நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் தமிழில்..
Amla Juice Benefits In Tamil-நெல்லிக்கனி சாறு அல்லது நெல்லிக்காய் ஜூஸில் அருந்துவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன?;
Amla Juice Benefits In Tamil-இந்தியாவின் மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் கொண்டு நோய் தீர்க்கும் முறைகள் கூறுகின்றன.
மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நெல்லிக்கனியை அரைத்து நெல்லிக்கனி சாறு அல்லது நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
தலை முடிகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும். நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வேளையில் அருந்துபவர்களுக்கு வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று தலைமுடி ஆரோக்கியமாக வளர்கிறது. இயற்கையான பளபளப்பு தன்மையை தலைமுடிக்கு கொடுக்கிறது. பொடுகு பேன் தொல்லை, தலை முடியில் ஏற்பட்டிருந்தாலும் அவை அறவே நீக்குகிறது. மேலும் தலை முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடிகளின் வேகமான வளர்ச்சியை தூண்டுகிறது. மிக இளவயதிலேயே இள நரை, பித்த நரை போன்றவை மிக விரைவில் ஏற்படுவதையும் அறவே தடுக்கிறது
உடல் எடை குறையும்
நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். தில் இருக்கும் நார்ச்சத்து, உணவில் இருக்கின்ற கொழுப்புக்கள் உடலில் படிந்து எடை அதிகரிப்பதை தடுத்து. உடல் எடையை குறைக்கிறது.
எலும்புகள் ஆரோக்கியமாகும்
வலிமையான எலும்புகள் உருவாக கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும் ஆர்த்தரைடீஸ் நோய் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் அருந்த கொடுத்ததில் அவர்களின் எலும்புகளில் ஏற்படுகின்ற வலி மற்றும் வீக்கம் வெகுவாக குறையும்.
உடல் சூடு தணியும்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
நீரிழிவு
தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
கண்கள்
கண் பார்வை மேம்பட வேண்டுமெனில், நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு கண்களில் உள்ள கருவிழியின் திசுக்களின் வளர்ச்சி குறைபாடு ஏற்படுவது தடுக்கப்பட்டு, கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. மேலும் நெல்லிக்காய் ஜூஸ் கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும்.
இரைப்பை கோளாறுகள்
நெல்லிக்காய் ஜூஸ் இரைப்பை கோளாறுகள், அமிலக்குறை நிலை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைக் குணப்படுத்தும். முக்கியமாக கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
இதயம்
உடலில் இருக்கின்ற ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, இதய தசைகளை வலிமையாக்கி, அதிகளவிலான இரத்தத்தை உடல் முழுவதும் அழுத்த உதவி, பல இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
தூக்கமின்மை
நெல்லிக்காய் தூக்கமின்மையைப் போக்கும். அதிலும் நெல்லிக்காய் ஜூஸ் உடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
வாய் ஆரோக்கியம்
நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், அது வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, பற்களை வலிமையடையச் செய்யும். மேலும் வாயில் புண் இருந்தாலும் அதனை நெல்லிக்காய் ஜூஸ் குணமாக்கும்.
இரத்தம் சுத்தமாகும்
நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.
சரும அழகு மேம்படும்
முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.
எச்சரிக்கை
அளவுக்கு மீறி எதையுமே சாப்பிடக் கூடாது. நெல்லிக்காய்ச் சாறும் அப்படித்தான். இப்படிக் குறிப்பிட்டு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. வெறும் நெல்லிக்காய் என்றால், ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவோம். ஆனால், அதை ஜூஸாக்க வேண்டுமென்றால், நான்கு முதல் ஐந்து நெல்லிக்காய்களாவது தேவைப்படும். நான்கு, ஐந்து நெல்லிக்காயை ஒரே நேரத்தில் உட்கொள்வது, அதையும் தினமும் ஜூஸாக அருந்துவது பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
அப்படி என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
- நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்தது. பொதுவாகவே, வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், அதிகளவு உட்கொள்ளும்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். அசிடிட்டி பிரச்னை இருப்பவர்களுக்கு, இது மேலும் தொந்தரவை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்ப்பதே நல்லது.
- இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும். என்றாலும், அளவுக்கதிகமாக உட்கொண்டால் மலம் கடினமாகி பிரச்னையை ஏற்படும். அதிலும், தண்ணீரைக் குறைவாகக் குடிப்பவர்களுக்குப் பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருக்கும்.
- இதில் டையூரிடிக் தன்மை இருக்கிறது. இது, தோலிலுள்ள ஈரத் தன்மையை வற்றச் செய்யும் தன்மைகொண்டது. அதிகளவு நெல்லிக்காயை ஜூஸாக அருந்தினால், உடல் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு இதனால் உடல் எடையும் குறையலாம்.
- நெல்லிக்கு உடல் சூட்டைக் குறைத்து, குளிர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. இதை, பழம் அல்லது சாறு என எப்படி உட்கொண்டாலும் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்கள் தீவிரமடையும்.
நெல்லிக்காயின் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென்றாலும், தொடர்ச்சியாக அதை அதிகமாகவோ, சாறாகவோ உட்கொள்ளக் கூடாது. எனவே, தொடர்ச்சியாக தினமும் நெல்லிச்சாறு அருந்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2