவர்களுக்கு தேடும் புதையல்.
அன்பை கொடுக்கும் மனம் கொண்டால் இரக்கமும் நம் இயல்பாகும்.
விதைக்கும் விதையே அன்பான நாள்
நாளை மலரும் தலைமுறையிலும் அன்பே சிவமாகும்.
அன்பு என்னும் புத்தகத்தின் முடிவுரை,
பெரும்பாலும் பிரிவாகத்தான் இருக்கிறது.
அன்பின் வடிவம் பல கோணத்தில் வரலாம்
ஆனால், உன்மையான அன்பு உருவத்தில் உருவாகுவதில்லை
உள்ளத்தால் உருவாகுவதே.
புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விலகாத உண்மையான அன்பு மட்டுமே.
அன்பு வண்ணத்து பூச்சியை போலத்தான்
வலுக்கட்டாயமாக விரட்டி பிடிக்க நினைத்தால் அது பறந்துவிடும் இல்லை இறந்துவிடும்.
சீண்டாமல் ஒதுங்கி நின்றால் அதுவே உன் தோள்களில் வந்து அமரும்.
அன்பு கொண்ட அனைவரும் விலகிச் செல்வதால்,
சில நேரம் நேசிப்பவர்களிடம் அன்பை சொல்ல கூட அச்சம் வருகிறது, சொன்னால் பிரிந்துவிடுவார்களோ என.
வாழ்வில் அனுபவம் ஒருவனை எப்படி வேணாலும் மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றுகிறது.
அன்பு இருக்கும் உள்ளம்
எப்போதும் அமைதியுடன் இருக்கும்
அன்பு மட்டுமே யாரையும் காயப்படுத்தாத
அனைவரையும் வீழ்த்தக் கூடிய ஆயுதம்.
அன்பை உணர வேண்டுமானால்
முதலில் உண்மையாக இருக்க வேண்டும்!
உண்மை இல்லாத உள்ளத்தில் அன்பு என்பது வெறும் நாடகமே!
அவளுக்கு பிடிக்காததை ஒன்று செய்து விட்டேன்.
அதனால் என்னை விட்டு சென்றுவிட்டாள்
அவளுக்கு பிடிக்காதது அதிகமாய் அன்பு வைப்பது.
நாம் விலகினாலும் தேடி வந்து பேசும் சில அன்பான உள்ளங்களுக்கு தேவைக்காக பழகும் சுயநலம் ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை அன்பு ஒன்றே இலக்காக.
அன்பு வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது அதுவும் அளவோட இருக்க வேண்டும் இல்லை என்றால் அதுவும் நஞ்சு தான்.
கள்ளமில்லா நல்ல அன்பு வேண்டுமென்றால்
நாட வேண்டிய ஒரே இடம் குழந்தைகளிடம் மட்டுமே.
வேண்டாம் என்று வெகுதூரம் நாம் விலகிச்சென்றாலும்
மீண்டும் விட்ட இடத்திற்கே நம்மை அழைத்து வந்து விடுகிறது
ஒரு சிலரின் அன்பு.
குணம் மாறா அன்பு புரிதலுடன் விட்டுக் கொடுக்கும் போது ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத அன்பு வளர்கிறது பேரன்பாக.
நடிக்க தெரியாத அன்பில் அதிகம் இருப்பது
கோபமும், சண்டையும் தான்.
அன்பு ஒரு திரவம் கொதிப்பவர்களிடம் ஆவியாகிவிடுகிறது, குளிர்கிறவர்களிடம் உறைந்துவிடுகிறது.
அன்பை கொட்டவும்
அக்கறை காட்டிடவும்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
மனம் ஏங்குவதென்னவோ
விரும்பி சிறைபட்ட
அந்த ஒற்றை இதயத்திடம் மட்டுமே.
நாம் இந்த உலகத்தில் தங்கி செல்லும் காலத்திற்கான வாடகை,
மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே.
சிலரின் போலி அன்பு என்ற காகித கப்பல்களை உருவாக்கி கொண்டு இருக்கிறேன் அவை மூழ்கிவிடும் என தெரிந்தும்.
உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது
அப்படிப்பட்ட உண்மையான அன்பை தேடும் போது தான் அதன் மதிப்பு தெரியும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2