தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 98 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;
இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 44 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,474 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,16,907ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை.
தற்போது, தமிழகம் முழுவதும் 542 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.