தாயிற் சிறந்த கோயில் இல்லை! அம்மா பற்றிய பொன்மொழிகளை பார்ப்போமா? Amma quotes in Tamil
Amma Quotes in Tamil-தள்ளாடும் வயதில் இருந்தாலும், தன் நலத்தை விட தனது பிள்ளையின் நலனையே கருதிக் கவலைப்படும் உன்னதமான தாயை பற்றிய பொன்மொழிகள்;
Amma Quotes in Tamil
தாய் என்பவள் இல்லை என்றால் இந்த உலகத்தில் மனிதன் என்ற பிறப்பே இருந்திருக்காது. மனிதன் மட்டுமல்ல பறவை விலங்கு அனைத்திற்கும் அன்பினுடைய முழு வடிவமே தாய்மை தான். சுயநலம் இல்லாத ஒரு உறவு என்றால் இந்த உலகில் தாய் மட்டும்தான். அம்மா என்ற ஒரு வார்த்தையில் முழு உலகமே அடங்கிவிடும்.
தாயிற் சிறந்த கோயில் இல்லை என்று ஒளவையார் தாய்மையினை போற்றினார். தள்ளாடும் வயதில் இருந்தாலும், தன் நலத்தை விட தனது பிள்ளையின் நலனையே கருதிக் கவலைப்படும் உத்தமத் தாய்மார்கள் நிறைந்தது நம் நாடு. அத்தகைய நடமாடும் தெய்வங்களாக விளங்கும் அன்னையர்களை போற்றுவோம்
கோடி உறவு அருகில் இருந்தாலும் அம்மாவை மிஞ்சிட உலகில் உறவேதும் இல்லை.
கோவிலுக்குள் இருக்கும் சிலையை விட.. உயர்ந்த தெய்வம் அம்மா தான்.
பத்து நிமிடம் கூட தாங்க முடியா வயிற்று வலியை.. ஆனால் பத்து மாதம் சுமந்து.. தன் உயிரை துச்சமாக எண்ணி என்னை படைத்த கடவுள்.. அம்மா.!
தன் பிள்ளை தூங்க தொட்டில் ஒன்று செய்து.. இரவு பகலா தாலாட்டு பாடி தூங்க வைப்பவள் அம்மா.!
தங்கத்தில் கட்டில் இருந்தாலும் அம்மாவின் மடியில் உறங்குவது போல் வராது.!
"நீங்கள் உங்கள் தாயைப் பார்க்கும்போது, உங்களுக்குத் தெரிந்த தூய்மையான அன்பைப் பார்க்கிறீர்கள்."
"தூய தங்கத்தை பொன்னாக்குவது சாத்தியமாக இருக்கலாம், ஆனால் ஒருவருடைய தாயை யார் இன்னும் அழகாக ஆக்க முடியும்?"
Amma Quotes in Tamil
தாய்மார்கள் மட்டுமே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஏனென்றால் அவர்கள் தான் தங்கள் குழந்தைகளை சுமந்து பெற்றெடுக்கிறார்கள்.
தாய்மை என்பது உலகின் மிகப்பெரிய வாழ்க்கை சக்தி. இது மிகப்பெரியது மற்றும் பலமானது – இது எல்லையற்ற நம்பிக்கையின் செயல்
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பை காட்டாத முகம்.. அம்மா..!!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2