15-18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி: துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் 15 முதல், 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.;

Update: 2022-01-03 05:45 GMT

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், 15, வயது முதல், 18, வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல், தடுப்பூசி போடப்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அவ்வகையில், தமிழகத்தில் இன்று முதல் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று காலை, முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஒமைக்ரான் வைரசில் இருந்து நாம் அனைவரும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் தற்போது மிரட்டத் தொடங்கி இருக்கிறது.

தொற்று நோயின் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக, முகக்கவசம் விளங்குகிறது. எனவே, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பொது இடத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ள மாநிலமாக, தமிழகம் முதலிடம் பெறவேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News