alone quotes in tamil வாழ்க்கையில் தனிமை ஒரு கொடுமை... படிச்சு பாருங்க...

alone quotes in tamil வாழ்க்கை என்பது சுவாரசியமானது. கூடிக்கலந்து பேசும்போது கலகலவென இருக்கும். தனிமை அமைதி தவழும் இடமாக இருக்கும். இருந்தாலும் தனிமை என்பது கொடுமைதாங்க.;

Update: 2022-09-19 11:04 GMT


alone quotes in tamil


alone quotes in tamil

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்... என்னும் சினிமா பாடலைப்போல் மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம் என்று கூட சொல்லலாம். பிறப்பால்மனிதர்கள் ஒன்றுபட்டாலும் குணத்தால், கொள்கையால் வேறுபட்டு காணப்படுகின்றனர். ஒரே குடும்பத்தில் பிறந்த ரத்த உறவுடைய சகோதரர்களிடம்கூட குணம் வேறுபடுவதைக்காண்கிறோம்.

அந்த வகையில் மனிதர்களாக பிறக்கும்ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஆசா, பாசங்கள் உண்டு. அதாவது ஒரு சிலருக்கு 4 பேர் கூடி இருந்தால்தான் பேச பிடிக்கும்.ஆனால் ஒரு சிலருக்கோ கூட்டம் கூடுவதே பிடிக்காது. தேவையில்லாமல் யாரிடமும் பேச மாட்டார்கள். நீங்கள் பேசினால் அதற்கு எதிர்பதில் மட்டும் வரும். அந்த வகையில் தனிமை விரும்பிகள் என்று கூட சொல்லலாம்.

அக்காலத்தில் திண்ணை எதற்கு கட்டியிருந்தார்கள் தெரியுமா? அக்காலத்தில் இடம்பெயர்தலுக்கு முக்கிய வாகனமே நடைதான். பல ஊர்களிலிருந்து நடைப்பயணமாகவே வெளியூர் செல்வார்கள். அவர்கள் இரவு நேரத்தில் தங்கி செல்ல அந்த திண்ணைகள் பயன்பட்டது. திண்ணையில் பள்ளிகள் நடக்க பயன்பாடாக இருந்தது. மேலும் இரவில் தெருவில் இருப்பவர்கள் சாப்பிட்டுசற்று ஓய்வெடுக்க திண்ணையில் வந்தமர்ந்து காற்றாட ஊர்க்கதை, உலக கதை பேசுவார்கள். ஆனால் இப்போதே திண்ணைகளை காண்பதே அரிதாகிவிட்டது.

வீடுகட்டும்போது சிறிய இடம் இருந்தாலும் அதில் கண்ணாடி சில்லுகளை பதித்துவிடுகின்றனர். என்ன சொல்லபோங்க? இதுபோல் பேச்சில் பல அறிவான விஷயங்கள் பகிரப்படுவதுண்டு. ஆனால் இக்கால இளையதலைமுறையினர் பெரும்பாலும்தனிமை விரும்பிகளாகவே உள்ளனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் சாப்பாடு தண்ணீர் கூட தேவையில்லை... இதுபோன்ற தனிமையை விரும்புபவர்கள் பெரிதான சாதனைகளை எதுவும் செய்திடவும் முடியாது...மக்கள் பலம் இருப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை...

alone quotes in tamil


alone quotes in tamil

வயதான காலத்தில் தனிமை என்பது மிகவும் கொடுமையானது. காலம் காலமாய் ஒன்றாய் உடனிருந்த கணவனோ, மனைவியோ என்றாவது ஒரு நாள் தனித்தனியே பிரியத்தான் வேண்டும்.. ஆனால் முன்னால் செல்பவர்களுக்கு பிரச்னையில்லை...பின்னால் செல்பவர்களின் வாழ்க்கை தனிமை கொடுமை கொடுமைதான் போங்க... என்னத்த சொல்ல..

தனிமை குறித்த வாசகங்கள் இதோ.. உங்கள் பார்வைக்கு......

வாழ்க்கையில்நான் நினைத்ததுஎதுவும் எனக்கு கிடைக்காமல்போகும் போதெல்லாம் எனக்குஆதரவாய் வந்து என்னிடம் ஆறுதல் கூறுகிறதுஇந்த "தனிமை".

சந்திப்பு என்று வரும் போது"மகிழ்ச்சி"பிரதானமாகிறதுபிரிவு என்று வரும் போது"குறைகள்" பிரதானமாகிறதுஇருந்தும் இல்லை என்று ஆன போது"தனிமை" பிரதானமாகிறது.

என் மீது கோபம் கொண்டுநாள் முழுவதும் பேசாமல் இருப்பாய்அந்த நேரத்தில் நான் துடித்து போவேன்நீ பேசாமல் இருப்பதற்காக அல்லஎன்னிடம் பேச துடிக்கும்உன் இதயத்தை எண்ணி

தேடி போய் பேசுனா"பொய்" என்றும்விட்டு கொடுத்து பேசுனா"பொய்" என்றும்வெறுக்கும் இடத்தில அன்பு காட்டினாள்"பொய்" என்றும்இனிக்க இனிக்க நடித்து பேசுவதை தான்"உண்மை" என்றும் நம்புகிறதுஇந்த உலகம்.

என்னை யாருக்கும் பிடிக்க வில்லைஎன்று நீ கவலை படுவதற்குநீ சந்தையில் விற்கும் பொம்மை இல்லைஉன்னை பிடித்து,உன்னை வாங்குவதற்கு,உன்னை உனக்கு பிடித்தால் போதும்.நீ....என்பது நீயே...!

alone quotes in tamil


alone quotes in tamil

வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்தூரத்தில் இருந்து பார்த்தல்அழகாக ஒளி மட்டும் தெரியும்அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும்அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது.

எல்லா வலிகளையும் வார்த்தைகளால் சொல்லிபுரிய வைக்க முடியாதுசத்தம் இன்றி மௌனமாகவேஅழுகின்ற ஆயிரம் வழிகள்இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு

என் இதயத்தைதிருடி கொண்ட இதய கள்வனேவிழிகள் இருந்தும்பார்வையற்றவனாக இருளில் தவிக்கிறேன்உன்னை மட்டுமே காணஎன் இமைகள்இமைக்க வேண்டும் என.

கதறி அழுகவும் முடியாமல்கண்ணீர் துளியை அடக்கவும் முடியாமல்கலங்கியபடி வீதியில் நடந்து சென்ற அந்த கனமான நாட்களையாரும் கடக்காமல் இருக்கவே முடியாது.

அனைவரும் இருந்தும்நீ அனாதை போல உணருகிறாய் என்றால்உன் உண்மையான அன்பையாரிடத்திலோ இழந்து இருக்கிறாய்என்று அர்த்தம்.

உனக்கு என்ன தெரியும்? ஏக்கங்களையும்,எதிர்பார்புகளையும்சுமக்கும் என் இதயத்திற்கு தான் தெரியும்ஏமாற்றத்தின் வலி என்னவென்று.

ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீர் துளியை விடஅவர்களை இழக்க கூடாதுஎன்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்குஇன்னும் வலி அதிகம்.

என் மீதுஅளவு கடந்த அன்பைவைத்து இருக்கிறேன்என்று சொன்னவள்இன்று அளவுக்கு மீறிவெறுப்பை மட்டும் காட்டிகாணாமல் போய்விட்டாள்.

"தனிமை"எதை புரிய வைத்ததோ இல்லையோஇவ்வளவு காலம்மிக பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறோம்என்பதை புரிய வைத்தது.

உலகத்துலயேரொம்ப கஷ்டமான தருணம்ரொம்ப கவலையோடு இருக்கும் போதுரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரி நடிக்க்கிறது.

"தனிமை"கொஞ்சம் வித்தியாசமானது தான்நாமாக எடுத்து கொண்டால்அது இனிக்கும்அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும்.

"தனிமை "தனியா இருப்பதன்வழியை வெளி படுத்துகிறது"தனிமை"தனியாக இருப்பதன்மகிமையை வெளிப்படுத்துகிறது.

உரிமையோடுசிலரை உறவென்று நினைத்ததைதவறென்று புரிந்ததுமீண்டும் தனிமையே போதும்என்று விலகி விட்டேன்.

alone quotes in tamil


alone quotes in tamil

விரும்பும் போதுதெரியவில்லை எனக்குஇப்படி வலிகளையும் வேதனைகளையும்வலிமையாக தந்துவிட்டு போவாய் என்று.

தனிமையை உணர்வதற்குயாருடைய பிரிவும் தேவை இல்லைஉணர்வுகளுக்கு மதிப்பளிக்கதெரியாத உறவுகள் போதும்.

இதுவும் கடந்து போகும்என்பதை விடஇதுவும் பழகி போகும்என்பதையே வாழ்க்கைநமக்கு சில சமயங்களில்கற்று தருகின்றன.

ஒரு பெண்ணைஉன்னிடம் அதிகமாக பேசஅனுமதிக்காதே பின்அவள் உன்னை அதிகமாக பேசவைத்து விடுவாள்தனியாக!

மன அமைதிக்கான தனிமை மகிழ்ச்சியானது ஆனால்அன்பு காட்ட யாரும் இல்லாத தனிமைமிகவும் கொடுமையானது.

நாம் தேவை இல்லை என்றுசிலர் நம்மை நினைக்கும் முன்னர்நாமாக விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது.

இன்பத்திலும்துன்பத்திலும்மனம் விட்டு பேசஒருவர் துணை இல்லாத போது தான்உண்மையான அன்பின் பெருமை புரியும்.

உன்னை நிராகரித்தவர்களைஉன்னிடம் பேச த்திருக்கும்நிலையை உருவாக்கு அதுவும்ஒரு வகை வெற்றிதான்.

என் அதிகபட்ச ஆசை எல்லாம்என் மனம் கஷ்டப்படும் போதுஎன் வார்த்தையை கேட்கஒரு துணை வேண்டும் என்பதே.

எனக்கு தனிமை கொஞ்சம்அதிகமாகவே பிடிக்கும்ஏன்னெனில்என் மனதை காயப்படுத்தஅங்கே யாரும் இல்லை.

நாட்கள் வேகமாய் நகருகிறதுஆனால்நான் அப்புடியே தான் இருக்கிறேன்நீ என்னை விட்டு சென்ற இடத்தில்.

எவருக்கும்உன்னை பிடிக்கவில்லை என்றால்நீ இன்னும்நடிக்க கற்று கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

ஆறுதல் சொல்லயாரும் இல்லாமல் அழுது முடித்த பின்வரும் தன்னம்பிக்கை மிக பெரியது.

என்னதான் என்னை நானேசமாதான படுத்தி கொண்டாலும்சில ஏமாற்றங்கள்வலிக்க தான் செய்கிறது.

நான் தனிமையில்இருக்கும் போது எல்லாம்எனக்கு துணையாய்என் நினைவில் வந்துஒட்டி கொள்கிறாய்.

உனக்கு என்ன தெரியும்?உனக்கு என்ன தெரியும்?

நீ பேசாமல் இருக்கையில் புரிந்தது எனக்கு உன் மௌனம் அழகாய் என்னை கொள்ளும் என்று.

அருகில் இருந்து போலியாக உள்ள உறவை விட யாரும் இல்லா தனிமை மேலானது.

தனிமை என்பது மாயை நாம் விரும்பி ஏற்கும் பொழுது தனிமை உணர்வு நீங்கி விடும்.

alone quotes in tamil


alone quotes in tamil

நமக்காக எவரும் இல்லை என்று கவலை படாதே எவருக்கும் நாம் பாரமில்லை என்று சந்தோசப்படு.

என்ன நடந்தாலும் உன்னிடம் கூறியே பழகி விட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல.

பிறரிடம் கூற முடியாத கஷ்டங்களை ஆற்றிட விழிகள் உளற்றெடுக்கும் அருவி தான் கண்ணீர்.

காதல் வரம் கிடைத்தும் இன்னும் தனிமையில் தவம் கிடக்கிறேன் உன்னை கரம் பிடிக்க.

தனிமை என்பது தவிப்பு அது துணையை தேடும் துடிப்பு.

வழிகளை தரும் உறவுகள் வேண்டாம் ஆறுதல் தரும் தனிமையே தரும்.

எவருக்கும் வரக்கூடாத மிக கொடிய நோய் இந்த தனிமை.

பிறப்பதும் தனிமையிலே இறப்பதும் தனிமையிலே.

Tags:    

Similar News