அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!

தாயின் அன்பு எப்போதும் நமக்கு அர்த்தமுள்ளதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.;

Update: 2024-05-09 11:59 GMT

koppuppadam

ஒரு உண்மையான அன்பை காணவேண்டும் என்றால் அது தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். நம் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டவர் அம்மா மட்டுமே. நாம் எவ்வளவு வயதானாலும், நம் தாயின் அன்பு எப்போதும் நமக்கு அர்த்தமுள்ளதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். அம்மாவின் அன்பு தூய்மையானது. தாயின் அன்பிற்கு நிகரான உண்மையான பாசம் இந்த உலகில் இல்லை.

"அம்மா" நம்மை சேதமின்றி சிற்பமாக்க தான் முழுதும் தேய்ந்த உளி அவள்.

பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்

பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.

கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்

கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.

காயங்கள் ஆறிபோகும்…

கற்பனைகள் மாறிபோகும்…

கனவுகள் களைந்துபோகும்…

என்றுமே மாறாமல் இருப்பது

தாய் நம் மீது கொண்ட பாசமும்…

நாம் தாய் மீது கொண்ட பாசமும்…

உயிருக்குள் அடைக்காத்து

உதிரத்தை பாலாக்கி

பாசத்தில் தாலாட்டி

பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து

நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை..!

  • உடைந்து போகும் தன் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு ஊன்று கோலாக அமையும் அம்மாவின் அரவணைப்பு, பேரானந்தமே!
  • தனக்காக வாழாமல் எந்நாளும் தன் கணவருக்காக, தான் பெற்ற குழந்தைகளுக்கா வாழும் ஓர் உன்னத ஓவியம் "பெண்"
  • உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை
  • இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை
  • தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே கட்பிக்க பட்டு விடுகிறது “அம்மா” என்னும் மூன்று எழுத்து.
  • ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும், "உனக்கு என்னடா குறை” என சொல்லும் அன்னையின் அன்பிற்கு நிகரான சக்தி ஏதுமில்லை!
  • ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமையலறை
  • பூமி தாங்கும் முன்னே, நம்மை பூவாய் தாங்கியவள் நம் அன்னை.
  • அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின் அன்பு...!
  • கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!
  • பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில் !
  • இந்த உலகில் அளவிட முடியாத ஒன்று உள்ளது என்றால் அது தாயின் பாசம் மட்டும் தான்.
  • வலி நிறைந்தது என்பதற்காக யாரும் விட்டுவிடுவதில்லை தாய்மை!
  • நான் முதல்முறை பார்த்த அழகிய பெண்ணின் முகம் அம்மா
  • ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள்
  • மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசும் துரோகம் தெரியாத உறவு உலகில் அம்மா மட்டுமே
  • முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்...! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான் அம்மா !
  • அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம் அம்மா
  • வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. அவள் தான் அம்மா.
  • அம்மா என்ற ஒரு உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் ஒரு அனாதைதான்.
  • உண்மையான அன்பு ஆயிரம் தவறு செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது !
  • ஆரம்பம் முதல் கடைசி வரை மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு, அது அம்மாவின் அன்பு மட்டுமே.
  • தாயின் ஒவ்வொரு அடக்கு முறையும் பிள்ளையின் சுதந்திரத்தை பறிப்பதற்கல்ல வாழ்க்கையை போதிக்கவே..!!!
  • நம்ம கஷ்ட படும் போதும் அழும் போதும் கூடவே இருந்து ஆறுதல் சொல்வது அம்மா மட்டும்
  • ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலைப்பட மாட்டாள்
Tags:    

Similar News