இந்தியாவில் புத்த சமய நூல்கள் அடங்கிய நூலகம் அமைக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா-ஜப்பான் சம்வாட் மாநாட்டில் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, சம்வாடிற்கு தொடர்ந்து ஆதரவளித்தமைக்கு ஜப்பான் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.பாரம்பரிய பௌத்த இலக்கியங்கள் மற்றும் வசனங்களின் நூலகத்தை உருவாக்க அமைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இதுபோன்ற ஒரு வசதியை இந்தியாவில் உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம், அதற்கான பொருத்தமான ஆதாரங்களை வழங்குவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
அது போல் அனைத்து புத்த மதத்தின் இலக்கியங்களை டிஜிட்டல் நகல்களையும் நூல்களை பல்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். இதனால் புத்த மதத்தின் அனைத்து துறவிகளுக்கும் அறிஞர்களுக்கும் இலவசமாக கிடைக்கச் செய்ய வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.