தமிழகத்தில் இன்று மேலும் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 89 பேருக்கு கொரோனா தொற்று பாதித்த நிலையில், 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.;
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 89 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டது.
அதிகபட்சமாக சென்னையில் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 55,376 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 44 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 493 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.