பெற்றவர்களை பாராட்டி அழகு தமிழில் அற்புதமான வரிகள்.
Appa Amma Kavithaigal Tamil-மொழி, பண்பாடு, கலாச்சாரம் மாறினாலும் மாறாமல் தொடர்வது நம்மை பெற்றவர்கள் நம் மீது கொண்டிருக்கும் பாசம் மட்டும் தான்.;
Appa Amma Kavithaigal Tamil-உலகில் நமக்கு பிடித்தவர்கள் என்று கூறினால் அதில் முக்கியமானவர்கள் அம்மா அப்பா. தினம் வைத்து கொண்டாட அவர்கள் உறவுகள் அல்ல... உயிர்கள்! அவர்களை, ஒவ்வொரு நாளுமே நாம் கொண்டாடத்தான் வேண்டும்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. அன்னை,தந்தையே அன்பின் எல்லை என்றார் ஒரு கவிஞர்.
தாயின் அன்பு மதிப்பிட முடியாதது அதனை அளப்பதற்கு அளவுகோல்கள் இல்லை, தந்தை அன்பு புரிந்து கொள்ள முடியாதது கண்டிப்புகள் அதிகம். ஆனால், அதை விட பாசம் அதிகம்
தாய் , தந்தை அன்பை, யாராலும் விலைக்கு வாங்க முடியாது. தாய், தந்தை அன்பை நிறையப்பெற்றவர்கள் கடவுளுக்கே வரம் தருபவர்கள்...
இந்த பதிவில் அம்மாஅப்பா பற்றிய சில மேற்கோள்களை பார்க்கலாம்
நம் வாழ்க்கை அழகுபெற, தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தாய் தந்தையரை விட்டுச் சென்று அரச வாழ்க்கை வாழ்ந்தாலும், அது பயனற்றதே. உலகம் உனக்கு எதிராயினும், உன் நண்பன் உனக்கு பகையாயினும், நீ விரும்பிய உறவு உன்னை வெறுத்தாலும் என்றும் உன் நிழல் போல் உன்னை தொடர்பவர் உன் பெற்றோர் மட்டுமே!
தாங்கி பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்தது இல்லை.
கடவுளுக்கும் அப்பாவுக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது கண்களுக்கு தெரியாமல் இருப்பது கடவுள், கண்களுக்கு தெரிந்தும் கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் தான் அப்பா.
அப்பா நீங்கள் கவிதை அல்ல, உரைநடை.
உங்கள் வாழ்க்கை வரலாறு அல்ல, வாழ்க்கையின் எதார்த்தம்.
அப்பாவின் அன்பு எப்போதும் கொண்டாடப்படுவதில்லை ஆனாலும் அவர் நம்மை எப்பொழுதும் கொண்டாடாமல் இருந்ததில்லை.
மலர்களை மட்டுமே நாம் ரசிப்பதால் வேர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
அது போல் தான் நம் தந்தையும்.
வாழ்க்கையில் கடைசிவரை தனக்கென்று சமைக்காத ஜீவன் "அம்மா"
தனக்கென்று சம்பாதிக்காத ஜீவன் "அப்பா"
ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால், முதலில் தாய்க்கு செய்
ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தந்தைக்கு செய்
அம்மாவின் பாசம், கருணையில் தெரியும்
அப்பாவின் பாசம், அவரது கடமையில் புரியும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2