பொங்கலோ ... பொங்கல்.... கூடிக் களிக்கும் பண்டிகை இது.....
Few Lines About Pongal in Tamil-தமிழகத்தின்பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்படஉள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் வெகு ஜரூராக நடந்து வருகிறது.;
Few Lines About Pongal in Tamil
Few Lines About Pongal in Tamil-தமிழகத்தினைப்பொறுத்தவரை அக்காலம் முதல் இக்காலம் வரை பொங்கல் பண்டிகையானது கலாச்சாரம் சிறிதும் பிசகாமல் தமிழர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதாவது ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அதாவது ஆடி மாதத்தில் தேடித்தேடி விதைத்தவிதைகள் அனைத்தும் பயிராகி மார்கழி மாதமான குளிர்மாதத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும். மார்கழி மாத இறுதிக்குள் அதனை அறுவடை செய்து அதனை வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவர். பின்னர் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல் தை மாதப்பிறப்பே நாம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலானது ஆண்டுதோறும் தை மாத பிறப்பு அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டுஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்த காரணத்தினால் யாரும் கூடக்கூடாது என்ற நிபந்தனைக்கேற்ப அவரவர்கள் வீடுகளில் பொங்கல் பண்டிகையினை அக்காலத்தில் அரசு உத்தரவுக்கேற்ப கொண்டாடினார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் நிபந்தனைகளுக்கு தளர்வு அளித்துள்ளதால் ஊர்மக்கள் ஒன்று கூடி இந்த விழாவினை வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். வழக்கமான விதிமுறைகளின்படி பொங்கல்விழாவானது அந்தந்த ஊர்களிலுள்ள விழாக்குழுவின் வழிகாட்டுதலோடு நல்லமுறையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிங்க..பொங்கல் பண்டிகை பற்றி 5 வாக்கியங்களில் சில கருத்துகள் இதோ உங்களுக்காக...
* தைபிறந்தால் வழி பிறக்கும்... என்பதற்கு சான்றாக வருக தை மகளே...வருக.... வருக...தை மகளே வருகவே.....
*தை மாதம் பிறப்புதான் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது உலகம் முழுவதிலும்...
*காலங்கள் மாறினாலும்...பொங்கல் பண்டிகையின் கலாச்சார வழிமுறைகள் மாறவே இல்லையே....
*மார்கழி மாதத்தில் அறுவடை.... அறுவடைசெய்த நெல்லின் அரிசியில் பொங்கல் ....பொங்கலோ பொங்கல்..
*உறவுகள், நண்பர்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் பண்டிகைதாங்க...பொங்கலோ ...பொங்கல்.....
*கடல் கடந்து உள்ளோர்... வேலைக்காக வெளியூரில் உள்ளோர் என அனைவரும் சங்கமிக்கும் பண்டிகை இது...
*4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை... நண்பர்கள், உறவுகளின் சந்திப்புக்கு வழி வகுக்கும் பொங்கல்திருவிழா...
*தீபாவளி என்றாலே பட்டாசு நினைவிற்கு வரும்.. அதுபோல் பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டுதான்....
*வருடம் முழுக்க உழவுத்தொழிலுக்கு உயிர் கொடுத்தவாயில்லா ஜூவன்களுக்கும் தை 2ம் நாள் பெருவிழா...
*குளியலிட்டு....கொம்பு சீவி... புத்தம் புது தாம்புகயிறு.. மூக்கணாங்கயிறு.... விபூதி..குங்குமமிட்டு மாட்டுபொங்கல் ... .மாடுகளுக்கு... வணங்குவோம்...
*வழுக்குமரம், கயிறு இழுக்கும்போட்டி, வண்ண கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், என பல போட்டிகள்
*முதல் நாள் போகியில் பழையன கழிதலும்.. என்பதற்கு உதாரணமாக சுத்தமோ...சுத்தம் போங்க... சுத்தம் செய்யும்பணி...
*இரண்டாவது நாள்... தை மாதப்பிறப்பு... வாசலில் கலர்க்கோலம்... வண்ண வண்ண தோரணங்கள்...பொங்கல்.... திருவிழா...
*புதுப்பானை, புதுச்சட்டை, புதுவேஷ்டி....அனைத்தும் புத்தம் புதுசாய்... குதுாகலத்தில் பொங்கல்...
*ஆண்டுகள் மாறினாலும்...பழமை மாறாமல்கலாச்சாரத்தினை நினைவுகூறும் வகையில் பொங்கல்...
*உறவுகள்...நண்பர்களுக்கு ... பொதுவிருந்து ஏற்பாடுசாதி,. சமயமற்ற நல்லிணக்க இலக்கண பண்டிகை பொங்கல்..
*இருப்பவர்கள் இல்லாதோர்க்கு இயன்றவரை உதவிடும் திருவிழா.... தமிழர்களின் பண்பாட்டுதிருவிழா...
*மூன்றாவது நாள் காணும் பொங்கல்...சகோதரர்களுக்காக கொண்டாடும் கன்னிப்பொங்கல்... பொங்கலோ பொங்கல்..
*உழவு வயலில் இருபுற தோரணம் கட்டி மாடுகளுக்கு மத்தியில் பொங்கலோ பொங்கல்... மாட்டுப்பொங்கல்...
*ஊர் முழுக்க ஒன்று கூடி ஆட்டமும் பாட்டமும்அதுவே ஒற்றுமையை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை...
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2