வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா - பூங்கா மூடல்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பூங்கா மூடப்பட்டது.

Update: 2022-01-16 02:45 GMT

கோப்பு படம் 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா ஊழியர்கள் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த புதன் கிழமை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம்  வெளிவந்த முடிவுகளில் 70 பேருக்கும், நேற்று நடைபெற்ற பரிசோதனையில் 6 பேர் என 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து தனிமை படுத்தி வருகின்றனர். மொத்தம் 350 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த நிலையில் 76 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பூங்கா மூடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News